பின்னால் செல்லவும்

புதுவாழ்வு திட்டம்


துறையின் பெயர்

:

“ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்துராஜ் துறை”

அலுவலகத் தலைவர்

:

மாவட்ட திட்ட மேலாளர்

முகவரி

:

58 சி ராமைய்யா நகர், முதல் தெரு, மந்தித்தோப்பு ரோடு,

கோவில்பட்டி   - 628 501.

தொலைபேசி எண்

:

0461 – 220027

மின்னஞ்சல் முகவரி

:

tutpvds(at)yahoo(dot)in


புதுவாழ்வு திட்டம் (இதற்கு முன் வாழ்ந்து காட்டுவோம் திட்டம் என்று அழைக்கப்பட்டது.)

 

துறை விவரம்

அறிமுகம்

புதுவாழ்வு திட்டமானது உலக வங்கி நிதி உதவியுடன் ஆற்றல் மேம்படுத்தி வறுமை ஒழிக்கக்கூடிய திட்டமாக தமிழக அரசின் ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து துறை மூலம் செயல்படுத்தப்படுகிறது. இத்திட்டம் ரூ.717 கோடி மதிப்பீட்டில் ஆறு ஆண்டுகளுக்கு செயல்படுத்தப்படுகிறது. இத்திட்டம் 15 மாவட்டங்களில் 70 ஊராட்சி ஒன்றியங்களில் 2517 கிராம ஊராட்சிகளில் துவங்கப்பட்டுள்ளது. இத்திட்டம் நவம்பர் 2005ல் துவங்கப்பட்ட போதிலும் ஆகஸ்ட் 2006 முதல் தீவிரமாக செயல்படத் துவங்கியது.

 

திட்டத்தின் நோக்கம்:

வாழ்வாதரத்தை மேம்படுத்தி வறுமையை ஒழிப்பதன் மூலம் ஏழை மக்களின் ஆற்றல் மேம்பாடு அடைவதற்காக-

 1. ஏழை எளிய மக்களின் நலனுக்காக செயல்படும் மக்கள் அமைப்புகளை கிராமங்கள் அளவில் உருவாக்குதல்
 2. மக்களின் திறன்களை வளர்ப்பதற்கு வழிகாட்டுதல்
 3. வாழ்வாதார மேம்பாட்டிற்கு மக்களுக்கு தேவையான தொழில்களில் நிதி உதவியுடன் முதலீடு செய்து சந்தைப்படுத்துதல்

இலக்கு மக்கள் :

ஏழை குடும்பங்கள், மாற்றுத் திறனுடையோர் மற்றும் ஒதுக்கப்பட்டோரை உள்ளடக்கிய மிகவும் நலிவுற்றோர் இத்திட்டத்தின் மூலம் பயனடைவர்.

 

திட்டத்தின் கொள்கைகள்

இத்திட்டத்தின் அனைத்து செயல்பாடுகளும் மறுக்க இயலாத கோட்பாடுகளை அடிப்படையாகக் கொண்டது. அவையாவன

 1. மிகவும் ஏழை மற்றும் மாற்றுத் திறனாளிகளை திட்டத்தி்ல் இணைத்தல் – திட்ட நிதியில் 90 விழுக்காடு அனைத்து ஏழைகளுக்கும், நலிவுற்றோருக்கும் கிடைத்திட வழிசெய்தல்
 2. பின்தங்கிய பெண்களுக்கு சரிவிகித அளவில் திட்ட பயன்
 3. பங்கேற்பு – அனைத்து முடிவுகளும் குறைந்தது 60 விழுக்காடு ஏழை மக்களின் பங்கேற்புடன் எடுத்தல்
 4. திட்ட அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் வழிநடத்துதல் முறையிலேயே செயல்படுவர்
 5. திட்டத்தின் அனைத்து நிலைகளிலும் வெளிப்படைத் தன்மை மற்றும் பொறுப்புணர்வு உறுதி செய்யபப்டுகிறது.

நிறுவன ஏற்பாடுகள்

திட்டத்தினை செயல்படுத்துவதற்காக கீழ்க்காணும் நிறுவன அமைப்புகள் உள்ளன.:

மாநில புதுவாழ்வு சங்கம்,

மாவட்ட புதுவாழ்வு சங்கம்,

வட்டார வழிநடத்துனர் அணி – இது 10 முதல் 15 கிராம ஊராட்சிகளுக்கு ஒன்றாகும். மேலும் கிராம ஊராட்சி அளவில் ஒரு முழுமையான சமூகம் சார்ந்த அமைப்பு. அதாவது கிராம ஊராட்சி வறுமை ஒழிப்பு சங்கம் இத்திட்டத்திற்கு முழு அளவில் பொறுப்பேற்றுக் கொள்கிறது.

