பின்னால் செல்லவும

தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ)  

 

அலுவலக முகவரி

:

மாவட்ட மேலாளர் அலுவலகம்
தாட்கோ
மாவட்ட ஆட்சியர் அலுவலக 3-வது தளம்
கோரம்பள்ளம்
தூத்துக்குடி 628101

தொலைபேசி எண்

:

0461-2341281

கைபேசி எண்

 

9445029482

 

வ.
எண்

தி்ட்டத்தின் பெயர்

இலக்கு

மான்யம் ஒதுக்கீடு ரூ.(லட்சத்தில்)

குழு
எண்ணிக்கை

நபர்கள்

1

மகளிருக்கான நிலம் வாங்குதல் (ம) மேம்படுத்துதல் திட்டம்

 

5

11.40

2

தனிநபர் தொழில் முனைவோர்க்கான திட்டம்

 

38

86.44

3

இளைஞர்களுக்கான சுயவேலைவாய்ப்புத் திட்டம்

 

17

38.00

4

இளம் மருத்துவர்களுக்கான சுயவேலைவாய்பபுத் திட்டம்

 

4

8.55

5

சுயஉதவி குழுக்கான சுழல்நிதி திட்டம்

102

1,224

25.47

6

சுயஉதவி குழுக்கான பொருளாதாரக் கடனுதவி திட்டம்

38

456

95.00

7

விவசாயத்திற்கான விரைந்து மின்இணைப்பு பெறும் திட்டம்

 

38

3.80

 

ஆகமொத்தம்

140

1,782

268.66

 

பயன்பெற வழிமுறை மற்றும் தகுதிகள் :

     அனைத்து திட்டங்களிலும் பயன்பெறுவதற்கு இந்து ஆதிதிராவிடர் வகுப்பைச் சார்ந்தவராகவும் , 18 வயது நிரம்பிய 55 வயதிற்குட்பட்டவராக இருத்தல் வேண்டும். குடும்ப ஆண்டு வருமானம் ரூ.1.00 லட்சத்திற்கு மிகாமல் இருத்தல் வேண்டும்.  தொழில் முனைவோர் சிறப்புத் திட்டத்தில் பெட்ரோல் மற்றும் சில்லரை விற்பனை நிலையம் அமைப்பதற்கு மட்டும் குடும்ப ஆண்டுவருமானம் ரூ.3.00 லட்சத்திற்கு மிகாமல் இருத்தல் வேண்டும்.  விண்ணப்பிப்பவர்கள் அனைவரும் துர்த்துக்குடி மாவட்டத்திற்குள் வசிப்பவராகவும் , தொழில் செய்பவராகவும் இருத்தல் வேண்டும்.  குடும்ப அட்டையின்படி யாரேனும் ஒரு உறுப்பினரே , ஒருமுறை மட்டுமே பயன்பெற இயலும். விண்ணப்பிப்பவர்கள் இதர அரசு/ நிறுவனங்களின்  மூலம் பயன்பெற்றிருப்பின் பயன்பெற இயலாது.

     தொழில் முனைவோர் திட்டம், இளைஞர்களுக்கான சுயவேலைவாய்ப்புத் திட்டம் ஆகிய திட்டங்களின்கீழ் விண்ணப்பிப்பவர்கள் கால்நடை. மளிகை கடை, வாடகை பாத்திரக்கடை, வாடகை சோ்கடை, ஒலிபெருக்கிகடை, காய்கறி பழங்கள் விற்பனை கடை, தென்னை மற்றும் பனைஒலை முடைதல் மற்றும் கரிமூட்டம் அமைத்தல் போன்ற தொடர்வருவாய் ஈட்டுதலை உறுதி செய்ய இயலாத எதிர்பார்ப்புக்கு ஏற்றாற்போல் சமூக மாற்றங்களை ஏற்படுத்தாத மேற்கண்ட திட்டங்களை தவிர்த்து , இதர திட்டங்களின் கீழ் ரூ.1.50 லட்சம் மதிப்பீட்டிற்கு குறையாமல் உள்ள திட்டங்களின் கீழ் பயன்பெறலாம். 

     வாகனக் கடன் விரும்புவோர் ஒட்டுநர் உரிமம் மற்றும்  பேட்ஜ் இருத்தல் வேண்டும்  விண்ணப்பதாரர் கோரும் தொழிலுக்குரிய விண்ணப்பத்தினை இணையதளத்தில் www.tahdco.tn.gov.in  என்ற முகவரியில் படியிறக்கம் செய்து பூர்த்தி செய்யப்பட்டு இருபிரதிகளில் புகைப்படம் ஒட்டி  சாதி, வருமானச்சான்று , குடும்ப அட்டை நகல், கோரும் தொழிலுக்கான விலைப்புள்ளி, திட்டஅறிக்கை, இடம் குறித்த ஆவணம் மற்றும் கோரும் தொழில் தொடர்புடைய அரசு அனுமதி ஆணைகள் /சான்றுகள் இணைக்கப்பட வேண்டும்.

     மகளிர் நிலம் வாங்கும் திட்டத்தின்கீழ் சிறு குறு பெண் விவசாயிகள் மட்டும் விண்ணப்பிக்கலாம்.  நிலமானது  ஆதிதிராவிடர் அல்லாதவர்களிடம் கிரையம் பெறவேண்டும்.   நிலம் வாங்கும்பொழுது, வாங்கும் நிலத்திற்ககு முத்திரைதாள் மற்றும் பதிவுக்கட்டணம் 100 சதவீதம் விலக்கு அளிக்கப்படுகிறது. விண்ணப்பிப்பவர்கள் மற்றும் குடும்பத்தினர் சொந்தமாக நிலம் வைத்திருந்து கடந்த 5 ஆண்டுகளில் எவருக்கும்் மாற்றியோ  விற்பனை செய்திருக்க கூடாது. நிலஅபிவிருத்தி திட்டத்தில் கிணறு,ஆழ்துளை கிணறு மற்றும் மின்இணைப்பு பெறுவதற்கு மட்டும் அனுமதிக்கப்படும்.

விவசாயத்திற்கான துரிதமின்இணைப்பு வழங்கும் திட்டத்தின்கீழ் மின்சார வாரியத்தில் பதிவு செய்ததின் ரசீதுநகல் , காத்திருப்போர்க்கான தகவல் சீட்டு ஆகியனவும் இணைத்தல் வேண்டும். 

     இதர விபரங்களுக்கு மேலே கண்ட முகவரியில் அலுவலக  நாட்களில் மற்றும் நேரத்தில் அறிந்து கொள்ளலாம்.

 

மாவட்ட மேலாளர்(பொ)
தாட்கோ, தூத்துக்குடி.
அமைப்பு வெளியீடு - மாவட்ட ஆட்சியர் தூத்துக்குடி
ஆக்கம் தேசிய தகவலியல் மையம், தூத்துக்குடி