பின்னால் செல்லவும்

ஊராட்சிகள்


 

அலுவலர் பதவி

 

:

ஊரக வளர்ச்சி உதவி இயக்குநர்

(ஊராட்சிகள்),

தூத்துக்குடி மாவட்டம், தூத்துக்குடி.

 

முகவரி

:

 

மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம்,

3 வது தளம், கோரம்பள்ளம்,

தூத்துக்குடி 628 101.

 

தொலைபேசி எண்கள்

:

0461 – 2340597, 2340225

 

நிகரி எண்

:

0461 – 2341557

 

மின்னஞ்சல் முகவரி

:

adp.tntut(at)nic(dot)in

 

 

 

துறை விபரம்

 

ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் கீழ், ஊரக வளர்ச்சி உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) அலுவலகம், ஊரக உள்ளாட்சி அமைப்புகளைக் கண்காணிக்கும் அலுவலகமாக செயல்பட்டு வருகிறது.

 

இவ்வலுவலகமானது தூத்துக்குடி, கோட்ட வளர்ச்சி அலுவலகம் என்ற பெயரில் 31.07.1998 வரை செயல்பட்டு வந்தது.

 

அரசாணை எண் 244 ஊரக வளர்ச்சித் துறை நாள் 01.08.1997 இன் படி, இவ்வலுவலகமானது வளர்ச்சி அலுவலர் (ஊராட்சிகள்) அலுவலகம் என பெயர் மாற்றம் செய்யப்பட்டது. அரசாணை எண் 122 ஊரக வளர்ச்சித் துறை நாள் 08.06.1998 இன் படி, இவ்வலுவலமானது ஊரக வளர்ச்சி உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) அலுவலகம், தூத்துக்குடி மாவட்டம், தூத்துக்குடி என மீண்டும் பெயர் மாற்றம் செய்யப்பட்டது.

 

ஊரக வளர்ச்சி உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) தூத்துக்குடி அலுவலகத்தால் மாவட்டத்திலுள்ள கிராம ஊராட்சிகள், ஊராட்சி ஒன்றியங்கள் மற்றும் மாவட்ட ஊராட்சி அலுவலகங்கள் ஆய்வு, ஆவணங்கள் பராமரிப்பு, வேலைகள் மற்றும் சொத்துக்கள் ஆய்வு மற்றும் தெரிந்தெடுக்கப்பட்ட ஊரக உள்ளாட்சி உறுப்பினர்கள், ஊராட்சி மன்றத் தலைவர்கள் மற்றும் ஊராட்சி ஒன்றியக்குழுத் தலைவர்கள் ஆகியோர்கள் மீதான தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டம் 1994 கீழான நடவடிக்கைகள் குறித்தும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

 

குடிநீர் வசதி, சுகாதாரம், சாலைகள் மற்றும் தெரு விளக்குகள் பராமரித்தல் போன்ற அடிப்படை வசதிகளை நிறைவேற்றுவது கிராம ஊராட்சியின் முக்கியப் பணியாகும். ஊராட்சி நிர்வாகத்தினைக் கண்காணித்தல், ஊராட்சி மன்றத் தலைவர்களின் நடவடிக்கைகளைக் கண்காணித்தல் மற்றும் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு குறிப்பிட்ட திட்டங்களின் கீழ் வரப்பெறும் நிதியினை ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு விடுவித்தல் போன்ற பணிகள் ஊரக வளர்ச்சி உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) அலுவலகம் மூலம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும், மூன்றடுக்கு ஊராட்சிகளுக்கு சட்டப்பூர்வமான மற்றும் சடடப்பூர்வமில்லாத மானியங்கள் மற்றும் ஒப்படைக்கப்பட்ட வருவாய் விடுவித்தல் மற்றும் கிராம ஊராட்சிகளில் வரி வசூல், கட்டணங்கள் வசூல், அபராதக் கட்டணங்கள் வசூல், மூன்றடுக்கு ஊராட்சிகளில் ஊராட்சிப் பொதுநிதியில் மேற்கொள்ளப்படும் வேலைகள் மற்றும் ஊரகப் பகுதிகளில் குடிநீர்ப் பராமரிப்பு, தெருவிளக்குகள் பராமரிப்பு போன்ற பணிகள் ஊரக வளர்ச்சி உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) அலுவலகம் மூலம் நடைபெறுகின்றன.

