உமறுபுலவர்

 


Bharathiyar

 

அரபு மொழியிலமைந்த முகமதுநபிநாயகம் அவர்களின் வரலாற்றைத் தமிழில் சுவைபடக் கூறும் நூல்“சீறாப்புரணம். இந்நூலின் ஆசிரியரான உமறுப்புலவர் 1642 ம் வருடம் தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் வட்டாரத்திலுள்ள நாகலாபுரத்தில் பிறந்தார் . எட்டையாபுரத்தில் வாழ்ந்தார். தந்தையார் பெயர் செய்யது முகமது அலியார். இவர் எட்டையாபுரபுர அரசவைப் புலவராக விளங்கிய கடிகை முத்து புலவரிடம் கல்வி கற்றார். இவரைவள்ளல் அபுல்காசிம் மரைக்காயர் என்பவர் ஆதரித்தார். இவரது நினைவாக நாகலாபுரத்தில் எழுப்பப்பட்டுள்ள மணிமண்டப்பத்தை நாம் இன்றும் காணலாம். மேலும் இவரது பெயரால் உமறுப்புலவர் தொழிற் பயிற்சி மையம் ஒன்று தமிழக அரசால் ஆரம்பிக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது இக்கிராமம் தூத்துக்குடியிலிருந்து 62 கி.மீ தொலைவில் உள்ளது.


தற்போது தமிழக அரசினால் அமுதகவி உமறுப்புலவருக்கு எட்டையாபுரத்தில் மணிமண்டபம் உருவாக்கப்பட்டள்ளது


இம்மணி மண்டபத்தில் தரைதளத்தில் வழிபாட்டு அறையாகவும் மேல்தளத்தில் நூலகமும் அமையப் பெற்றுள்ளது


இம்மணி மண்டபம் செய்தி மற்றும் மக்கள் தொடர்பு துறையினால் பராமாரிக்கப்பட்டு வருகிறது

அமைப்பு வெளியீடு - மாவட்ட ஆட்சியர் தூத்துக்குடி
ஆக்கம் தேசிய தகவலியல் மையம், தூத்துக்குடி