பின்னால் செல்லவும்

மகளிர் திட்டம்தமிழ்நாடு மகளிர் நல மேம்பாட்டு நிறுவனம்
மகளிர் திட்டம், தூத்துக்குடி

1989 ஆம் ஆண்டு தமிழக அரசால் அறிவிக்கப்பட்டு பன்னாட்டு வளர்ச்சி நிதி (ஐபார்டு) உதவியுடன் 8 மாவட்டங்களில் 75 ஒன்றியங்களில் செயலாக்கப்பட்ட திட்டத்தின் மூலம் சமூக பொருளாதார நிலையில் மகளிர் மேம்பாடு அடைந்தனர்.  பெண்கள் நிலை உயர்ந்தால் தான் குடும்பம், கிராமம் அதன் மூலம் மாநிலம் நாடு ஆகியவை முன்னேறும்.  இதன் அடிப்படையில்தான் தமிழக அரசு மகளிர் மேம்பாட்டுத் திட்டத்தைத் துவக்கியது.

இத்திட்டம் படிப்படியாக அனைத்து மாவட்டங்களுக்கும், மாநாகராட்சி, நகராட்சி மற்றும் பேரூராட்சி மற்றும் பகுதிகளுக்கும் விரிவுபடுத்தப்பட்டு்ள்ளது.

     தமிழ்நாட்டிலுள்ள கிராமப்புற ஏழைப் பெண்களை, சுய உதவிக் குழுக்கள் மூலம் வலுப்படுத்தி சமூக பொருளாதார மேம்பாடும், சுய சார்பு தன்மையும் அடையச் செய்வதே மகளிர் மேம்பாட்டு திட்ட இலட்சியம்

      பெண்களின் நிலையில் முன்னேற்றங்கள் இருந்தாலும், ஆண்களுடன் ஒப்பிடும் போது சமூக பொருளாதார அடிப்படையில் பின் தங்கியே இருக்கிறார்கள்.  பெண் வளர்ச்சியடைந்தால்தான் குடும்பங்களும், கிராமங்களும், அதன் மூலம் மாநிலமும் நாடும் முன்னேறும்.  இதன் அடிப்படையில் தமிழக அரசு மகளிர் மேம்பாட்டிற்காக மகளிர் மேம்பாட்டுத் திட்டம்” என்ற திட்டத்தை அறிவித்தது.  இத்திட்டம் மகளிர் வாழ்க்கையில் நல்ல முன்னேற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

மகளிர் திட்டத்தின் முக்கிய நோக்கங்கள்

 1. திறமைகளை வளர்த்தல்
 2. பொருளாதார மேம்பாடு அடைதல்
 3. சமூக மேம்பாடு அடைதல்

 

சுய உதவிக் குழு - விளக்கம்

      ஒரே கிராமத்தில் வசிக்கும் ஒருமித்த கருத்துடைய 12 லிருந்து 20 ஏழை பெண்கள் உறுப்பினர்களாக சேர்ந்து, ஒருவருக்கு ஒருவர் உதவிச் செய்யும் மனப்பான்மையுடன் உருவாக்கப்படுவதே சுய உதவிக் குழு.

குழு உறுப்பினர்கள் பொதுவான பொறுப்புகள்

 1. விதிமுறைகளை கடைபிடித்தல்
 2. பயிற்சிகளில் கலந்து கொள்ளுதல்
 3. சேமிப்பு, சந்தா, கடன் அசல், வட்டி ஆகியவற்றை தவறாது செலுத்துதல்
 4. கிராம சபை கூட்டங்களில் பங்கேற்று கிராம முன்னேற்றத்திற்காக பாடுபடுதல்

சுய உதவிக் குழு பராமாரிக்கப்படவேண்டிய பதிவேடுகள்

 1. வருகைப் பதிவேடு
 2. குழு தீர்மானப் புத்தகம்
 3. சேமிப்பு பேரேடு
 4. கடன் பேரேடு
 5. ரொக்கப் பேரேடு
 6. பொதுப் பேரேடு
 7. தனிநபர் சேமிப்பு கணக்குப் புத்தகம்