 

சமூக ஒருங்கிணைப்பு – துவக்க செயல்பாடுகள்

இத்திட்டமானது மக்கள் தேவைகளை முன்னிலைப்படுத்தி மக்கள் பங்கேற்புடன் அனைத்து நிலைகளிலும் செயல்படுத்தப்படுகிறது.

ஏழை, எளிய, ஒதுக்கப்பட்ட மக்களை ஒருங்கிணைப்பதே முதல் கட்டப் பணியாகும். பின் அவர்களின் திறன்களை வளர்த்து இலக்கு மக்களின் வாழ்வாதரத்தை மேம்படுத்துகிறது.

• திட்டம் குறித்து விழிப்புணர்வு தகவல் பிரச்சாரம் முதலில் மக்களுக்கு அளித்தல்

• மக்கள் பங்கேற்புடன் இலக்கு மக்களை அடையாளம் காணல்

• கிராம சபை ஒப்புதல் பெறப்பட்டு பஞ்சாயத்து துவக்க நிதி அளித்தல்

 

கிராம ஊராட்சி வறுமை ஒழிப்பு சங்கம் (கி.வ.ஒ.ச)

இத்திட்டத்தில் கிராம வறுமை ஒழிப்பு சங்கம் மக்கள் அமைப்பாக உள்ளது. இதில் பெரும் பகுதியினர் இலக்கு மக்களாவர். இலக்கு மக்களில் இருந்து ஒரு பெண் சுயஉதவி குழு உறுப்பினர் அந்தக் குக்கிராம அளவில் பிரதிநிதித்துவம் பெறுவர். மேலும் பஞ்சாயத்து அளவிலான கூட்டமைப்பிலிருந்து நிர்வாகி, மாற்றுத் திறனுடையோர் பிரதிநிதி, 2 இளைஞர்களை கிராம சபை கிராம வறுமை ஒழிப்பு சங்கத்திற்கு பரிந்துரை செய்யும். கிராம ஊராட்சி தலைவரே இக்குழுவிற்குத் தலைவராக செயல்படுவார்.

 

சமூக தணிக்கை குழு

கிராம சபை சமூக தணிக்கை குழுவினை அமைத்து, திட்டத்தின் கோட்பாடுகளை சரிவர, முறையாக பின்பற்றப்படுவதை கண்காணித்து அனைத்து திட்ட செயல்பாடுகளுக்கும் பாதுகாவலராக இருந்து உறுதிபடுத்துகிறது. சமூக தணிக்கை குழு கிராமசபாவிற்கு கட்டுபட்டு தொடர்ந்து தனது அறிக்கையை அளிக்கும்.

மக்கள் பங்கேற்புடன் இலக்கு மக்களை அடையாளம் காணல் மற்றும் கிராம வறுமை ஒழிப்பு சங்கம் அனைத்து திட்ட பகுதிகளில் அமைத்தல்

இலக்கு மக்களாக அடையாளம் காணப்பட்டவர்களை கொண்டு அனைத்து ஊராட்சிகளிலும் கிராம வறுமை ஒழிப்பு சங்கம் அமைக்கப்பட்டுள்ளது. தற்போதைய நிலவரம்

 

வ. எண்

ஊராட்சி ஒன்றியத்தின் பெயர்

மொத்த கிராம ஊராட்சிகளின் எண்ணிக்கை

இலக்குமக்கள் பட்டியல் ஒப்புதல் பெறப்பட்ட ஊராட்சி எண்ணிக்கை

கிராம வறுமை ஒழிப்பு சங்க எண்ணிக்கை

1

புதூர் – முதல் கட்டம்

44

44

44

2

கயத்தார் – இரண்டாவது கட்டம்

45

45

45

3

கோவில்பட்டி – மூன்றாவது கட்டம்

45

45

45

4

ஓட்டபிடாரம் – நான்காவது கட்டம்

56

56

56

 

கிராம வறுமை ஒழிப்பு சங்க திட்டம் தயாரித்தல்:

கிராம வறுமை ஒழிப்பு சங்கம் அமைக்கப்பட்டபின் தனது திட்டத்தினை தொலை நோக்கு அடிப்படையில் தயாரிக்கும். இதற்கு திட்ட பணியாளர்கள் வழி நடத்தி உதவி புரிவர். கிராம வறுமை ஒழிப்பு சங்க திட்டம் தயாரிக்கப்பட்டு, ஒப்புதல் பெறப்பட்ட பின் திட்டத்தின் முதல் தவணையான கிராம வறுமை ஒழிப்பு சங்க நிதி அனுமதிக்கப்படுகிறது.

