பின்னால் செல்லவும்

முதலமைச்சரின் சூரிய ஒளி மின்சக்தியுடன் கூடிய பசுமை வீடுகள் திட்டம்
தமிழ்நாடு சட்டமன்றக் கூட்டத்தில் ஊரக ஏழைகளுக்கு வீடுகள் கட்ட 03.06.2011-ல் மாண்புமிகு முதலமைச்சupன் சூupய ஒளி மின்சக்தியுடன் கூடிய பசுமை வீடு திட்டம் ” அறிவிக்கப்பட்டது. ஒரு வீட்டிற்கான அலகுத் தொகை ரூ.1.80 ஆகும். வீட்டின் பரப்பளவு சுமார் 300 சதுர அடி ஆகும். இத்திட்டம் 2011-12லிருந்து நடைமுறைக்கு வரும். அடுத்த 5 ஆண்டுகளுக்கு இத்திட்டம் அமுலில் இருக்கும்.
இத்திட்டத்தின் கீழ் ஒதுக்கீடு செய்யப்படும் வீடுகளை இதர பிரிவினர் / ஆதி திராவிடர் / பழங்குடியினருக்கு முறையே 70:29:1 என்ற விகிதத்தில் வீடுகள் ஒதுக்கீடு செய்யப்படும்.

 

பயனாளிகள் கிழ்க்கண்ட விதிமுறையினை பின்பற்றி தேர்வு செய்யப்படும்.

 1. இந்திரா நினைவு குடியிருப்புத் திட்ட காத்திருப்போர் பட்டியலில் இருந்து ஏழைகளிலும் ஏழையை தேர்வு செய்ய வேண்டும்.
 2. கணவனால் கைவிடப்பட்டோர், விதவை, மாற்று திறனாளிகளுக்கு முன்னுாிமை அளிக்க வேண்டும். மேலும், எச்.ஐ.வி / எய்ட்ஸ் / காசநோயினால் பாதிக்கப்பட்டவர்கள் (துணை இயக்குநாிடம் சான்று பெற வேண்டும்), தீ, வெள்ளம் போன்ற சீற்றங்களினால் பாதிக்கப்பட்டவர்களுக்கும் முன்னுரிமை அளிக்க வேண்டும்.

தகுதிகள்

  • ஊராட்சி பகுதியில் குடியிருக்க வேண்டும்.
  • வறுமைக்கோட்டின் நிரந்த காத்திருப்போர் பட்டியலில் பயனாளியின் பெயர் இடம் பெற்றிருக்க வேண்டும்.
  • 300 சதுர அடிக்கு குறையாமல் இடம் இருக்க வேண்டும்.
  • குடும்பத் தலைவர் பெயரில் (அ) குடும்ப உறுப்பினர் பெயரில் தெளிவான பட்டா இருக்க வேண்டும்.
  • வேறு எங்கும் அல்லது ஊராட்சியில் கான்கிரீட் வீடு இருக்க கூடாது.
  • வேறு வீடு கட்டும் அரசு திட்டத்தில் பயனடைந்திருக்கக் கூடாது.

அமைப்பு வெளியீடு - மாவட்ட ஆட்சியர் தூத்துக்குடி
ஆக்கம் தேசிய தகவலியல் மையம், தூத்துக்குடி