பின்னால் செல்லவும்

மாவட்ட காசநோய்ப்பு மையம்திருத்தியமைக்கப்பட்ட தேசிய காசநோய் தடுப்புத்திட்டம்
மாவட்ட காசநோய் மையம், தூத்துக்குடி

தலைமை அலுவலகம்

துணை இயக்குநர் மருத்துவப்பணிகள்(காசநோய்)

 

மாவட்ட காசநோய் மையம்,166,வடக்கு பீச் ரோடு,

 

தூத்துக்குடி -628 001 போன் 0461-2331039,2333633

 

 

1. மாவட்ட மக்கள் தொகை                - 17,87,699
2. திட்டம் தொடங்கப்பட்ட நாள்            - 16.05.2001
3. காசநோய் அலகு                       - 4 (5லட்சம் மக்கள் தொகைக்கு ஒன்று என்ற
அடிப்படையில்)         
4. மேம்படுத்தப்பட்ட  சளிபரிசோதனை மையம்    – 22
பின்வருமாறு
முதன்மை ஆரம்ப சுகாதார நிலையம்      - 9   
அரசு மருத்துவமனை                     - 7
மாவட்ட காசநோய் மையம்               - 1
அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை   – 1
அரசு சாரா தொண்டு நிறுவனம்            - 2
தனியார் மருத்துவமனை                  - 2

காசநோய் (டி.பி) என்றால் என்ன?
காசநோய் என்பது காற்றின் மூலம் பரவக்கூடிய ஒரு வகையான தொற்று நோய். காசநோய் பிரதானமாக நுரையீரலை தாக்குகின்றது. காசநோயால் பாதிக்கப்பட்ட ஒருவர் இருமும் போதோ தும்மும் போதோ வெளிவரும் கிருமியானது காற்றில் பரவி அதனை சுவாசிப்பவர்க்கு  நோய் தொற்று ஏற்படுகிறது.
காற்றோட்டம் இல்லாத நெருக்கடி நிறைந்த இடங்களில் காசநோய் கிருமி மிகவும் எளிதாக பரவுகின்றது. ஒருவர்  சத்தான உணவுகளை உண்ணாதபோதும், புகை மற்றும் மது அருந்தும் போதும், போதைப் பொருட்களைப் பயன்படுத்தும் போதும் அவருடைய உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறைகிறது.  இந்த தருணங்களில் காசநோய் கிருமி மிக எளிதாகத் தாக்குகிறது.

காசநோயின் அறிகுறிகள்
1. இருவாரங்களுக்கு மேல் இருமல் 2. மாலை நேர காய்ச்சல்
3. பசியின்மை  4. உடல் எடை குறைதல்  5. நெஞ்சுவலி 6.சளியில் இரத்தம் வருதல்

காசநோய் கண்டுபிடித்தல்

  1. இரண்டு சளிபரிசோதனை மூலம் காசநோயை துல்லியமாக கண்டறியலாம்
  2. தேவைபட்டால் நெஞ்சக எக்ஸ்ரே மூலமும் கண்டறியப்படுகிறது.

நினைவில் கொள்ளவேண்டியவை 

  1. காசநோய்க்கான ஏதேனும் இரண்டு அறிகுறிகள் தென்பட்டாலே  உடனடியாக அரசு மருத்துவ நிலையங்களுக்கு சென்று இரண்டு சளிப்பிசோதனைகள் செய்திடல்வேண்டும்.

 

  1. சளிக்குப்பதிலாக உமிழ்நீரை பரிசோதனைக்குத் தரவேண்டாம்
  2. காசநோய்க்கான பரிசோதனையும் “டாட்ஸ்” சிகிச்சையும் முற்றிலும் இலவசமாக அளிக்கப்படுகின்றன.

 

சிகிச்சை காலம் மற்றும் சிகிச்சை முறை

காசநோய் என கண்டறியப்படுபவர் ஆறு மாதம் முதல் எட்டு மாதம் வரை இடைவிடாமல் டாட்ஸ் சிகிச்சையை தொடர்ந்து எடுத்துக்கொண்டால் நோயிலிருந்து பூரண குணமடையலாம்.
“டாட்ஸ்“ என்றால் நேரடிப்பாவையில் வழங்கப்படும் குறுகிய கால சிகிச்சை முறையாகும். “டாட்ஸ்” உலக அளவில் ஏற்றுக்கொள்ளப்பட்ட தரமான சிகிச்சை முறையை உள்ளடக்கியது. .

அனைத்து அரசு மருத்துவமனை / ஆரம்ப சுகாதார நிலையங்களில் இலவசமாக காசநோய் கண்டறியப்பட்டு “டாட்ஸ்” சிகிச்சையின் மூலம் மருந்துகள் இலவசமாகவே வழங்கப்படுகின்றது.