   

 

24.10.2011 வரை, தூத்துக்குடி மாவட்டத்தில் 12 ஊராட்சி ஒன்றியங்களில் 408 கிராம ஊராட்சிகள் மற்றும் இருந்தன. 25.10.2011 முதல் தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட அத்திமரப்பட்டி, மீளவிட்டான், முத்தையாபுரம், சங்கரப்பேரி, தூத்துக்குடி ரூரல் ஆகிய கிராம ஊராட்சிகள் தூத்துக்குடி மாநகராட்சியுடன் இணைக்கப்பட்டன.

 

தற்போது 12 ஊராட்சி ஒன்றியங்களில் 403 கிராம ஊராட்சிகள் உள்ளன.

 

மாவட்ட ஆட்சித் தலைவர் மற்றும் ஊராட்சிகளின் ஆய்வாளர் அவர்களின் ஒப்புதலுடன் ஊரக வளர்ச்சி உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) மாநில நிதிக் குழு மானியம், ஒருங்கிணைந்த ஒப்படைக்கப்பட்ட வருவாய் மற்றும் 13 வது நிதிக் குழு மானியம் போன்றவை மூன்றடுக்கு ஊராட்சிகளுக்கு கடந்த மூன்று வருடங்களுக்குப் பினவரும் விபரப்படி விடுவிக்கப்பட்டுள்ளன.

 

 

மாநில நிதிக் குழு மானியங்கள்

 

அ) கிராம ஊராட்சிகளுக்கான ஒதுக்கீடு

 

     மாநில நிதிக் குழு மானியம் கிராம ஊராட்சிகளுக்கு பின்வரும் விபரப்படி இரண்டு வகைகளில் ஒதுக்கீடு செய்யப்படுகிறது.

 

1. மக்கட்தொகை அடிப்படையிலான நிதி ஒதுக்கீடு

 

     கிராம ஊராட்சிகளுக்கு ஒவ்வொரு மாதமும் மக்கட்தொகை அடிப்படையிலான நிதி அனுமதிக்கப்பட்டு விடுவிக்கப்படுகிறது. இந்த நிதிஒதுக்கீட்டிலிருந்து கிராம ஊராட்சிகளின் நிர்வாகச் செலவுகள் மற்றும் கிராம ஊராட்சிகளிலிருந்து மேற்கொள்ளப்படும் பணிகளுக்கான செலவுகள் மேற்கொள்ளப்படுகின்றன.

 

2. குறைந்தபட்ச நிதி ஒதுக்கீடு

 

     இதனடிப்படையில் ஒரு மாதத்திற்கு ரூ.25,000/- வீதம் நிதியாண்டிற்கு ரூ.3,00,000/- அனுமதிக்கப்படுகிறது. இந்நிதி கிராம ஊராட்சிகளின் மின் கட்டணம் செலுத்துவதற்கும், குடிநீர்க் கட்டணத்தினை தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்திற்கு செலுத்துவதற்கும் பயன்படுத்தப்படுகின்றன.

 


ஆ) ஊராட்சி ஒன்றியங்களுக்கான ஒதுக்கீடு

 

     மாநில நிதிக் குழு மானியம் ஊராட்சி ஒன்றியங்களுக்கு இரண்டு வகைகளில் ஒதுக்கீடு செய்யப்படுகிறது.