 

வ. எண்

ஊராட்சி ஒன்றியத்தின் பெயர்

மொத்த கி.வ.ஒ.ச எண்ணிக்கை

தொலைநோக்கு திட்டம் தயாரிக்கப் பட்டவை

கி.வ.ஒ.ச திட்டம் ஒப்புதல்

மாவட்ட திட்ட அலகுடன் கி.வ.ஒ.ச. ஒப்பந்தம்

கி.வ.ஒ.ச திட்ட நிதி அனுமதி

1.

புதூர் – முதல் கட்டம்

44

44

44

44

44

2

கயத்தார் – இரண்டாவது கட்டம்

45

45

45

45

45

3

கோவில்பட்டி – மூன்றாவது கட்டம்

45

45

45

45

45

4

ஓட்டபிடாரம் – நான்காவது கட்டம்

56

56

56

56

56

 

கிராம நிதி 2006 – 2011 வரை ஒப்புதல் விபரம்

திட்ட நிதிகள் அனைத்தும் அதாவது கிராம வறுமை ஒழிப்பு சங்கம் நிதி, அமுதசுரபி நிதி (ஊராட்சி அளவிலான கூட்டமைப்பிற்கு இது தரப்படும்) கிராம ஊராட்சி ஊக்க நிதி ஆகிய அனைத்தும் கிராம வறுமை ஒழிப்பு சங்கம் மூலம் அனுமதிக்கப்படுகிறது. மேலும் கூட்டமைப்பு வளர்ச்சி நிதி (கணிப்பொறி வாங்குதல்) கிராம வறுமை ஒழிப்பு சங்கம் வழியாக அளிக்கப்படுகிறது.

 

வ. எண்

ஊராட்சி ஒன்றியத்தின் பெயர்

கி.வ.ஒ.ச நிதி

அமுதசுரபி நிதி

கி.வ.ஒ.ச ஊக்க நிதி

கிராம ஊராட்சி ஊக்க நிதி

கூட்டமைப்பு வளர்ச்சி நிதி

மொத்தம்

1

புதூர் – முதல் கட்டம்

293.28

433.51

24.00

71.60

26.40

848.79

2

கயத்தார் – இரண்டாவது கட்டம்

349.64

435.86

12.00

81.00

27.00

905.50

3

கோவில்பட்டி – மூன்றாவது கட்டம்

339.85

288.37

-

33.60

27.00

688.82

4

ஓட்டபிடாரம் – நான்காவது கட்டம்

467.89

367.58

-

-

33.60

869.07

 

சுய உதவி குழுக்கள் (SHG)

சுய உதவி குழுக்களானது மாற்றுத்திறனாளிகள் எனில் 5-10 நபர்களும், இலக்கு ஏழை மக்கள் எனில் 10-20 நபர்களும் கொண்டு அமைக்கப்படுகிறது. இக்குழு உறுப்பினர்களுக்கு தங்கள் திறன்களை வளர்த்துக் கொள்ள பயிற்சியும், பணத்தை சேமிக்கும் ஆர்வமும் தரப்படுகிறது. மேலும் வங்கிகளிலும், அரசு திட்டங்களிலும் இக்குழுக்களை இணைத்து கடனுதவி பெற்றுத் தந்து வாழ்வாதார திட்டங்களை துவக்க வழிவகை செய்யப்படுகிறது.

போதுமான அளவிற்கு வழிகாட்டுதலுடன் திட்டத்தால் உருவாக்கப்பட்ட சமூக சுய உதவிக்குழு பயிற்றுனர்களால் கண்காணிக்கப்பட்டு வருகிறது.


சுய உதவி குழு வகைகள் (சு.உ.கு)

வ. எண்

குழுக்களின் வகைகள்

வயது வரம்பு

1

மகளிர் சுயஉதவிக்குழு

18-60

2

இளைஞர் சுயஉதவிக்குழு

18-35

3

மாற்றுத்திறனாளிகள் சுயஉதவிக்குழு

5ம், அதற்கு மேல்

4

மலைவாழ்மக்கள் சுயஉதவிக்குழு

18-60

 

சுயஉதவிக்குழுவாக ஒருங்கிணைக்கப்பட்ட குடும்பங்கள் மற்றும் தொடர்பு ஏற்படுத்திய விபரம்

 

வ. எண்.