கிராம சுகாதார செவிலியர்கள் மூலம் அங்கன்வாடி மையத்தில் வைத்து அதன் பணியாளர்களால் காசநோயாளிகளுக்கு நேரடி பார்வையின் கீழ் (டாட்ஸ்) மருந்துகள் வழங்கப்படுகின்றன. இப்பணியானது முதுநிலை சிகிச்சை மேற்பார்வையாளர் / முதுநிலை காசநோய் ஆய்வக மேற்பார்வையாளர்களால் கண்காணிக்கப்படுகின்றது.

 மருந்துகள் உட்கொண்ட இரண்டு, மூன்று வாரங்களில் குணமடைவது போல் தோன்றும். ஆனால் காசநோய் கிருமிகள் மிகவும் வலிமை பெற்றுள்ளதால் அவை முற்றிலும் அழிக்கப்படும் வரை தொடர்ந்து ஆறு முதல் எட்டு மாதங்கள் மருந்து உட்கொள்ளவேண்டும். எக்காரணம் கொண்டும் மருத்துவர் மற்றும் மேற்பாவையாளர் ஆலோசனையின்றி சிகிச்சையை  இடையில் நிறுத்தக்கூடாது.

       சிகிச்சையை இடையில் நிறுத்தினாலோ அல்லது முழுமையாக எடுத்துக் கொள்ளாவிட்டாலோ வீரியமிக்க இன்னல் தரக்கூடிய எம்.டி.ஆர் காசநோய் உருவாகி மரணத்தை ஏற்படுத்தும். காசநோயிலிருந்து பூரண குணமடைய நோயாளியின் ஒத்துழைப்பு மிகவும் அவசியம்.

உழவர் பாதுகாப்புத் திட்டம்
இத்திட்டத்தின் கீழ், அரசு மருத்துவ நிலையங்களில் சிகிச்சை பெறும் காசநோயாளிகளுக்கு, அவர் சிகிச்சையை முறையாக எடுத்துக்கொள்ளும் பட்சத்தில் மாதம் தோறும் ரூ.1000 உதவித் தொகையாக (சிகிச்சை பெறும் காலத்திற்கு மட்டும்) தமிழக அரசால் வழங்கப்படுகின்றது.
இத்திட்டத்தில் பயன்பெற கீழ்க்கண்ட தகுதிகளை பெற்றிருக்க வேண்டும்.

  1. தமிழக அரசால் வழங்கப்பட்ட உழவர் பாதுகாப்புத்திட்ட உறுப்பினர் அடையாள அட்டை பெற்றிருத்தல் வேண்டும்.
  2. காசநோயாளிகள் திருத்தியமைக்கப்பட்ட தேசிய காசநோய் தடுப்புத்திட்டத்தில்

சிகிச்சை பெற வேண்டும்

  1. முதிர்ந்தோர் உதவித்தொகை பெறாதவர்களாக இருத்தல் வேண்டும்.
  2. பயனாளிகளின் வயது 18 – 65க்குள் இருத்தல் வேண்டும்.
  3. சளியில் கிருமியுள்ள காசநோயாளிகளாக இருத்தல் வேண்டும் (அல்லது)

எச்.ஐ.வி தொற்றுள்ள காசநோயாளிகளாக இருத்தல் வேண்டும்.(அல்லது)
நுரையீரல் நீங்கிய ஏனைய பகுதிகளில் காசநோய் பாதிப்பு தீவிரமாக இருத்தல் வேண்டும்.

 

 

 

காசநோய் கண்டறிதலை தெரிவித்தல்

காசநோய் கண்டறிதல் மற்றும் சிகிச்சை முறையானது அனைத்து மருத்துவ நிலையங்களிலும் ஒரே மாதியாக நடைபெறவேண்டும் என்ற எண்ணத்தில் இந்திய அரசின் சுகாதார மற்றும் குடும்ப நலத்துறையின் சார்பில் அரசாணை வெளியிடப்பட்டது.  No.Z-28015/2/2012 நாள் 7 / 5 / 2012. இவ்வாணையின் மூலம் காசநோய் கண்டறியும் எந்த ஒரு தனியார் மற்றும் அரசு சாரா மருத்துவ நிலையங்களும் அரசிற்கு உடனடியாக தகவல் தெரிவித்திட வேண்டும்.
எனவே, மாவட்டத்தில் உள்ள காசநோய் சிகிச்சை அளிக்கும் அனைத்து தனியார் மற்றும் அரசு சாரா மருத்துவ நிறுவனங்கள், காசநோயினை எந்த வடிவத்தில் கண்டறிந்தாலும் அதனை மாவட்ட காசநோய் அலுவலர், மாவட்ட காசநோய் மையம், 166 வடக்கு கடற்கரை சாலை, தூத்துக்குடி என்ற முகவரிக்கு தவறாது தெரிவித்திடவேண்டும்.

