பின்னால் செல்லவும்

சிறுசேமிப்பு


அலுவலக தலைமை அலுவலர் பதவி

:

உதவி இயக்கநர்(சிறுசேமிப்பு)

முகவரி

:

மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக வளாகம்.
கோரம்பள்ளம்.
தூத்துக்குடி – 628 101.

தொலைபேசி : 0461-2340293

துறையின் பணி்:

சிறுசேமிப்புத் திட்டங்க மகளிர் முகவர், தரமானமுகவர் மற்றும் பொது சேமநலநிதி முகவர் வழிஙாக செயல் படுத்துதல்.

செயல்படுத்தப்படும் சிறுசேமிப்புத் திட்டங்கள்

சிறுசேமிப்புத்திட்டங்கள் மகளிர்முகவர், தரமான முகவர் மற்றும் பொது சேமநல முகவர்கள் மூலம் செயல்படுத்தப்படுகிறது. முகவர்கள் நாடும் ஆதரவின் போரில் தொகை செலுத்துபவர்கள் தங்கள் நிதியை அஞ்சலகங்களில் வைப்புத்தொகையாக முதலீடு செய்கிறார்கள். சிறுசேமிப்பு திட்டங்கள் விபரம் பின்வருமாறு.

1. சிறுசேமிப்புத்திட்டங்கள் விபரம்

வ.எ

திட்டத்தின்
பெயர்

வட்டி விகிதம்

முதிர்வடையும்
காலம்

குறைந்தபட்ச முதலீடு

வாரிசுதாரார் வசதி

1.

அஞ்சலக மாதாந்திர வருவாய்த் திட்டம்

8.2%   (01.12.2011 முதல்)

5 ஆண்டுகள்

குறைந்தபட்சம்: ரூ. 1500/–
அதிகபட்சம்: தனி கணக்கு – ரூ. 4.5 லட்சம். இணை கணக்கு – ரூ. 9லட்சம்.

உண்டு

2.

தேசீய சேமிப்பு பத்திரம்(எட்டாவது)

8.2 %  கூட்டு வட்டி (01.12.2011 முதல்)

5 ஆண்டுகள்

குறைந்தபட்சம்: ரூ. 100/–
அதிகபட்சம்: வரம்பு இல்லை.

உண்டு

3.

தேசீய சேமிப்பு பத்திரம்(ஒன்பதாவது)

கூட்டு வட்டி (01.12.2011 முதல்)

10 ஆண்டுகள்

குறைந்தபட்சம் : ரூ. 100/-
அதிகபட்சம் : வரம்பு இல்லை.

உண்டு

4.

பொது சேமநல நிதி

8.6%  கூட்டு வட்டி (01.12.2011 முதல்)

15 ஆண்டுகள்

குறைந்தபட்சம்: ரூ.500/-  அதிகபட்சம்: ரூ.1,00,000/-

உண்டு

5.

அஞ்சலக தொடர் வைப்பு

8.00%  கூட்டு வட்டி (01.12.2011 முதல்)

5 ஆண்டுகள்

குறைந்தபட்சம்: ரூ.10/-  அதிகபட்சம் :  வரம்பு இல்லை

உண்டு

6.

அஞ்சலக கால வைப்பு

7.70%
7.80%
8.00%
8.30%
கூட்டு வட்டி (01.12.2011 முதல்)

1 ஆண்டுகள்
2 ஆண்டுகள்
3 ஆண்டுகள்
5 ஆண்டுகள்

குறைந்தபட்சம்: ரூ.200/-
அதிகபட்சம்: வரம்பு இல்லை.

உண்டு

7.

அஞ்சலக சேமிப்புக் கணக்கு

4.00%

 

குறைந்தபட்சம்: ரூ.50/-(ரூ.200/– காசோலை வசதிக்காக)
அதிகபட்சம்: வரம்பு இல்லை

உண்டு

8.