ஊராட்சி ஒன்றிய ங்களின் பெயர்

இலக்கு குடும்பங்களின் எண்ணிக்கை

தகுதியான குடும்பங்களின் எண்ணிக்கை

சு.உ.கு ஒருங்கிணைக்கப்பட்ட குடும்பங்களின் எண்ணிக்கை

மொத்தமுள்ள சு.உ.கு எண்ணிக்கை (ம + இ + மலைவாழ்)

மொத்தம் தற்போது உள்ள சு.உ.கு

மொத்த சு.உ.கு

ஆதார நிதி பெற்ற சு.உ.கு

சுழல் நிதி பெற்ற சு.உ.கு

சு.உ.கு நேரிடை தொடர்பு பெற்றவை

பொருளதார உதவி பெற்ற சு.உ.கு

தற்போது உள்ளவை

புதிய குழுக்கள்

மொத்தம்

சு.உ.கு

சு.உ.கு

தொகை

சு.உ.கு

தொகை

சு.உ.கு

தொகை

1

புதூர் முதல் கட்டம்

5273

4094

2817

1277

4094

150

418

568

140

555

182.1

453

946.2

45

131.9

2

கயத்தார் இரண்டாவது கட்டம்

5784

4959

3351

1608

4959

149

516

665

146

655

319.35

497

650.12

69

240.44

3

கோவில்பட்டி மூன்றாவது கட்டம்

7879

6580

3434

3146

6580

233

379

612

233

593

311.8

373

728.6

37

137.7

4

ஓட்டப்பிடாரம் 4வது கட்டம்

10607

8260

5552

2708

8260

223

599

822

211

573

257.25

257

279.8

13

30.25

 

மறுசீரமைக்கப்பட்ட கிராம ஊராட்சி அளவிலான கூட்டமைப்பின் செயல்பாடுகள் மற்றும் நிலை

 

வ. எண்

ஊராட்சி ஒன்றியத்தின் பெயர்

மறுசீரமைக்கப் பட்ட கி.ஊ.கூ

கி.ஊ. கட்ட மைப்பு பதிவு செய்யப் பட்டவை

சோ்க்கப்பட்ட உறுப்பினர்கள்

மொத்த உறுப் பினர்கள்

அமுத சுரபி நிதி பெற்ற கிராம ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு

மொத்ததொகை

மொத்ததொகை

கி.ஊ. கூட்டங்களின் எண்ணிக்கை பெருங்கடன் பெற்றவை

பெருங்கடன் பெற்ற தனிநபாகள்

இலக்கு

மற்றவர்கள்

முதல் தவணை

இரண்டாவது தவணை

உறுப்பினாகள்

தொகை

கி.ஊ. கூட்டம்

தொகை

எண்ணி க்கை

தொகை

ஊ.அ.கூ

தொகை

கி.அ.கூ

தொகை

1

புதூர் முதல் கட்டம்

44

36

4578

5020

9598

43

253.83

26

104

357.83

3574

465.96

1

9.6

81

9.6

2

கயத்தார் இரண்டாவது கட்டம்

45

36

5213

6128

11341

45

296.34

-

-

296.34

2744

378.24

-

-

-

-

3

கோவில்பட்டி மூன்றாவது கட்டம்

45

36

6666

4468

11134

45

288.37

-

-

288.37

2504

321.93

-

-

-

-

4

ஓட்டப்பிடாரம் 4வது கட்டம்

56

38

7838

4334

12172

-

-

-

-

-

-

-

-

-

-

-

 

மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பு கவனம்

இத்திட்டத்தில் மாற்றுத் திறனுடையோர்களையும், நலிவுற்றோர்களையும் தீவிரமாக ஒருங்கிணைத்து அமைப்புகளை ஏற்படுத்துவதன் மூலம் அவர்கள் ஆற்றல் மேம்படுத்தி மற்றவர்களை போல் வாழ வைக்க முடியும். மேலும் வாழ்வாதார வாய்ப்புகளை ஏற்படுத்தி, வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதன் மூலம் அவர்களுடைய சுய மரியாதையை தன்னம்பிக்கையை மீட்க முடியும். மாற்றுத் திறனாளிகளையும், நலிவுற்றோர்களையும், மலைவாழ் மக்களையும், இத்திட்டத்தில் எளிதில் அணுகி மற்றவர்களைப் போல் மாற்ற முடிகிறது. கி.வ.ஒ.ச. மூலம் கடன் உதவி தரப்பட்டு அவர்களுக்கு வாழ்வாதார செயல்கள் துவங்க நிதியும், உதவியும் தரப்படுகிறது.

