கறவைமாடு மற்றும் ஆடு வழங்கும் திட்டம்அரசாணை பலவகை எண்78 கால்நடை பராமரிப்பு பன்ணைகள்  மற்றும் மீன்வளத்துறை (ஏ.எச.4) துறை நாள்29.07.2011ன்படி கிராமபுற ஏழை எளியவர்களுக்கு ஐந்து வருடக்காலத்தில் 60,000 கறவை மாடுகளும் வழங்கிட மாண்புமிகு தமிழக முதல்வரால் ஆணையிடப்பட்டது.

 

அதேபோல், அரசாணை பலவகை எண் 79 கால் நடை பராமரிப்பு பன்ணைகள் மற்றும் மீன்வளத்துறை (ஏஎச்4)  நாள் 09.07.2011ன்படி 28லட்சம் இலவச பெண் வெள்ளாடுகளும்,7லட்சம் ஆண் வெள்ளாடுகளும் கிராம புற ஏழை எளியவாகளுக்கு ஐந்து வருட ஏக காலத்தில் வழங்கிட மாண்புமிகு தமிழக முதல்வரால் ஆணையிடப்பட்டுள்ளது.

 

தூத்துக்குடி மாவட்டத்தில் இத்திட்டத்தின் மூலம் இவ்வாண்டு பயனடைந்த பயனாளிகள் விவரம் வருமாறு
இலவச கறவை மாடுகள்


பயனடைந்த கிராமங்கள்

பயனடைந்த
பயனாளிகள்

13

650(13-50)


 இலவச செம்மறி ஆடுகள் மற்றும் வெள்ளாடுகள்
 


பயனடைந்த கிராமங்கள்

பயனடைந்த
பயனாளிகள்

16

2125


முதலாவதாக இனாம் சுப்பிரமணியபுரம் கிராமத்திற்கு 26 பயனாளிகளுக்கும் மற்றும் சங்கம்பட்டி 47 பயனாளிகளுக்கும் கறவை மாடுகள் வழங்கப்பட்டுள்ளன.


 இடைசெவல் கிராமத்தில் 39 பயனாளிகளுக்கும் அம்மன்புரம் கிராமத்தில் 32 பயனாளிகளுக்கும் ஒவ்வொரு வெள்ளாடுகள் வழங்கப்பட்டன ஒரு ஆண் வெள்ளாடும் 3பெண் வெள்ளாடுகளும் வழங்கப்பட்டன.

 

கறவைமாடுகள்

 ஆண்வெள்ளாடு மற்றும் பெண் வெள்ளாடுகள்

கிராமங்களின்

பயனாளிகள்

கிராமங்களின்

பயனாளிகள்

11

550

60

2054

 

இத்திட்டத்திற்கான பயனாளிகளை தோ்வு செய்ய மாவட்ட ஆட்சியர் அவர்கள் தலைமையில் அமைந்துள்ள சிறப்பு கிராம சபை ஏற்படுத்தப்பட்டுள்ளது அக்குழுவில் கீழ்க்கண்டள்ளவா்கள் உறுப்பினர்களாக உள்ளனர்

 1. ஊராட்சி மன்ற தலைவா்
 2. ஊராட்சி மன்றதுனை தலைவர்
 3. ஆதிதிராவிடர் - பழங்குடியின மூத்த ஊராட்சி மன்ற உறப்பினர்
 4. ஊராட்சி மன்ற அளவிலான இணைய ஒருங்கிணைப்பாளர்
 5. சுய உதவிக் குழுவிலுள்ள சிறந்த உறுப்பினர் ஒருவர்
 6. அப்பகுதியை சேர்ந்த கால்நடை உதவி மருத்துவா் மற்றும்
 7. துணை வட்டார வளர்ச்சி அலுவலர் (ஆதி திராவிடர் நலம்)

வெள்ளாடுகள் (ஆண் பெண்) பெற பயனாளிகளுக்கான தகுதிகள்

 1. நிலமற்ற விவசாய கூலிகளாக இருத்தல் வேண்டும்.
 2. சம்பந்தப்பட்ட ஊராட்சிகளில் வாழுபவராக இருக்க வேண்டும்
 3. பயனடையும் குடும்பத்தாரில் ஒரு உறுப்பினரின் வயதாவது 18 முதல் 60 வரை இருத்தல் வேண்டும். ஏனெனில் வழங்கப்படும் ஆடுகளை வளர்க்கும் தன்மை அவர்களுக்கு இருத்தல் வேண்டும்
 4. தேர்விடப்படுவர்களுக்கு ஏற்கனவே கறவை மாடும் வெள்ளாடுகள் (ஆண் பெண்) இருத்தல் கூடாது.
 5. மத்திய மாநில அரசு ஊழியர்களாகவோ எந்தவொரு அரசு நிறுவனத்திலோ - கூட்டுறவு அல்லது உள்ளாட்சி மன்ற உறுப்பினா்களாக  இருத்தல் கூடாது (அவா்களது கணவன் மனைவியாகவோ அல்லது தகப்பனாராகவோ - தாயாராகவோ - மாமனாராகவோ - மகனாகவோ - மகளாகவோ - மருமகனாவோ -மருமகளாகவோ இருத்தல் கூடாது)