முத்த குடிமக்களுக்கான திட்டம்

9.00%

5 ஆண்டுகள்

குறைந்தபட்சம் :1000/-
அதிகபட்சம் : ரூ. 15 லட்சம்.

உண்டு

தூத்துக்குடி மாவட்டம்

2.சிறுசேமிப்பு முகவர்கள் பற்றிய விவரங்கள்

வ.எண்

ஊராட்சி ஒன்றியத்தின் பெயர்

மகளிர் முகவர்கள் எண்ணிக்கை (30.11.11 நிலவரப்படி)

தரமான முகவர்கள் எண்ணிக்கை (30.11.11 நிலவரப்படி)

பொதுசேமநல நிதி முகவர்கள் எண்ணிக்கை (30.11.11 நிலவரப்படி)

1.

தூத்துக்குடி

192

125

5

2.

கயத்தார்

18

13

-

3.

திருவைகுண்டம்

34

10

-

4.

கருங்குளம்

17

15

-

5.

சாத்தான்குளம்

64

16

-

6.

திருச்செந்தூர்

58

27

-

7.

உடன்குடி

38

10

-

8.

விளாத்திகுளம்

34

6

-

9.

ஆழ்வார்திருநகரி

41

17

1

10.

கோவில்பட்டி

106

34

-

11.

புதூர்

28

3

-

12.

ஓட்டபிடாரம்

31

13

-

 

மொத்தம்

661

289

6

முகவர்கள் நியமனம் , புதுப்பித்தல் மற்றும் ஊக்கத்தொகை

வழங்குதல் தொடர்பான அறிவுரைகள்.

2. முகவர் நியமனம் மற்றும் புதுப்பித்தல்

முகவர்

நியமன, புதுப்பித்தல் அலுவலர்

கல்வித்
தகுதி

தேசிய சேமிப்பு பத்திரம் பிணையம் செய்ய வேண்டியது

புதுப்பிக்கும் கால அளவு

அனுமதிக்கப்படும்
அஞ்சலகம்

பரிவர்த்தனை செய்ய அனுமதிக்கப்படும் தொகை

ரத்து செய்வதற்கு வழங்க வேண்டிய ஆவணம்

தரமான முகவார் (பெண்கள் மற்றும் ஆண்கள்)

உ.இ(சி.சே) மற்றும் வ.வ.அ(வ.ஊ)

எஸ்.எஸ்.எல்.சி

ரூ.2000/-

3 ஆண்டுகளுக்கு ஒரு முறை

மாவட்டத்திலுள்ள ஒரு தலைமை அஞ்சலகத்தின் கீழ் இயங்கும் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட ஆஞ்சலகங்களில் பரிவர்வத்தனை அனுமதிக்கலாம்.

ஒரு பரிவர்த்தனையில் ரூ.1000/- மட்டும்.

1.உபயோகப்படுத்தாத ரசீது புத்தகம்.
2. அஞ்சலகத்திலிருந்து பெறப்பட்ட ஒப்படைப்புச் சான்று.

மகளிர்
முகவர்
(பெண்கள் மட்டும்)

உ.இ(சி.சே)

8-வது(ஊரகம்)

ரூ.100/-

3 ஆண்டுகளுக்கு ஒரு முறை

ஓரே ஒரு அஞ்சலகம் மட்டும் (தலைமை அஞ்சலகம், துணை அஞ்சலகம்)

ஒரு வரிவர்த்தனையில் ரூ.5000- மட்டும்

 1. பயன்படுத்தாத அஸ்லாஸ் அட்டைகள்.
 2. அசல் நியமன சான்று.

எஸ்.எஸ்.எல்.சி

ரூ.1000/-

3 ஆண்டுகளுக்கு ஒரு முறை

ஓரே ஒரு அஞ்சலகம் மட்டும் (தலைமை அஞ்சலகம், துணை அஞ்சலகம்)

ஒரு வரிவர்த்தனையில் ரூ.10000/- மட்டும்

 1. பயன்படுத்தாத அஸ்லாஸ் அட்டைகள்.
 2. அசல் நியமன சான்று.

