பின்னால் செல்லவும்

தமிழ்நாடு குக்கிராமங்கள் கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டம் (தாய்)ஊரக வளர்ச்சித் துறைத் திட்டங்களைச் செயல்படுத்துவதில், கிராம ஊராட்சியில் உள்ள குக்கிராமங்களைச் செயலாக்க அலகாக எடுத்துத் திட்டங்களைச் செயல்படுத்த தமிழக அரசு முடிவு செய்துள்ளது. குக்கிராம அளவில் திட்டமிடுதல் மூலம் கிராமங்களுக்கும், நகர்ப்புறங்களுக்கும் உள்ள வேறுபாட்டினைக் குறைக்க இயலும். நகர்ப்புறங்களில் உள்ள வசதிகள் அனைத்தும் கிராமப்புறங்ளில் கிடைத்திடவும், பல்வேறு எண்ணிக்கையிலான குக்கிராமங்களைக் கொண்ட கிராம ஊராட்சிகளுக்குச் சமமான அளவில் நிதி ஒதுக்கீடு செய்யவும், குறைந்தபட்ச அடிப்படை உட்கட்டமைப்பு வசதிகள் அனைத்து குக்கிராமங்களுக்கும் சென்றடையும் வகையிலும் ஒரு முன்னோடி திட்டமாக ”தமிழ்நாடு குக்கிராமங்கள் கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டம்” (தாய்) என்னும் புதிய திட்டம் அறவிக்கப்பட்டுள்ளது.

 

தாய் திட்டத்தின் முக்கியமான நோக்கம் அனைத்து குக்கிராமங்களுக்கும் அடிப்படை வசதிகளை ஏற்படுத்துவது ஆகும்.   இத்திட்டத்தினை சரியான வகையில் செயல்படுத்துவதற்கும், கிராமங்களின் அடிப்படைத் தேவைகளின் தற்போதைய நிலையினை அறிவதற்கும் குக்கிராமங்களின் அடிப்படை தேவைகள் குறித்து கணக்கெடுக்கும் குழுவினால் கணக்கெடுப்பு நடத்தப்படுகிறது. இந்த கணக்கெடுப்புக் குழு ஊராட்சியிலுள்ள அனைத்து குக்கிராமங்களுக்கும் நேரில் சென்று கணக்கெடுப்பு நடத்தும்.

 

கணக்கெடுப்பு குழுவில் பின்வரும் உறுப்பினர்கள் இடம் பெறுவர்

 

வ. எண்.

அலுவலக உறுப்பினர்கள்

மக்கள் பிரதிநிதிகள்

1.

துணை வட்டார வளர்ச்சி அலுவலர்

ஊராட்சித் தலைவர்

2.

ஒன்றிய மேற்பார்வையாளர்

 

3.

ஊராட்சி உதவியாளர்

 

 

குக்கிராமங்களின் அடிப்படைத் தேவைகளைக் கண்டறிவது எவ்வாறு என்பது பற்றியும், கணக்கெடுப்பு குழு எவ“வாறு கணக்கெடுப்பு நடத்துவது என்பது பற்றியும், திட்ட இயக்குநர், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை, செயற்பொறியாளர் (ஊ.வ) மற்றும் சம்பந்தப்பட்ட தொகுதி அலுவலர்களால் கணக்கெடுப்பு குழுவினர்களுக்கு 09.09.2011 மற்றும் 10.09.2011ஆம் தேதிகளில் பயிற்சி நடத்தப்பட்டது.

 

கணக்கெடுப்பு சரியான முறையில் எடுத்து முடிக்கப்பட்டவுடன், குக்கிராமங்களின் முதன்மைத் தேவை கண்டறியப்பட்டு இத்திட்டத்தின் கீழ் பணிகள் செயல்படுத்தப்படும்.


அமைப்பு வெளியீடு - மாவட்ட ஆட்சியர் தூத்துக்குடி
ஆக்கம் தேசிய தகவலியல் மையம், தூத்துக்குடி