குழு தரமதிப்பீடு

  • பதிவேடு பராமரிப்பு
  • குழுவின் செயல்பாடு இவற்றை ஆய்வு செய்து வெளிக்கடன் பெற, குழு தகுதியுடையதா என மதிப்பீடு செய்வதே குழு தர மதிப்பீடு ஆகும்.
  • குழு ஆரம்பித்த 6 மாதத்திற்குப் பிறகு சுழல் நிதி பெற முதல் தர மதிப்பீடு செய்யப்படும்
  • ஒரு வருடத்திற்கு பிறகு தொழில் கடன் பெற இரண்டாம் தர மதிப்பீடு செய்யப்படும்.

   

  கடன் வசதிகள்

  1. குழு வங்கிக் கணக்கு தொடங்கிய 6 மாதங்கள் கழித்து முதல் தர மதிப்பீடு செய்யப்படும்
  2. தர மதிப்பீட்டின் அடிப்படையில் சுழல் நிதி (ஆர்.எப்) வழங்கப்படும்
  3. சுழல் நிதியைப் பயன்படுத்தும் விதத்தின் அடிப்படையில் இரண்டாம் தர மதிப்பீடு செய்யப்பட்டு, சுழல் நிதியை அதிகரித்தோ அல்லது தொழிற்கடனோ வழங்கப்படும்.

  பயிற்சிகள்
  பயிற்சிகள் தொண்டு நிறுவனப் பயிற்சியாளரால் நடத்தப்பட வேண்டும்.


  வ.எண்

  பயிற்சி

  பகுதிகள்

  பயிற்சி நாட்கள்

  1

  ஊக்குநர்கள், பிரதிநிதிகள் பயிற்சி

  3

  6 நாட்கள்

  2

  உறுப்பினார்கள் பயிற்சி

  4

  4 நாட்கள்

  3

  கூட்டமைப்பு பிரதிநிதிகள் பயிற்சி

  4

  4 நாட்கள்

  4

  தொழில் முனைவோர் பயிற்சி

  7

  7 நாட்கள்

  சுய சார்பு தன்மை ( நிலைத்த தன்மை)
       தொண்டு நிறுவனத்தை சார்ந்த நிலை நீங்கி, குழுக்கள் சொந்த காலில் நிற்க,  குழுவும் தொண்டு நிறுவனமும், மகளிர் திட்ட அலுவலகமும் இணைந்து பாடுபாட வேண்டும்.
  ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு
  ஓரே ஊராட்சிகளில் செயல்பட்டு வரும் அனைத்து மகளிர் சுய உதவிக் குழுக்களும் இணைந்து கூட்டாகச் செயல்படும் ஜனநாயக அமைப்பே குழுக் கூட்டமைப்பாகும்.

   

  கூட்டமைப்பின் அவசியம்

  1. சுய உதவிக் குழுக்களை ஒருங்கிணைத்து வழி நடத்திட
  2. குழுக்களின் நிர்வாகத்தைச் சீரமைத்திட
  3. குழுக்களின் நிதி மேலாண்மையை மேம்படுத்திட கூட்டமைப்பு மிக அவசியம்

  கூட்டமைப்பின் செயற்குழு உறுப்பினர்கள்

  1. தலைவர்
  2. செயலாளர்
  3. இணைச் செயலாளர்
  4. பொருளாளர்

  கூட்டமைப்பு ஊக்கத் தொகை பெறுவதற்கான தகுதிகள்

  1. மறுசீரமைக்கப்பட்டு தமிழ்நாடு அரசு சங்கச் சட்டத்தின் கீழ் பதிவு செய்திருக்க வேண்டும்
  2. கூட்டமைப்பு தர மதிப்பீட்டில் தோ்ச்சி பெற்றிருக்க வேண்டும்
  3. தோ்ச்சி பெறும் கூட்டமைப்பிற்கு ரூ.1,00,000- ஊக்கத் தொகை வழங்கப்படும்.