பொது சேமநல நிதி (பெண்கள் மற்றும் ஆண்கள்)

உ.இ.(சி.சே)

எஸ்.எஸ்.எல்.சி

ரூ.1000/-

3 ஆண்டுகளுக்கு ஒரு முறை

எல்லா அஞ்சலகங்கள் மற்றும் பொது சேமநல நிதி பரிவர்த்தனை அங்கிகரிக்கப்பட்ட வங்கிகள்.

காசோலையாக மட்டும்.

அசல் நியமனச் சான்று.

முகவர் நியமனத்திற்கு விண்ணப்பிப்பவர்கள் உரிய படிவத்தில் மாநில அரசு அரசிதழ் பதிவு பெற்ற அலுவலர் இருவரிடமிருந்து பெறப்பட்ட நன்னடத்தைச் சான்று, சம்பந்தப்பட்ட காவல்துறையிடமிருந்து பெறப்பட்ட குற்றமில்லா சான்று, ஒப்பந்தபத்திரம் 2-நகல்கள் மற்றும் வாரிசுதாரர் நியமனப்படிவம் 3-நகல்கள் மற்றும் உரிய தொகைக்கு தேசிய சேமிப்புப்பத்திரம் ஆகியவற்றுடன் விண்ணப்பிக்க வேண்டும்.

 

உதவி இயக்குநர்(சிறுசேமிப்பு) அலுவலகத்தில் முகவர்கள் நியமனம் மற்றும் புதுப்பித்தலுக்கான பதிவேடுகள் பராமரித்தல் வேண்டும். ஒவ்வொரு முகவருக்கும் தனிப்பக்கம் ஒதுக்கீடு செய்து நாளது தேதி வரை பராமரித்தல் வேண்டும். உதவி இயக்குநர்(சிறுசேமிப்பு) அலுவலகத்தில் தரமான முகவர்களுக்கான நியமன உத்தரவுகளை வட்டார வாரியாக பராமரித்தல் வேண்டும். உதவி இயக்குநர்(சிறுசேமிப்பு) அலுவலகத்தில் தரமான முகவர்களுக்கான நியமன உத்தரவுகளை வட்டார வாரியாக பராமரித்தல் வேண்டும். முகவர்கள் நியமனம் மற்றும் ரத்து தொடர்பான மாவட்டத்தின் மாதாந்திர அறிக்கை பிரதி மாதம் 15-ம் தேதிக்குள் இயக்குநரகத்திற்கு அனுப்பிடல் வேண்டும்.

3. தரகுத்தொகை மற்றும் ஊக்கத்தொகை

வ.எ.

முகவர் பெயர்

மத்திய அரசிடமிருந்து வழங்கப்படும் தரகுத்தொகை

மாநில அரசிடமிருந்து வழங்கப்படும் ஊக்கத்தொகை

1.

தரமான முகவர்

1%  (30.11.11 வரை)
0.5%
(01.12.2011 முதல்)

பெறப்படும் தரகுத்தொகையில் 50

2.

மகளிர் முகவர்

4

2

3.

பொது சேமநல நிதி

1 % (30.11.11 வரை)
(01.12.2011 முதல் தரகுத்தொகை இல்லை)

இல்லை.

ஊக்கத்தொகை கோருதல்

நிதியாண்டு அடிப்படையில் ஊக்கத்தொகை கோரப்படுகிறது. முகவர்கள் அவர்களது வசதிக்கேற்ப மாதாந்திரம், காலாண்டு, அரையாண்டு, ஆண்டு அடிப்படையில் ஊக்கத்தொகை கோரலாம். இருப்பினும் ஒரு நிதியாண்டுக்கான ஊக்கத்தொகை கோரிக்கை தொடர்ந்து வரும் செப்டம்பர் 30-ம் தேதிக்குள் மாவட்ட ஆட்சியரின் அலுவலக சிறுசேமிப்புப்பிரிவிற்கு வந்திருத்தல் வேண்டும். முகவர்களுக்கான ஊக்கத்தொகை கருவூல மின்னனு பரிவர்த்தனை மூலம் சம்பந்தப்பட்ட முகவர்களுக்கு வழங்கப்படும்.

