பின்னால் செல்லவும்

 

அனைவருக்கும் கல்வி இயக்கம்
தூத்துக்குடி மாவட்டம்

திட்டச் செயல்பாடுகள்

 • புதிய பள்ளிகள்

1 கி.மீ சுற்றள்ளவில் பள்ளிகள் இல்லாத 300க்கும் மேற்பட்ட மக்கள் தொகை கொண்ட குடியிருப்புகளில் தொடக்கப்பள்ளிகள் தொடங்குதல்
3 கி.மீ சுற்றளவில் நடுநிலைப்பள்ளிகள் இல்லாத 500க்கும் மேற்பட்ட மக்கள் தொகை கொண்ட குடியிருப்புகளில் உள்ள அரசு தொடக்கப் பள்ளிகளில் ஒன்றினை நடுநிலைப்பள்ளியாகத் தரம் உயர்த்துதல்

 • ஆசிரியர்கள் ஊதியம்

புதிய தொடக்கப்பள்ளிகளுக்கு இரு ஆசிரியர்கள் நியமித்தல்
தரம் உயர்த்தப்பட்ட நடுநிலைப்பள்ளிகளுக்கு மூன்று ஆண்டுகளில் மூன்று பட்டதாரி ஆசிரியர்களை நியமித்தல்

 • கட்டிடப்பணிகள்

புதிய தொடக்கப் பள்ளிகளுக்கு இரு வகுப்பறைக் கட்டிடம் மற்றும் தரம் உயர்த்தப்பட்ட நடுநிலைப்பள்ளிகளுக்கு மூன்று வகுப்பறைக் கட்டிடம் கட்டி வழங்குதல். தேவையின் அடிப்படையில் பள்ளிகளைத் தெரிவு செய்து மாணவரின் பயன்பாட்டிற்காக பொதுக் கழிவறை, பெண்கள் கழிவறை, மாற்றுத் திறனுடைய குழந்தைகளுக்கான சிறப்பு கழிவறைகள், தலைமையாசிரியர் அறை, சுற்றுச் சுவர், கூடுதல் வகுப்பறைக் கட்டிடம், சாய்தளம், கைப்பிடி சாய்தளம் ஒவ்வொரு ஆண்டும் வழங்கப்படுகிறது.

 

 • பள்ளி செல்லாக் குழந்தைகள் கல்வி

1 முதல் 8ம் வகுப்பு வரை உள்ள இடைநின்ற மாணவர்களுக்கு உண்டு உறைவிட முகாம், இணைப்பு மையம், குறுகிய காலம் மற்றும் நீண்ட காலம் இவற்றில் ஏதேனும் ஒன்றின் மூலம் சிறப்புப் பயிற்சி அளிக்கப்பட்டு, பள்ளிப்படிப்பை தொடரச் செய்தல். தூத்துக்குடி மாவட்டம் பள்ளி செல்லாக் குழந்தைகளுக்கு முறையான கல்வி அளிப்பதில் மூன்றாம் இடம் வகிக்கிறது.

 • மாற்றுத்திறனுடைய குழந்தைகளுக்கான உள்ளடங்கிய கல்வி
 • மாற்றுத்திறனுடைய குழந்தைகளும் மற்ற குழந்தைகளுடன் இணைந்து பள்ளிகளில் கல்வி பயில வழி செய்தல்
 • பள்ளிக்கு செல்ல இயலாத மாற்றுத்திறனுடைய குழந்தைகளுக்கு வீட்டிலேயே சிறப்பு ஆசிரியர்கள் மூலம் தசைப் பயிற்சி மற்றும் கல்வி அளித்தல்
 • இக்குழந்தைகளுக்கு வட்டார வளமையங்களில் உள்ள ஆதார வளமையங்கள் மூலம் பயிற்சி அளித்தல்
 • மனவளர்ச்சி குன்றிய குழந்தைகளுக்கு சிறப்பு உண்டு உறைவிடப் பள்ளியில் தேவையான வசதிகள் மற்றும் பயிற்சி அளித்தல்
 • மாற்றுத்திறனுடைய குழந்தைகளுக்கு பகல் நேர பாதுகாப்பு மையங்களில் பயிற்சி அளித்தல்
 • மருத்துவ முகாம்கள் மூலம் உதவிகள் தேவைப்படும் மாற்றுத்திறனுடைய குழந்தைகள் கண்டறியப்பட்டு, அவர்களுக்கு உபகரணங்கள் மற்றும் அறுவை சிகிச்சை வழங்குதல்
 • மானியம்

அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு வருடத்திற்கு ஒரு முறை பள்ளி மானியம் வழங்குதல். அரசுப் பள்ளிகளுக்கு மட்டும் வருடத்திற்கு ஒரு முறை பராமரிப்பு மானியம் வழங்குதல்.
புதிய தொடக்கப் பள்ளிகள் மற்றும் தரம் உயர்த்தப்பட்ட நடுநிலைப்பள்ளிகளுக்கு கற்றல் கற்பித்தல் உபகரண மானியம் வழங்குதல். அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு வருடத்திற்கு ஒரு முறை ஆசிரியர் கற்றல் கற்பித்தல் உபகரண மானியம் வழங்குதல்.