  பொன்விழா கிராம சுய வேலை வாய்ப்பு திட்டம்
       பொன்விழா கிராம சுய வேலை வாய்ப்பு திட்டமானது வறுமையை ஒழிக்கும் முக்கிய நோக்கத்துடன் 1999 முதல் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.  வறுமையிலுள்ள குடும்பங்களின் நிலைத்த வாழ்வாதாரத்தினை ஏற்படுத்துவதே இத்திட்டத்தின் முக்கிய நோக்கமாகும்.  இத்திட்டத்தில் சுய உதவிக் குழுக்களுக்கான திறன் வளர்ப்பு பயிற்சி வங்கிக் கடன் அடிப்படை கட்டமைப்பு வசதிகள் மற்றும் சந்தைப்படுத்துதல் ஆகியவற்றிற்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. 

        பொன்விழா கிராம சுய வேலை வாய்ப்பு திட்டத்தின் நிதி சுழல்நிதி,  பொருளாதாரக் கடன் மற்றும் தனி நபர் கடன் ஆகியவற்றிற்கு மானியமாக வழங்கப்படுகிறது.   இத்திட்டத்தின் கீழ் சுழல்நிதி மானியமாக ரூ.15000- பொருளாதாரக் கடன் மானியமாக நபர் ஒன்றுக்கு ரூ.10000- வீதம் அல்லது திட்ட மதிப்பீட்டில் 50 விழுக்காடு அல்லது ரூ.125000- இதில் எது குறைவோ அத்தொகையே மானியமாக வழங்கப்படும்.

  நேரடி வங்கிக் கடன்

  1. நல்ல தரமான குழுக்களுக்கு சேமிப்பை அடிப்படையாகக் கொண்டு கடன் உதவியினை வங்கிகள் வழங்குகின்றன.
  2. இக்கடனுக்கு மானியம் கிடையாது
  3. நகரப்பகுதி, கிராமப் பகுதிகளைச் சார்ந்த அனைத்துக் குழுக்களுக்கும் இக்கடன் கிடைக்கும்.

  சுழல்நிதி

  1. முதல் கட்டத்தரம் பிரித்தலில் தோ்வு பெறும் குழுக்களுக்கு சுழல்நிதி வழங்கப்படுகிறது
  2. ரூ.60,000- சுழல்நிதி வழங்கப்படுகிறது
  3. சுழல்நிதிக்கான அதிகபட்ச மானியம் ரூ.15,000- ஆகும்

  பொருளாதாரக் கடன்

  1. இரண்டாம் கட்டத்தரம் பிரித்தலில் தோ்வு பெறும் குழுக்களுக்கு பொருளாதாரக் கடன் வழங்கப்படுகிறது
  2. எஸ்.ஜி.எஸ்.ஒய் திட்டத்தின் மூலம் மானியத்துடன் கூடிய தொழிற்கடன் வழங்கப்படுகிறது.
  3. ரூ.5,00,000- வரை குழுத் தொழில்கள் செய்வதற்காக வழங்கப்படுகிறது
  4. எஸ்.ஜி.எஸ்.ஒய் திட்டம் மூலம் குழுக்களுக்கு அதிகபட்ச மானியம் ரூ.1,25,000- ஆகும்.