ஊக்கத்தொகை கோரிக்கைகள் முகவர்களிடமிருந்து உரிய படிவத்தில் கீழ்கண்ட இணைப்புகளுடன் வந்திருத்தல் வேண்டும்.

தரமான முகவர்

 • அஞ்சலக தலைவரிடமிருந்து பெற்ற தரகுத்தொகை வழங்கியதற்கான சான்று (கிளை அஞ்சலகத்தில் இருந்து பெறப்படுமாயின் துணை அஞ்சலகத்தலைவர் மேலொப்பம் பெறப்பட வேண்டும்).
 • முதலீடு விபரம்.
 • இரண்டு பற்றொப்பம் (ஊக்கத்தொகை ரூ.5000-க்கு மேல் இருப்பின் முத்திரை வில்லையும்).
 • நியமனம் மற்றும் ஊக்கத்தொகை கோரும் காலத்திற்கான புதுப்பித்தல் உத்தரவு நகல்.

 

மகளிர் முகவர்

 • அஞ்சலகத்தலைவரிடமிருந்து பெறப்பட்ட தரகுத்தொகை வழங்கியதற்கான சான்று (கிளை அஞ்சலகத்தில் இருந்து பெறப்படுமாயின் துணை அஞ்சலகத்தலைவர் மேலொப்பம் பெறப்பட வேண்டும்).
 • தொகை செலுத்தியமைக்கான அட்டவணை நகல்கள் (அஸ்லாஸ் – 6)
 • இரண்டு பற்றொப்பம்(ஊக்கத்தொகை ரூ.5000/-க்கு மேல் இருப்பின் முத்திரை வில்லையும்)
 • நியமனம் மற்றும் ஊக்கத்தொகை கோரும் காலத்திற்கான புதுப்பித்தல் உத்தரவு நகல் உத்தரவு நகல்.

 

முகவர்களிடமிருந்து ஊக்கத்தொகை கோரிக்கைகள் வரப்பெற்றவுடன் மாவட்ட ஆட்சியரக உதவி இயக்குநர்(சிறுசேமிப்பு) பிரிவில் உரியபடிவத்தில் பராமரிக்கப்படும் முகவர் ஊக்கத்தொகை கோரிக்கை பெறப்படும் பதிவேட்டில் கோரிக்கை பெறப்பட்டவுடன் வாரிசையாக பதிவு செய்யப்பட்டு அதனடிப்படையிலேயே தீர்வு செய்யப்படுகிறது.

ஒவ்வொரு மாத இறுதியிலும் வரப்பெற்ற ஊக்கத்தொகை கோரிக்கைகள், கோரிக்கைகள் தீர்வு செய்யப்பட்டமை மற்றும் நிதி தேவை குறித்து முந்தைய ஆண்டுக்கும் நடப்பு ஆண்டுக்குமான அறிக்கை பிரதி மாதம் 10-ம் தேதிக்குள் சிறுசேமிப்புத்துறை இய்ககுநரகத்திற்கு அனுப்பப்பட வேண்டும்.

கடந்த இரண்டு ஆண்டுகளாக சிறுசேமிப்பு வசூலுக்கு அரசால் குறியீடு ஏதும் நிர்ணயம் செய்யப்பட வில்லை. 200-11ஆம் நிதி ஆண்டில் தூத்துக்குடி மாவட்டத்தில் 19322.96-லட்சம்(மொத்தம்) சிறுசேமிப்ப வசூல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அமைப்பு வெளியீடு - மாவட்ட ஆட்சியர் தூத்துக்குடி
ஆக்கம் தேசிய தகவலியல் மையம், தூத்துக்குடி