 

1. மக்கட்தொகை அடிப்படையிலான நிதி ஒதுக்கீடு

 

     ஊராட்சி ஒன்றியங்களுக்கு ஒவ்வொரு மாதமும் மக்கட்தொகை அடிப்படையிலான நிதி அனுமதிக்கப்பட்டு விடுவிக்கப்படுகிறது. இந்நிதி ஒதுக்கீட்டிலிருந்து ஊராட்சி ஒன்றியங்களின் நிர்வாகச் செலவுகள் மற்றும் ஊராட்சி ஒன்றியங்களிலிருந்து மேற்கொள்ளப்படும் பணிகளுக்கான செலவுகள் மேற்கொள்ளப்படுகின்றன.

 

2. குறைந்தபட்ச நிதி ஒதுக்கீடு

 

     இதனடிப்படையில் ஒரு மாதத்திற்கு ரூ.2,50,000/- வீதம் நிதியாண்டிற்கு ரூ.30,00,000/- அனுமதிக்கப்படுகிறது.

 

இ) மாவட்ட ஊராட்சிக்கான ஒதுக்கீடு

 

     மாவட்ட ஊராட்சிக்கு ஒவ்வொரு மாதமும் இந்நிதி அனுமதிக்கப்பட்டு விடுவிக்கப்படுகிறது. இந்நிதி ஒதுக்கீட்டிலிருந்து மாவட்ட ஊராட்சியின் நிர்வாகச் செலவுகள் மற்றும் மாவட்ட ஊராட்சியிலிருந்து மேற்கொள்ளப்படும் வேலைகளுக்கான செலவுகளுக்குப் பயன்படுத்தப்படுகின்றன.

 


மாநில நிதிக் குழு மானியங்கள் – உள்ளாட்சி அமைப்புகளுக்கு விடுவித்தல்

 

(தொகை – ரூபாய் இலட்சத்தில்)

 

வருடம்

விடுவிக்கப்பட்ட தொகை

கிராம ஊராட்சிகள்

ஊராட்சி ஒன்றியங்கள்

மாவட்ட ஊராட்சி

2008-2009

2238.129

929.556

206.450

2009-2010

2014.454

585.093

210.185

2010-2011

3081.315

1240.355

211.533

2011-2012

4931.756

2432.008

617.339

2012-2013 7483.520 3819.434 819.659

 

 

உட்கட்டமைப்பில் விடுபட்டதைச் சரிபடுத்தும் நிதி

 

வருடம்

நிர்வாக அனுமதி வழங்கப்பட்ட பணிகளின் எண்ணிக்கை

மதிப்பீடு

(தொகை – ரூபாய் இலட்சத்தில்)

2008-2009

53

90.040

2009-2010

47

96.52

2010-2011

58

110.46

2010-2011 (கூடுதல்)

39

63.98

2011-2012

178 131.740
2012-2013 17 119.20

 

 


ஒப்படைக்கப்பட்ட வருவாய்

 

இதனடிப்படையில் வளர்ச்சிப் பணிகள் மேற்கொள்வதற்கு கிராம ஊராட்சிகளுக்கும், மாவட்ட ஊராட்சிக்கும்  நிதி விடுவிக்கப்படுகிறது.

 

(தொகை – ரூபாய் இலட்சத்தில்)

 

வருடம்

விடுவிக்கப்பட்ட தொகை

கிராம ஊராட்சிகள்

ஊராட்சி ஒன்றியங்கள்

மாவட்ட ஊராட்சி

2008-2009

596.080

317.910

79.477

2009-2010

296.460

158.113

39.528

2010-2011

129.962

69.313

17.328

2011-2012

627.513

309.073

இல்லை

2012-2013 376.964 185.669 இல்லை

 

 

13 வது மாநில நிதிக் குழு மானியம்

 

இதனடிப்படையில் மின் கட்டணம் மற்றும் குடிநீர் கட்டணம் செலுத்துவதற்கு கிராம ஊராட்சி கணக்கு எண் 2 க்கு விடுவிக்கப்படுகிறது.