• மாற்றுத் திறனை அளத்தல்

• தேசிய அடையாள அட்டை

• உபகரணங்கள்

• மாற்றுத் திறனாளிகள் சுய உதவிக்குழு

• மருத்துவ உதவி

• தொழிற் பயிற்சி

• தனிநபர் கடன்

• தொழிற் குழு

• முதியோர் உதவி தொகை

• காப்பீட்டு்த் திட்டம்

 

மாற்றுத் திறனாளிகளுக்கும், நலிவுற்றோர்களுக்கும் புதுவாழ்வு திட்டத்தில் முன்னுரிமை அளிக்கப்படுகிறது. கி.வ.ஒ.ச மூலம் தனிநபர் கடன் கணிசமான அளவில் தரப்படுகிறது. அதன் விபரம்

 

ஊராட்சி ஒன்றியங்கள் வாரியாக திட்ட உதவி செப்டம்பர் 2011 வரை

 

 

வ. எண்

 

ஊராட்சி ஒன்றியங்களின் பெயர்

மாற்றுத் திறனாளிகளின் எண்ணிக்கை

நலிவுற்றோர் எண்ணிக்கை

கண்டறியப்பட்ட மாற்றுதிறனாளிகள்

வாழ்வாதாரத்திற்கு தனிநபர் கடன் பெற்றவர்கள்

நலிவுற்றோர் கண்டறியப்பட்டவர்

தனிநபர் கடன் பெற்றவர்கள்

1

புதூர் முதல் கட்டம்

1291

1287

939

937

2

கயத்தார் 2வது கட்டம்

1436

1436

783

783

3

கோவில்பட்டி 3வது கட்டம்

1392

1190

1399

1188

4

ஓட்டப்பிடாரம் 4வது கட்டம்

1669

1404

2401

1782

 

மாற்றுத் திறனாளிகள் சமூக உதவிகள் பெற்ற விபரம் செப்டம்பா 2011 அன்று வரை

 

வ. எண்

ஊராட்சி ஒன்றியங்களின் பெயர்

மொத்த மாற்றுத் திறனாளிகள் எண்ணிக்கை

பெறப்பட்ட உதவிகள்

மாற்றுதிறனாளிகள் அடையாள அட்டை

உபகரணங்கள்

நிர்மய மருத்துவ காப்பீட்டு அட்டை

தகுதியான வர்கள்

அடைந்த வர்கள்

மீதி

தகுதியான வர்கள்

அடைந்த வர்கள்

மீதி

தகுதியான வர்கள்

அடைந்த வர்கள்

மீதி

1

புதூர்-1வது கட்டம்

 

 

 

 

1291

1147

1147

-

205

216

-

172

116

56

2

கயத்தார் 2வது கட்டம்

 

 

 

1436

1333

1333

-

279

237

42

179

52

127

3

கோவில்பட்டி 3வது கட்டம்

 

 

 

1392

1304

1304

-

209

195

14

166

-

166

4

ஒட்டப்பிடாரம் 4வது கட்டம்

 

 

 

1669

1409

1409

-

304

89

215

-

-

-

 

சமூக பாதுகாப்பு வளைய தகவல் (செப்டம்பா 2011 வரை)

 

வ. எண்

ஊராட்சி ஒன்றியங் களின் பெயா

மொத்த மாற்றுத் திறனாளிகளாக கண்டறியப்பட்டவர்கள்

சமூக பாதுகாப்பு வளையம் அளவீடுகள்

பராமரிப்பு நிதி உதவி

மாற்றுத்திறனாளி ஓய்வூதியம்

முதியோர் உதவித் தொகை

வாழ்வாதார நிதி உதவி

வீட்டுத் திட்டம்

அந்தியோதியா வீட்டு வசதி திட்டம்

தகுதியானவர்கள்

அடைந்தவர்கள்

மீதி

தகுதியானவர்கள்

அடைந்தவர்கள்

மீதி

தகுதியானவர்கள்

அடைந்தவர்கள்

மீதி

மாறுபட்ட வட்டி விகித கடன்

தேசிய மாற்றுத் திறனாளிகள்நிதி வளாச்சி நிறுவனம்

மாவட்ட மாற்றுத் திறனாளிஅலுவலர் /SGSY

இந்திரா வீட்டு வசதி திட்டம்

கலைஞர் வீட்டு வசதித் திட்டம்

இலவச வீடு

1

புதூர்-1வது கட்டம்

1291

164

164

-

248

151

97

693

679

14

27

-

22

172

53

32

1188

2

கயத்தார்-2வது கட்டம்

1436

203

203

-

334

146

188

1216

983

233

4

-

8

451

32

5

1059

3

கோவில்பட்டி 3வது கட்டம்

1392

308

303

5

130

92

38

1310

1270

310

-

-

-

168

20

12

1130

4

ஒட்டப்பிடாரம் 4வது கட்டம்

1669

228

116

112

1078

172

906

2074

335

1739

435

-

834

791

86

38

1179

 

  

அமுத சுரபி

சுய உதவி குழுக்களுக்கு தரப்படும் சுழற்சி நிதி மற்றும் வங்கிக்கடனுக்கு இணையாக மேலும் ஒரு நிதி வளமே அமுத சுரபி ஆகும்.