இரத்த சம்பந்தப்பட்ட காசநோய் பரிசோதனைக்கு தடை
உலக சுகாதார நிறுவனத்தின் பரிந்துரையின் பேரில், காசநோயை கண்டறிய சளிபரிசோதனை மற்றும் கல்ச்சர் பரிசோதனையே அங்கீகரிக்கப்பட்டது எனவும் ஏனைய இரத்த சம்பந்தப்பட்ட பரிசோதனையாவும் தடைசெய்யப்பட்டுள்ளதாக இந்திய அரசிதழில் கடந்த ஜீன் 2012ல் வெளியிடப்பட்டுள்ளது. (பகுதி II – பரிவு 3 – துனைப்பிவு I , எண் 264)
ஆகவே, தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள அனைத்து தனியார் /  அரசு சாரா மருத்துவ துறையினரும் காசநோயை கண்டறிய இரத்த சம்பந்தப்பட்ட பரிசோதனைகளை மேற்கொள்ள கூடாது என அறிவுறுத்தப்படுகிறார்கள்.

 

காசநோய் அலகு மற்றும் சளிபரிசோதனை மைய விபரம்


(அ) தூத்துக்குடி காசநோய் அலகு

மாவட்ட காசநோய் மையம்

தூய இருதய மருத்துவமனை

அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை

தூய வளனார் தொழுநோய் மருத்துவமனை

புதுக்கோட்டை, அரசு ஆரம்ப சுகாதார நிலையம்

ஏ.வி.எம் மருத்துவமனை

வல்லநாடு, அரசு ஆரம்ப சுகாதார நிலையம்

சுந்தரம் அருள் ராஜ் மருத்துவமனை

 

 

(ஆ) கீழஈரால் காசநோய் அலகு

(இ) கடம்பூர் காசநோய் அலகு

கீழஈரால்   அரசு ஆரம்ப சுகாதார நிலையம்

கடம்பூர், அரசு ஆரம்ப சுகாதார நிலையம்

நாகலாபுரம், அரசு ஆரம்ப சுகாதார நிலையம்

ஒட்டப்பிடாரம்,அரசு மருத்துவமனை

விளாத்திகுளம், அரசு மருத்துவமனை

கோவில்பட்டி, அரசு மருத்துவமனை

எட்டயபுரம், அரசு மருத்துவமனை

 

(ஈ) தென்திருப்பேரை காசநோய் அலகு

தென்திருப்பேரை, அரசு ஆரம்ப சுகாதார நிலையம்

திருச்செந்தூர் அரசு மருத்துவமனை

ஏரல், அரசு ஆரம்ப சுகாதாரநிலையம்

ஸ்ரீவைகுண்டம், அரசு மருத்துவமனை

மெஞ்ஞானபுரம், அரசு ஆரம்ப சுகாதாரநிலையம்

முதலூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையம்

காயல்பட்டிணம், அரசு மருத்துவமனை

 

 

 

 

 

 

திட்ட குறியீடு (சதவீதத்தில்)

1. வெளிநோயாளிகளில் காசநோய் அறிகுறி இருப்பின்,சளிபரிசோதனைக்கு அனுப்புதல் – 2% - 3%
2. நுண்ணோக்கி மையத்தில் சளியில் கிருமியுள்ளோரை கண்டுபிடித்தல்                - 10
3. அனைத்து வகையான காசநோயாளிகளில் குறைந்தபட்ச கண்டறிதல்                - 90
4. சளியில் கிருமியற்ற நிலைக்கு மாறுதல்                                          - 90
5. i) புதிய காசநோயாளிகள் முழு கால சிகிச்சையை முடித்தல்                        - 90
ii) பழைய காசநோயாளிகள் முழு கால சிகிச்சையை முடித்தல்                      - 85

 

வருடம்

நுண்ணேக்கி மைய செயலாக்கம்

சிகிச்சை முறை செயலாக்கம்

சளிபரிசோதனை செய்யப்பட்டோர்

பரிசோதிக்கப்பட்ட சளியில் கிருமியுள்ள காசநோயாளிகள்

சதவீதம்

பதிவு செய்யப்பட்ட அனைத்து காசநோயாளிகள்

பதிவு செய்யப்பட்ட நோயாளிகளில்   சளியில் கிருமியுள்ள  புதிய காசநோயாளிகள்

குணமடைந்தோர் சதவீதம்

இறப்பு சதவீதம்

சிகிச்சை இடைநிறுத்தியோர் சதவீதம்

எம் டி ஆர் டிபி என கண்டறியப்பட்ட காசநோயாளிகள் 

2009

13457

1333

10

2686

944

87

6

4

0

2010

12400

1308

11

2473

959

86

5

5

4

2011

12657

1206

10

2391

864

84

8

6

15

2012

12251

1279

10

2166

934

85

6

6

25

2013 மார்ச் வரை

3121

334

11

431

225

83

7

9

6

 

 

காசநோயற்ற சமுதாயத்தை உருவாக்குவது நமது கடமை.

       தீவிரக் கண்காணிப்பு மற்றும் சிறந்த திட்ட மேலாண்மையின் மூலமே காசநோயைக் கட்டுப்படுத்த இயலும்.
அமைப்பு வெளியீடு - மாவட்ட ஆட்சியர் தூத்துக்குடி
ஆக்கம் தேசிய தகவலியல் மையம், தூத்துக்குடி