 • சிறப்பு செயல்பாடுகள்
 • பெண் குழந்தைகள், சிறுபான்மையினர் மற்றும் தாழ்த்தப்பட்ட இனத்தைச் சார்ந்த மாணவ மாணவிகளுக்கு கல்விச் சுற்றுலா, சிறப்பு பயிற்சி மற்றும் உபகரணங்கள் அளித்தல்
 • கணினி வழிக் கல்வி மையங்கள் மூலம் கணினிகள், புரோஜக்டர்கள் வழங்கி கணினி  வழிக் கல்வியை மேம்படுத்துதல் மற்றும் ஆசிரியர்களுக்கு கணினி பயிற்சி அளித்தல்
 • தரம் உயர்த்தப்பட்ட அங்கன்வாடி மையங்களுக்கு சிறிய கணித உபகரணப் பெட்டி மற்றும் விளையாட்டு உபகரணங்களும், சிறிய மேசை மற்றும் நாற்காலியும் வழங்கப்பட்டுள்ளது. அங்கன்வாடி மையப்பணியாளர்களுக்கு பயிற்சி வழங்குதல்
 • தரமான கல்வி

புதிய கற்றல் கற்பித்தல் முறைகளை நடைமுறைப்படுத்துதல்
அரசு மற்றும் உதவி பெறும் பள்ளிகளில் 1 முதல் 8ம் வகுப்பு வரை கற்பிக்கும் ஆசிரியர்களுக்கு வருடத்திற்கு 20 நாட்கள் கற்றல் கற்பித்தல் பயிற்சி அளித்தல்
2012 – 2013 ம் ஆண்டு சாதனைகள்

 • 1197 பள்ளி செல்லாக் குழந்தைகள் கண்டறியப்பட்டு மாற்றுப்பள்ளி மையங்களில் சிறப்பு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது
 • 13 மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு 412 மாற்றுத்திறனுடைய குழந்தைகள் உதவி உபகரணங்களுக்காகவும் 4 குழந்தைகள் அறுவை சிகிச்சைக்காகவும் தேர்தெடுக்கப்பட்டு அதில் 1 குழந்தைக்கு மட்டும் அறுவை சிகிச்சை முடிந்துள்ளது.

2012 – 2013ம் ஆண்டில் நடைபெற்று வரும் பள்ளிகள்
கட்டிடப்பணிகள்


வ.எண்.

பணி வகை

ஒதுக்கீடு நிதி (ரூபாய் இலட்சத்தில்)

எண்ணிக்கை

அலகு தொகை

மொத்தம்

1

குடிநீர் வசதி

1

0.28

0.28

2

பொதுக் கழிப்பறை வசதி

56

1.00

56.00

 
மாற்றுத்திறனுடைய குழந்தைகளுக்கான உள்ளடங்கிய கல்வி – 2012 - 13


மையத்தின் வகை

மையங்களின் எண்ணிக்கை

பயிற்சி பெறும் குழந்தைகளின் எண்ணிக்கை

செலவினம் (31.3.2013 வரை) (ரூபாய் இலட்சத்தில்)

பகல் நேர பாதுகாப்பு மையம்

13

247

24.742

 

பங்கேற்ற குழந்தைகளின் எண்ணிக்கை

அடையாள அட்டை பெற்ற குழந்தைகள் எண்ணிக்கை

உதவி உபகரணத்திற்கு தேர்வு செய்யப்பட்ட குழந்தைகள் எண்ணிக்கை

அறுவை சிகிச்சைக்கு தேர்வு செய்யப்பட்ட குழந்தைகள் எண்ணிக்கை

செலவீனம் (ரூபாய் இலட்சத்தில்)

மருத்துவ முகாம்

1277

217

90

4

2,03,700

 • பெண் கல்வி, தாழ்த்தப்பட்ட  பழங்குடியினர் மற்றும் சிறுபான்மையின மாணவ மாணவிகளுக்கான சிறப்பு கல்வித் திட்டம்

பள்ளி செல்லாக் குழந்தைகளுக்கான சிறப்புக் கல்வித் திட்டம்
2012 – 13ம் ஆண்டு


மையத்தின் வகை

மையங்களின் எண்ணிக்கை

மாணவர் எண்ணிக்கை

செலவினம் (ரூபாய் இலட்சத்தில்)

உண்டு உறைவிட முகாம்

4

224

41.658

சிறப்பு பயிற்சி மையங்கள் (12 மாதங்கள்)

27

346

16.057

சிறப்பு பயிற்சி மையங்கள் (6 மாதங்கள்)

7

69

1.809

கல்வி உபகரணப் பெட்டி
முன் பருவக் கல்வி பயிலும் மாணவர்கள் பயன்பெறத்தக்க வகையில் 254 அங்கன்வாடி மையங்களுக்கு சிறிய கணித கருவிப்பெட்டி ரூ.5,671 இலட்சங்கள் செலவில் டான்சி நிறுவனத்தின் மூலம் வழங்கப்பட்டுள்ளது.
இலவச கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் 2009  செய்யும் பொருட்டு

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அரசுப்பள்ளிகளுக்கு 2012 – 2013ம் கல்வியாண்டில் 56 பொது கழிவறைகளும், 1 குடிநீர் வசதியும் ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் துவக்கப்பட்டுள்ளன

 

அமைப்பு வெளியீடு - மாவட்ட ஆட்சியர் தூத்துக்குடி
ஆக்கம் தேசிய தகவலியல் மையம், தூத்துக்குடி