பின்னால் செல்லவும்

சமூக பாதுகாப்பு திட்டம்
பதவியின் பெயர்

:

தனித்துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்புத் திட்டம்),
தூத்துக்குடி

 

முகவரி   

:

மாவட்ட ஆட்சியர் அலுவலகம், தூத்துக்குடி -628101

 

தொலைபேசி எண்

:

0461-2340983

 

 

I. சமூக பாதுகாப்புத் திட்டம்

தூத்துக்குடி மாவட்டத்தில் கீழ்க்கண்ட எட்டு சமூகபாதுகாப்புத் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றது.

 1. இந்திராகாந்தி தேசிய முதியோர் உதவித் தொகை
 2. இந்திராகாந்தி தேசிய விதவை உதவித் தொகை
 3. இந்திராகாந்தி தேசிய மாற்றுத்திறனாளிகள் உதவித் தொகை
 4. ஆதரவற்ற விதவை உதவித் தொகை
 5. ஆதரவற்ற விவசாயத் தொழிலாளர் உதவித் தொகை
 6. கணவனால் கைவிடப்பட்ட மற்றும் ஆதரவற்ற மனைவியருக்கான உதவித் தொகை
 7. மாற்றுத்திறனாளிகள் உதவித் தொகை
 8. திருமணமாகாத 50 வயதை கடந்த ஏழை மகளிர் உதவித் தொகை

 

அரசாணை எண் 41, சமூக நலம்  மற்றும் சத்துணவு (எஸ்.டபிள்யூ 6-1 துறை நாள் 17.05.2011) ன்படி மாதாந்திர ஓய்வூதியம் ரூ.500/- லிருந்து ரூ.1000/- ஆக உயர்த்தப்பட்டுள்ளது.  தூத்துக்குடி மாவட்டத்தைப் பொறுத்த வரையில் 31.12.2011 அன்று கீழ்க்கண்ட விபரப்படி மொத்தம் 36649 பயனாளிகள் மாதாந்தோறும் ரூ.1000/- உதவித் தொகை பெற்று வருகின்றனர்.

 

 

வ.எ

திட்டத்தின் பெயர்

பயனாளிகளின் எண்ணிக்கை

செலவு

1

இந்திராகாந்தி தேசிய முதியோர் உதவித் தொகை

22512

23637600

2

இந்திராகாந்தி தேசிய விதவை உதவித் தொகை

5141

5398050

3

இந்திராகாந்தி தேசிய மாற்றுத்திறனாளிகள் உதவித் தொகை

1212

1272600

4

கணவரால் கைவிடப்பட்டோர் உதவித் தொகை

1770

1858500

5

ஆதரவற்ற விவசாய தொழிலாளர் உதவித் தொகை

129

135450

6

ஆதரவற்ற விதவை உதவித் தொகை

4211

4421550

7

மாற்றுத்திறனாளிகள் உதவித் தொகை

1482

1556100

8

திருமணமாகாத 50 வயதை கடந்த ஏழை மகளிர் உதவித் தொகை

188

197400

 

மொத்தம்

36645

38477250

 

மேற்படி மாதாந்திர உதவித் தொகை பெறும் பயனாளிகளுக்கு மாதம் 4 கிலோ அரிசியும், தீபாவளி மற்றும் பொங்கலுக்கு இலவசமாக வேட்டி மற்றும் சேலை வழங்கப்படுகிறது.

தூத்துக்குடி மாவட்டத்தில் ஆகஸ்ட் 2010 முதல், மாதாந்திர ஓய்வூதியம் மின்னணு அஞ்சல் பணவிடை மூலம் அனுப்பப்பட்டு வருகிறது.