 

• கிராம வறுமை ஒழிப்புச் சங்கம் மூலம் ரூ.6 லட்சம் அமுத சுரபி கையிருப்புத் தொகையாக, சுய உதவிக் குழுக்களின் பொருளாதார செயல்களுக்குத் தரப்படுகிறத

• இத்தொகையானது கிராம வறுமை ஒழிப்புச் சங்கம் சார்பாக கிராம ஊராட்சி அளவிலான கூட்டமைப்பால் நிர்வகிக்கப்படுகிறது.

• கி.ஊ.அ.கூ. சுய உதவி குழுக்களுக்கு குறைவான வட்டியில் கடன் இலக்கு மக்களுக்கு முன்னுரிமை அளித்து தரப்படுகிறது.

• கிராம ஊராட்சி அளவிலான கூட்டமைப்புகள் மறுசீரமைப்பு செய்யப்பட்டு அரசு வரையறைபடி, தமிழ்நாடு சங்கங்கள் சட்டம் 1975ன்படி பதிவு செய்யப்பட்டு கார்பஸ் தொகை நிர்வகிக்க வேண்டும்.

 

வாழ்வாதார மேம்பாடு

ஏழை மக்களின் வாழ்வாதார மேம்பாட்டிற்கு இத்திட்டம் மூன்று வழிமுறைகளை மேற்கொள்கிறது.

 

திறன் வளர்ப்பு பயிற்சி

வேலை வாய்ப்புள்ள திறன் வளாப்பு பயிற்சியின்மூலம் இளைஞர்களுக்கு கார்ப்பரேட் நிறுவனங்களில் வேலை வாய்ப்பும், சுய வேலை வாய்ப்பும் கிடைக்க வழிவகை செய்கிறது.

 

வ. எண்.

ஊராட்சி ஒன்றியங்களின் பெயர்

தகுதி வாய்ந்த இளைஞர்கள்

பயிற்சி பெற்ற இளைஞர் எண்ணிக்கை

இளைஞர் திறன் வளர்ப்பு பயிற்சி எண்ணிக்கை

வேலையில் சேர்ந்த இளைஞர்கள்

1

புதூர் 1வது கட்டம்

2526

146

2779

2520

2

கயத்தார் 2வது கட்டம்

2437

107

2010

1826

3

கோவில்பட்டி 3வது கட்டம்

3392

241

2026

1884

4

ஒட்டப்பிடாரம் 4வது கட்டம்

3353

477

1481

1345

 

பொருளாதார செயல்பாடுகள் / கூட்டமைப்புகள்

• கிராம வறுமை ஒழிப்பு சங்கம் மூலம் சிறிய கடன் உதவி தனி நபர்களுக்கு அளித்து வாழ்வாதார மேம்பாடு அடைதல் அல்லது கிராம ஊராட்சி அளவிலான கூட்டமைப்பில் உள்ள வழ்வாதார கையிருப்பு பணம் சுய உதவிக்குழுக்களுக்கு தருவதன்மூலம் வாழ்வாதார மேம்பாடு அடைகிறது. சுழற்சி நிதி மற்றும் வங்கி தொடர்பின் மூலம் சிறிய குழு அளவிலான செயல்களுக்கு உதவி அளித்தல்

• பெரிய அளவிலும், நிலைத்த தன்மைக்காகவும் ஏழை மக்களால் உருவாக்கப்பட்ட தொழிற்களுக்கு தொழில் கூட்டமைப்பு உருவாக்கவும் இத்திட்டம் உதவி புரிகிறது.

 

தொழிற் கூட்டமைப்பு நிதி விபரம் (காலம் 2008-2011)

5 வகையான தொழிற் கூட்டமைப்புகள் இலக்கு மக்களிடையே உருவாக்கப்பட்டுள்ளது. இது 98 இலக்கு குடும்பங்களை உள்ளடக்கியது.

வ. எண்.