 

(தொகை – ரூபாய் இலட்சத்தில்)

 

வருடம்

விடுவிக்கப்பட்ட தொகை

கிராம ஊராட்சிகள்

ஊராட்சி ஒன்றியங்கள்

மாவட்ட ஊராட்சி

2008-2009

478.606

இல்லை

இல்லை

2009-2010

478.310

இல்லை

இல்லை

2010-2011

789.213

இல்லை

இல்லை

2011-2012

1453.973

இல்லை

இல்லை

2012-2013 965.360 இல்லை இல்லை

 

 

வறட்சி நிவாரணத் திட்ட வேலைகள்

 

வருடம்

மதிப்பீடு

(தொகை – ரூபாய் இலட்சத்தில்)

2008-2009

2.100

2009-2010

25.000

2010-2011

10.000

2011-2012

இல்லை

2012-2013 இல்லை

 

 

கனிமம் மற்றும சுரங்கம் – சீனியரேஜ் தொகை

 

இந்நிதி உதவி இயக்குநர் (கனிமம்) அலுவலகத்திலிருந்து பெறப்பட்டு. கிராம ஊராட்சிகளுக்கு கணக்கு எண் 1 க்கு விடுவிக்கப்படுகிறது.

 

 

வருடம்

கிராம ஊராட்சிகளுக்கு விடுவிக்கப்பட்ட தொகை (ரூபாய் இலட்சத்தில்)

2008-2009

164.720

2009-2010

303.215

2010-2011

585.648

2011-2012

862.390

2012-2013 366.436

 

 

ஊரகப் பகுதிகளிலுள்ள தெருவிளக்குகள் விவரம்

 

குழல் விளக்கு

மொ்குரி விளக்கு

சோடியம் விளக்கு

சிஎப்எல் விளக்கு

சோலார் விளக்கு

மொத்தம்

58422

56

1508

2966

94

63046

 

ஊரகப் பகுதிகளிலுள்ள குடிநீர் சாதனங்கள் விவரம்

 

ஜெட் இறைப்பான்

செண்ட்ரி பியுகல் இறைப்பான்

சப் மொ்சிபிள் இறைப்பான்

சிறு மின் விசை இறைப்பான்

கையிறைப்பான்

மொத்தம்

288

211

1481

1609

7624

11213

 

 

பொதுநிதி வேலைகள் விவரம்

 

உள்ளாட்சி அமைப்பு

மொத்த எண்ணிக்கை

2008-2009

2009-2010

எடுக்கப் பட்ட வேலை களின் எண்ணிக்கை

மதிப்பீடு

தொகை (ரூபாய் இலட்சத் தில்)

எடுக்கப்பட்ட வேலைகளின் எண்ணிக்கை

மதிப்பீடு

தொகை (ரூபாய் இலட்சத் தில்)

கிராம ஊராட்சிகள்

408

53

61.920

192

165.00

ஊராட்சி ஒன்றியங்கள்

12

49

199.840

183

350.690

மாவட்ட ஊராட்சி

1

94

338.000

54

250.00

 


 

 

உள்ளாட்சி அமைப்பு

மொத்த எண்ணிக்கை

2011-2012

2012-2013

எடுக்கப் பட்ட வேலை களின் எண்ணிக்கை

மதிப்பீடு

தொகை (ரூபாய் இலட்சத் தில்)

எடுக்கப்பட்ட வேலைகளின் எண்ணிக்கை

மதிப்பீடு

தொகை (ரூபாய் இலட்சத் தில்)

கிராம ஊராட்சிகள்

403

582

580.020

678

597.910

ஊராட்சி ஒன்றியங்கள்

12

313

424.760

492

763.040

மாவட்ட ஊராட்சி

1

47

263.00

இல்லை

இல்லை

 

அமைப்பு வெளியீடு - மாவட்ட ஆட்சியர் தூத்துக்குடி
ஆக்கம் தேசிய தகவலியல் மையம், தூத்துக்குடி