தூத்துக்குடி மாவட்டத்தில் 31.12.2011 அன்று, திட்ட வாரியாக மற்றும் வட்ட வாரியாக உதவித் தொகை பெறும் பயனாளிகள் விபரம் பின்வருமாறு

 

 

வ.எ

வட்டத்தின் பெயர்

இந்திராகாந்தி தேசிய முதியோர் உதவித் தொகை

ஆதரவற்ற விதவை உதவித் தொகை

கணவரால் கைவிடப்பட்டோர் உதவித் தொகை

ஆதரவற்ற விவசாயத் தொழிலாளர் உதவித் தொகை

மாற்றுத்திறனாளிகள் உதவித் தொகை

திருமணமாகாத 50 வயதை கடந்த ஏழை மகளிர் உதவித் தொகை

இந்திராகாந்தி தேசிய விதவை உதவித் தொகை

இந்திராகாந்தி தேசிய மாற்றுத்திறனாளிகள் உதவித் தொகை

1

தூத்துக்குடி

2052

705

234

0

323

16

222

207

2

ஸ்ரீவைகுண்டம்

2816

476

264

21

153

8

333

159

3

கோவில்பட்டி

4543

924

303

29

272

54

1771

127

4

எட்டையபுரம்

1398

112

55

9

88

13

456

96

5

ஓட்டப்பிடாரம்

3054

642

328

0

159

6

377

196

6

விளாத்திகுளம்

2487

316

158

47

178

34

560

164

7

சாத்தான்குளம்

2202

430

167

23

78

32

663

129

8

திருச்செநதூர்

3960

606

261

0

231

25

759

134

 

மொத்தம்

22512

4211

1770

129

1482

188

5141

1212

 

 

திட்டங்களில் பயன்பெற தகுதிகள் விபரம்

 

I. இந்திராகாந்தி தேசிய முதியோர் உதவித் தொகை


60 வயதிற்கு மேற்பட்டிருக்க வேண்டும்.  பயனாளியின் பெயர், வறுமைக்கோட்டு பட்டியலில் இடம் பெற்றிருக்க வேண்டும்.  எவ்வகையிலும் வருமானம் பெற வழியில்லாதிருக்க வேண்டும்.  பயனாளி உழைக்கும் திறன் உள்ளவராக இருக்கக் கூடாது.  பிச்சை எடுப்பதை தொழிலாக கொண்டிருக்க கூடாது.   ரூ.5000/- மதிப்புக்கு மேற்பட்ட சொத்து எதையும் சொந்தமானதாக கொண்டிருத்தல் கூடாது.

2. இந்திராகாந்தி தேசிய மாற்றுத்திறனாளிகள் உதவித் தொகை


பயனாளியின் வயது 18லிருந்து 59 வயதிற்குள் இருக்க வேண்டும்.  ஊனத்தின் தன்மை 80% க்கு அதிகமாக இருக்க வேண்டும்.  பயனாளியின் பெயர் வறுமைக்கோட்டு பட்டியலில் இடம் பெற்றிருக்க வேண்டும்.  எவ்வகையிலும் வருமானம் பெற வழியில்லாதிருக்க வேண்டும்.  பிச்சை எடுப்பதை தொழிலாக கொண்டிருக்க கூடாது.  ரூ.5000/- மதிப்புக்கு மேற்பட்ட சொத்து எதையும் சொந்தமானதாக கொண்டிருத்தல் கூடாது.

 

3. இந்திராகாந்தி தேசிய விதவை உதவித் தொகை


பயனாளியின் வயது 40லிருந்து 59 வயதிற்குள் இருக்க வேண்டும்.  மறுமணம் செய்திருத்தல் கூடாது. எவ்வகையிலும் வருமானம் பெற வழியில்லாதிருக்க வேண்டும்.  பயனாளியின் பெயர் வறுமைக்கோட்டு பட்டியலில் இடம் பெற்றிருக்க வேண்டும்.  ரூ.5000/- மதிப்புக்கு மேற்பட்ட சொத்து எதையும் சொந்தமானதாக கொண்டிருத்தல் கூடாது.

 

4. ஆதரவற்ற விதவை உதவித் தொகை


பயனாளியின் வயது 18 மற்றும் 18க்கு மேற்பட்டவராக இருத்தல் வேண்டும்.  மறுமணம் செய்திருத்தல் கூடாது.  வருமானம் ஏதுமின்றி வயது வந்த மகன்கள் இருந்தாலும் ஓய்வூதியம் வழங்கலாம்.  வருமானம் ஏதுமின்றி வாழ்பவராக இருக்க வேண்டும்.  ரூ.5000/- மதிப்புக்கு மேற்பட்ட சொத்து எதையும் சொந்தமானதாக கொண்டிருத்தல் கூடாது.