ஊராட்சியின் பெயர்

நிறுவன பெயர்

பயனாளிகள் எண்ணிக்கை

புதுவாழ்வு நிதி அனுமதி அளித்த விபரம்

1

கீழ அருணாசலபுரம்

கரி கூட்டமைப்பு

14

80,670

2

சென்னம்பட்டி

கரி கூட்டமைப்பு

14

77,055

3

கௌடன்பட்டி

கொத்தனார் கூட்டமைப்பு

30

1,60,000

4

மாதலாபுரம்

ஆயத்த ஆடை கூட்டமைப்பு

20

1,55,000

5

லட்சுமிபுரம்

கரி கூட்டமைப்பு

20

58,000

 

வாழ்வாதார ஒத்த குழு (CLG)

ஒரே மாதிரியான தொழில் செய்யும் நபர்களை ஒன்று சோ்த்து வாழ்வாதார ஒத்த குழு துவங்கப்படுகிறது. இக்குழு சந்தைபடுத்துவதற்கும், கட்டமைப்புகளை உருவாக்குவதற்கும், தொழில் மேம்படுத்துவதற்கும் உதவுகிறது.

 

வ. எண்

ஊராட்சி ஒன்றியம்

வாழ்வாதார ஒத்த குழு

மொத்தம்

பால் பண்ணை

ஆடு வளர்த்தல்

ஆயத்த ஆடை

மற்றவை

1

புதூர் 1வது கட்டம்

5

38

2

7

52

2

கயத்தார் 2வது கட்டம்

26

23

1

6

56

3

கோவில்பட்டி 3வது கட்டம்

5

44

4

1

54

4

ஓட்டபிடாரம் 4வது கட்டம்

5

30

1

-

36

 

சமுதாய சுய உதவி குழு பயிற்றுனர் பயிற்சி

 

வ. எண்

ஊராட்சி ஒன்றிய பெயர்

சமுதாய சுயஉதவி குழு பயிற்றுனர் எண்ணிக்கை

பயிற்சி முடித்தவர் எண்ணிக்கை

அலகு I

அலகு II

அலகு III

புத்தக பராமாரித்தல்

1

புதூர் 1வது கட்டம்

76

76

76

76

76

2

கயத்தார் 2வது கட்டம்

71

71

71

71

71

3

கோவில்பட்டி 3வது கட்டம்

78

78

78

78

78

4

ஓட்டபிடாரம் 4வது கட்டம்

73

73

73

73

73

 

 

சமுதாய வல்லுனர்கள் – ஊராட்சி ஒன்றிய வாரியாக

 

வ. எண்

ஊராட்சி ஒன்றிய பெயர்

சமுதாய வல்லுனர்கள் எண்ணிக்கை

1

புதூர் 1வது கட்டம்

89

2

கயத்தார் 2வது கட்டம்

90

3

கோவில்பட்டி 3வது கட்டம்

81

 

பஞ்சாயத்து அளவிலான கூட்டமைப்பு பயிற்சி

 

வ. எண்

ஊராட்சி ஒன்றிய பெயர்

மறுசீரமைக்கப்பட்ட பஞ்சாயத்து அளவிலான கூட்டமைப்புகளின் எண்ணிக்கை

பயிற்சி முடித்த பஞ்சாயத்து அளவிலான கூட்டமைப்புகளின் எண்ணிக்கை

1

புதூர் 1வது கட்டம்

44

44

2

கயத்தார் 2 வது கட்டம்

45

45

3

கோவில்பட்டி 3 வது கட்டம்

45

45

4

ஓட்டபிடாரம் 4 வது கட்டம்

56

46

  

சுய உதவி குழு பயிற்சி

 