 

கறவை மாடுகள் பெற பயனாளிக்களுக்கான தகுதிகள்

 1. பெண்கள் குடும்ப தலைவராக உள்ள குடும்பத்திற்கு முக்கியத்துவம் வழங்கப்படும் (கைம்பெண், கைவிடப்பட்டோர், ஊனமுற்றவர்களில் பெண்ணிற்கு முக்கியத்துவம் அளித்தல்)
 2. 60 வயத்திற்கு கீழுள்ளவராக இருத்தல் வேண்டும்.
 3. ஒரு ஏக்கருக்கு மேல் நிலமிருத்தல் கூடாது அல்லது அவரது குடும்ப உறுப்பினருக்கும் இருத்தல் கூடாது (எனினும் கொஞ்ச நிலங்கள் இருந்து அதில் கால்நடைகளுக்கான பசுந்தளைகள் வளா்த்து பயனடையலாம்)
 4. சொந்தமாக பசு - காளை மாடுகளோ இருத்தல் கூடாது.
 5. ஏற்கனவே இவர்கள் இலவச ஆடுகள் வழங்கும் திட்டத்தின் மூலம் பயனடைந்து இருத்தல் கூடாது.
 6. ஊராட்சியில் நிரந்தரமாக குடியிருப்பவராக இருத்தல் வேண்டும் ஊராட்சிகளின்பயனாளிக்களில் 30 விழுக்காடு வரை ஆதி திராவிட பழங்குடியினத்தவர்களாக இருத்தல் வேண்டும் (ஆ.தி் 29 விழுக்காடு  மற்றும்  ப.கு1 விழுக்காடு)

நிதி ஓதுக்கீடு
கறவை  மாடுகள் வழங்கிட ஒதுக்கீடு செய்யப்பட்ட தொகை ரூ 7250000
ஆடுகள் வழங்கிட ஒதுக்கீடு செய்யப்பட்ட தொகை ரூ6171000

 

காலநடைகள் வழங்கிட நிபந்தனைகள்


அருகில் உள்ள அண்டை மாநிலங்களில் கறவை மாடுகளும்,ஆடுகளை அருகில் உள்ள சந்தை மற்றும் உள்ளுர் பகுதிகளில்  வாங்கிடலாம்.
பயனாளிகள்,கால்நடைகளை விற்பனை செய்பவரிடம் நேரிடையாக தொடர்பு கொண்டு விலைகளை தாங்களோ இறுதி செய்யும் வாய்ப்புகள் அளிக்கப்படுகிறது. ஆனால் இறுதி செய்யப்பட்ட விலைக்குரிய தொகையை விற்பனையாளருக்கு எற்கனவே உள்ள வாங்கும் குழு அளிக்கும்.

 

வாங்கும் குழு உறுப்பினர்கள்

 

வாங்கும் குழுவில் வாங்குபவரும் ஒரு உறுப்பினராவார்  உள்ளுரில் பணியாற்றும் கால்நடை உதவி மருத்துவர் மற்றும் கால்நடை உதவி இயக்குநர்களும் குழு உறுப்பினர்களாவார்கள். ஆடு மாடுகளை வாங்கி பயனாளிகள் குடியிருக்கும் கிராமத்திற்கு வாகனங்கள் மூலம் கொண்டு செல்ல ஆகும் வாகன கூலிகளுக்குரிய தொகைகளை கணக்கு வைக்கும் காசோலை மூலம் பயனாளிகளுக்கு வழங்கப்படும்
வாங்கப்படும் கால்நடைகளை கால்நடை உதவி மருத்துவர் வாரம் ஒரு முறை ஆய்வு செய்து கால்நடைகளின் தற்போதைய உடல்நிலை குறித்த அறிக்கைகைளை வாராந்திர அறிக்கைகளாக துறை வாயிலாக அரசுக்கு சமா்ப்பிப்பார்கள்.


அமைப்பு வெளியீடு - மாவட்ட ஆட்சியர் தூத்துக்குடி
ஆக்கம் தேசிய தகவலியல் மையம், தூத்துக்குடி