 

5. மாற்றுத்திறனாளிகள் உதவித் தொகை


பயனாளியின் வயது 18 மற்றும் 18க்கு மேற்பட்டவராக இருத்தல் வேண்டும்.  ஊனத்தின் தன்மை 60% க்கு மேல் இருத்தல் வேண்டும்.  வருமானம் இல்லாதவராக இருத்தல் வேண்டும்.  ரூ.5000/- மதிப்புக்கு மேற்பட்ட சொத்து எதையும் சொந்தமானதாக கொண்டிருத்தல் கூடாது. 

 

6. ஆதரவற்ற விவசாயத் தொழிலாளர் உதவித் தொகை


பயனாளியின் வயது 60 வயதிற்கு மேற்பட்டவராக இருத்தல் வேண்டும்.  எவ்வகையிலும் வருமானம் பெற வழியில்லாதிருக்க வேண்டும்.  பிச்சை எடுப்பதை தொழிலாக கொண்டிருக்க கூடாது.  ரூ.5000/- மதிப்புக்கு மேற்பட்ட சொத்து எதையும் சொந்தமானதாக கொண்டிருத்தல் கூடாது.

 

7. கணவனால் கைவிடப்பட்ட ஆதரவற்ற மனைவியருக்கான உதவித் தொகை


பயனாளியின் வயது 30 மற்றும் அதற்கு மேற்பட்டவராக இருத்தல் வேண்டும்.  தமிழ்நாட்டில் நிலையான முகவரியை உள்ளவராக இருத்தல் வேண்டும்.  முறையான திருமணம் ஆனவராக இருத்தல் வேண்டும்.  குறைந்தது 5 வருடங்கள் பிரிந்து வாழ்பவராக இருத்தல் வேண்டும்.  எவ்வகையிலும் வருமானம் பெற வழியில்லாதிருக்க வேண்டும்.  ரூ.5000/- மதிப்புக்கு மேற்பட்டட சொத்து எதையும் சொந்தமானதாக கொண்டிருத்தல் கூடாது.

 

8. திருமணமாகாத ஏழை மகளிர் உதவித் தொகை


பயனாளி 50 வயதை நிறைவு செய்து திருமணமாகாத பெண்ணாக இருத்தல் வேண்டும்.  எவ்வித வருமானமோ அல்லது பிழைப்பூதியத்திற்கான ஆதரவு வழியோ பெற்றிருத்தல் கூடாது.  பிச்சை எடுப்பதை தொழிலாக கொண்டிருக்க கூடாது.  ரூ.5000/- மதிப்புக்கு மேற்பட்ட சொத்து எதையும் சொந்தமானதாக கொண்டிருத்தல் கூடாது. 


இலங்கை அகதிகளுக்கான சிறப்புத் திட்டம்


தூத்துக்குடி மாவட்டத்தில் தூத்துக்குடி மற்றும் எட்டையபுரம் வட்டங்களில் உள்ள இலங்கை அகதிகள் முகாம்களில் வசிக்கும் இலங்கை அகதிகளுக்கும் தமிழக அரசால்  முதியோர் உதவித் தொகை, விதவை உதவித் தொகை, மாற்றுத்திறனாளிகள் உதவித் தொகை மற்றும் கணவரால் கைவிடப்பட்டோர் உதவித் தொகை வழங்க நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.

 

II. முதலமைச்சரின் உழவர் பாதுகாப்புத் திட்டம்


இத்திட்டத்தின் கீழ், கீழ்க்கண்ட ஐந்து வழிகளில் நிதி உதவிகள் செய்ய வழிவகை உள்ளன. 

 1. உறுப்பினர்களின் திருமணம்
 2. உறுப்பினர்களின் குழந்தைகள் திருமணம்
 3. முதியோர் உதவித் தொகை
 4. இயற்கை மரணம் – ஈமச்சடங்கிற்கான நிதியுதவி
 5. விபத்து மரணம் – ஈமச்சடங்கிற்கான நிதியுதவி
 6. கல்வி உதவித் தொகை

 


அமைப்பு வெளியீடு - மாவட்ட ஆட்சியர் தூத்துக்குடி
ஆக்கம் தேசிய தகவலியல் மையம், தூத்துக்குடி