வ. எண்

ஊராட்சி ஒன்றிய பெயர்

சு.உ.குழு வகைகள்

சு.உ.குழு எண்ணிக்கை

சுய உதவி குழுக்களின் எண்ணிக்கை

அலகு I

அலகு II

அலகு III

ஊக்குநர், பிரதிநிதி,
புத்தக பராமரிப்பு பயிற்சி

1

புதூர் 1வது கட்டம்

இலக்கு மக்கள்

சிறப்பு குழுக்கள்

இளைஞர் குழுக்கள்

தற்போதுள்ள குழுக்கள்

104

95

46

418

104

95

46

418

104

95

46

418

104

95

46

418

104

95

46

418

2

கயத்தார் 2வது கட்டம்

இலக்கு மக்கள்

சிறப்பு குழுக்கள்

இளைஞர் குழுக்கள்

தற்போதுள்ள குழுக்கள்

109

94

40

516

109

94

40

516

109

94

40

516

109

94

40

516

109

94

40

516

3

கோவில்பட்டி 3வது கட்டம்

இலக்கு மக்கள்

சிறப்பு குழுக்கள்

இளைஞர் குழுக்கள்

தற்போதுள்ள குழுக்கள்

190

101

43

379

190

101

43

379

190

101

43

379

190

101

43

379

190

101

43

379

4

ஓட்டபிடாரம் 4வது கட்டம்

இலக்கு மக்கள்

சிறப்பு குழுக்கள்

இளைஞர் குழுக்கள்

தற்போதுள்ள குழுக்கள்

106

128

17

599

106

128

17

599

103

128

10

599

103

127

10

599

103

123

10

599

 

சமுதாய வல்லுநர்கள் (தரம் வாரியாக) மதிப்பூதியம்

 

 

 

 

 

 

வ. எண்

 

 

 

 

 

தரம்

மாவட்டத்திற்குள்

மாவட்டத்திற்கு வெளியே

திட்டம்

மற்ற துறை

திட்டம்

மற்ற துறை

1

A

200

250

300

350

2

B

150

200

200

300

3

C

125

150

175

250

4

D

125

150

175

200

 

சமுதாய வல்லுநர்கள் – சிறப்பு பாடபிரிவு

 

வ. எண்

சிறப்பு பாடபிரிவு

சமுதாய வல்லுநர்கள் எண்ணிக்கை

1

கிராம வறுமை ஒழிப்பு சங்கம்

82

2

பஞ்சாயத்து அளவிலான கூட்டமைப்பு

31

3

சமூக தணிக்கை குழு

24

4

புத்தக பராமாரிப்பு

29

5

சுய உதவி குழு

69

6

இளைஞர்

2

7

தணிக்கை

4

8

ஆண்டு திட்டம்

1

9

துணைக்குழு

6

10

தகவல் தொடர்பு

1

11

கண்காணிப்பு

1

12

சமூக தர அட்டை

10

  

சமூக மூலதனம் உருவாக்குதல்

தங்களுக்கு கிடைத்த அனுபவங்களை மற்ற கிராமங்களுக்கும், தங்கள் கிராமத்திலேயே பயிற்சி தரக்கூடிய திறனை வளர்ப்பதும் இத்திட்டதின் மிக முக்கியமான அம்சமாகும். இந்த சமூக மூலதனம் குறுகிய காலத்தில் திட்டத்தை மிகப்பெரிய அளவில் கொண்டு செல்ல உதவுகிறது.

 • இத்திட்டத்தில் சமூக வல்லுநர்கள் பயிற்றுனராக உருவாக்கப்பட்டு மற்ற திட்ட கிராமங்களுக்கும் மற்ற துறைகளுக்கும் உள்ளனர்.
 • அவர்களுக்கு அமைப்பு ரீதியாக உதவி செய்யும் பொருட்டு, சமூக வல்லுநர்கள் கற்றல் மற்றும் கற்பித்தல் மையம் உருவாக்கப்பட்டு அவர்களாலேயே நிர்வகிக்கப்படுகிறது. (மகமை)
 • மக்கள் கற்றல் மையம் (மகமை) மற்ற உறுப்பினர்களுக்கு தங்கள் அனுபவங்களை பகிர்ந்து கொள்ளவும், சமூக சார்ந்த அனுபவங்களை பகிர்ந்து கொள்ளவும் அடித்தளமாக உள்ளது.
 • 250 சமூக வல்லுநர்கள் உருவாக்கப்பட்டு மற்ற திட்ட கிராமங்களுக்கு பயனுள்ள வகையில் சேவை புரிகின்றனர்
 • சமூக வல்லுநர்கள் கற்றல் கற்பித்தல் மையம் துவங்க ஆரம்ப ஆதார நிதி திட்டத்தின் மூலம் தரப்படுகிறது.
 • மக்கள் கற்றல் மையம் பற்றி தெரிந்து கொள்ள தொடர்பு கொள்ள வேண்டிய தொலை பேசி எண். 04632 – 225221

புதுவாழ்வு திட்டமானது விளாத்திகுளம் ஊராட்சி ஒன்றியத்திற்கு அரசாணை G.O.(MS) NO.27/RD & PR ஊராட்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் துறை தேதி 28.02.11 மூலம் விரிவுபடுத்தப்பட்டுள்ளது.

அமைப்பு வெளியீடு - மாவட்ட ஆட்சியர் தூத்துக்குடி
ஆக்கம் தேசிய தகவலியல் மையம், தூத்துக்குடி