பின்னால் செல்லவும்

சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டுத் திட்டம்சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டுத் திட்டம் மாநில அரசால் செயல்படுத்தப்படும் திட்டமாகும். சட்டமன்ற தொகுதிக்கு தேவையான உட்கட்டமைப்பு வசதிகளில் உள்ள முக்கிய இடைவெளிகளை நிரப்புவதே இத்திட்டத்தின் முக்கிய முக்கிய நோக்கமாகும். இத்திட்டத்தின் கீழ், ஒவ்வொரு சட்டமன்ற உறுப்பினரும், தனது தொகுதியில் செய்யப்பட வேண்டிய மேம்பாட்டு பணிகளை தேர்ந்தெடுத்து பாிந்துரைப்பார். பாிந்துரைக்கப்படும் பணிகளுக்கு மாவட்ட ஆட்சியர் நிர்வாக அனுமதி வழங்குவார். ஒவ்வொரு சட்டமன்ற தொகுதிக்கும் ரூ.2 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது.

 

அங்கன்வாடி கட்டிடங்கள், சத்துணவு மையங்கள், சத்துணவுமைய சமையல் கட்டிடங்கள், நகர்ப்புற மற்றும் கிராமப்புற பகுதிகளில் பழுதடைந்த நிலையில் உள்ள கட்டிடங்களுக்குப் பதிலாக புதிய கட்டிடங்கள் படிப்படியாக எடுத்துக் கொள்ளப்பட வேண்டும்.


அ) ரூ.20   இலட்சம் ஊரகம் மற்றும் நகர்ப்புறங்களிலுள்ள அங்கன்வாடி கட்டிடங்கள், சத்துணவுமைய கட்டிடங்கள், சத்துணவு சமையல் கூடங்கள் ஆகிய பணிகளுக்கு ஒதுக்கீடு செய்ய வேண்டும்.


ஆ) ரூ.5.00 இலட்சம் மாற்றுத் திறனாளிகளுக்கு உதவிகள் செய்ய மற்றும் கருவிகள் வாங்க ஒதுக்கீடு செய்யப்பட வேண்டும்.


இ) ரூ.25.00 இலட்சம் பள்ளிகளுக்குத் தேவையான கட்டமைப்பு வசதிகள் கழிப்பறைகள் மற்றும் குடிநீர்வசதி செய்து கொடுக்க ஒதுக்கீடு செய்யப்பட வேண்டும்.

 

சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டுத் திட்டம்


அ) ஊரகப் பகுதிகளில்


1. சூரிய ஒளி தெரு விளக்குகள் பொருத்துதல்
2. சரளை மற்றும் கப்பிச் சாலைகளை தார்ச்சாலையாக மேம்படுத்துதல்
3. மிகவும் பழுதடைந்துள்ள தார்ச்சாலைகளைப் புதுப்பித்தல் (தேவையின் அடிப்படையில் தார்ச்சாலையில் உள்ள பள்ளங்களை நிரப்பி தார்ச்சாலைப்பணி மட்டும் மேற்கொள்ளல்)
4. சிமெண்ட் கான்கிரீட் சாலைகள் அமைத்தல்
5. அரசு மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் மருத்துவ மனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு கால் நடை மருத்துவமனைகள் ஆகியவற்றிற்கு கட்டடம் மற்றும் சுற்றுசுவர் கட்டிக் கொடுத்தல் மற்றும் அரசு பள்ளிகள், ஊராட்சி ஒன்றியப் பள்ளிகள், ஆதிதிராவிடர் நலப் பள்ளிகள், கள்ளர் சீரமைப்பு பள்ளிகள், அரசுக் கல்லூரிகள் மற்றும் அரசு தங்கும் விடுதிகள் ஆகியவைகளுக்கு கட்டடம் மற்றும் சுற்றுசுவர் கட்டி கொடுத்தல்
6. மாற்று திறனாளிகளுக்காக அரசு நடத்தும் சிறப்பு பள்ளிகள் மற்றும் அரசு அனாதை விடுதிகள் ஆகியவைகளுக்கு உட்கட்டமைப்பு வசதிகள் செய்து கொடுத்தல்.
7. பாலங்கள் கட்டுதல்
8. சுடுகாடு / இடுகாடுகளில் அடிப்படை கட்டமைப்பு வசதி இல்லாத கிராம ஊராட்சிகளில் அடிப்படை கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்துதல்.
9. இந்திரா நினைவு குடியிருப்புத் திட்ட விதிமுறைகளின் அடிப்படையில் புதிய வீடுகள் கட்டுதல்

 

ஆ) நகர்ப்புற பகுதிகளில்


1) 1 முதல் 7 வரை ஊரகப் பகுதிகளில் உள்ளவாறு
8) சுடுகாடு / இடுகாடுகளில் அடிப்படைக் கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்துதல்
9) தேவையின் அடிப்படையில் மழைநீர் வடிகாலுடன் கூடிய சிமெண்ட் கான்கிரீட் நடைபாதைகள் அமைத்தல்
10) புதிய பொது பூங்காக்கள் அமைத்தல்
11) பொது கழிப்பிடங்கள் கட்டுதல்
12) ஜெட்ராடிங் இயந்திரங்கள் மற்றும் ஹைட்ராலிக் விசையால் இயக்கப்படுகின்ற கழிவு நீர் வாய்க்கால்கள் தூர்வாரும் இயந்திரங்கள் வாங்குதல்.


அமைப்பு வெளியீடு - மாவட்ட ஆட்சியர் தூத்துக்குடி
ஆக்கம் தேசிய தகவலியல் மையம், தூத்துக்குடி