  இளைஞர்களுக்கான தொழில் திறன் பயிற்சி

        வளர்ந்து வரும் பொருளாதார முன்னேற்றத்திற்கு ஏற்ப இளைஞர்களை தோ்வு செய்து தொழில் செய்வதற்கு தகுந்தவாறு தேவையான பயிற்சிகளை தொழில் பயிற்சி நிறுவனங்கள் மூலம் அளிப்பதாகும்.  மேலும் வளர்ந்து வரும் பொருளாதார முன்னேற்றத்திற்கு ஏற்றவாறு மனித வள மேம்பாட்டை உருவாக்குவதே இதன் முக்கிய குறிக்கோளாகும்.  வேலை வாய்ப்பு சந்தைக்கு ஏற்ப பயிற்சி நிறுவனங்களை தோ்வு செய்து இளைஞர்களுக்கு பயிற்சி அளித்தல் மற்றும் பயிற்சி முடிந்தவுடன் பயிற்சி பெற்றவர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கவும் இத்திட்டத்தின் மூலம் வழிவகை செய்யப்படுகிறது.
  மேலும் இளைஞர் தொழில் திறன் பயிற்சி 2006-07 முதல் தொடர்ந்து வழங்கப்பட்டு வருகிறது.  கடந்த மூன்று ஆண்டுகளில் 1250 இளைஞர்களுக்கு தொழில் திறன் பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது.
  பயிற்சி பிரிவுகள்

  1. கணிணி சார்ந்த பயிற்சிகள்
  2. கட்டுமானைப் பணிகளுக்கான பயிற்சி
  3. உணவு தயாரிப்பு மற்றும் மேலாண்மை பயிற்சி
  4. செவிலியர் பயிற்சி
  5. இலகு மற்றும் கனரக வாகன இயக்குதல் மற்றும் பராமரித்தல் பயிற்சி
  6. தீ பாதுகாப்பு மேலாண்மை
  7. தொழிற் பிரிவு பயிற்சிகள்
  8. அலுவலக மேலாண்மை பயிற்சி

  தொழில் பயிற்சி நிறுவனங்கள்

  1. பி.எஸ்.டி.எஸ் தொழிற் பயிற்சி நிறுவனம், தூத்துக்குடி
  2. பாண்டியன் ஓட்டுநர் பயிற்சி பள்ளி, கோவில்பட்டி
  3. சாண்டி தொழிற் பயிற்சி நிறுவனம், தூத்துக்குடி
  4. அப்டெக் கணிணி பயிற்சி நிறுவனம், தூத்துக்குடி
  5. சி.எம்.டி.இ.எஸ். கணிணி பயிற்சி நிறுவனம், தூத்துக்குடி
  6. இந்தியன் இன்ஸ்ட்டியூட் ஆப் பாராமெடிக்கல் சயின்ஸ், தூத்துக்குடி
  7. கோலிகிராஸ் கோம் சயின்ஸ் கல்லூரி, தூத்துக்குடி
  8. வெஸ் கணிணி பயிற்சி நிறுவனம், தூத்துக்குடி
  9. ஆஸ்கார் உணவு மேலாண்மை பள்ளி, கோவில்பட்டி
  10. மைக்ரோபாயிண்ட் தொழிற் பயிற்சி பள்ளி, கோவில்பட்டி
  11. இன்ஸ்டடியூட் ஆப் பைர் ஆன் சேப்டி மேலாண்மை, தூத்துக்குடி
  12. ஐ.எப்.ஆர்.டி, மதுரை
  13. புனித அன்னை செவிலியர் பயிற்சி, தூத்துக்குடி

       
  தொழில் மேம்பாட்டு பயிற்சி
  வளர்ந்து வரும் பொருளாதார முன்னேற்றத்திற்கு ஏற்ப நிலையான வருமானத்தை ஈட்டுவதற்கு மகளிர் சுய உதவிக் குழு உறுப்பினர்களுக்கு சிறந்த பயிற்சி நிறுவனங்கள் மூலம் பயிற்சி வழங்கப்படுகிறது.  தொழிற் பயிற்சி நிறுவனங்கள் மாவட்டத்திற்குள்ளேயே இருக்க வேண்டும்.  35 வயது முதல் 60 வயது வரையிலான வறுமைக்கோட்டு பட்டியலுள்ள நகர்ப்புற சுய உதவிக் குழு உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது.   நமது மாவட்டத்தில் கடந்த மூன்று ஆண்டுகளாக மெது பொம்மை தயாரிப்பு, கடல் வாழ் உணவு தயாரிப்பு, தையல் பயிற்சி, மசாலா பொருட்கள் தயாரிப்பு, அழகு கலைப் பயிற்சி, எம்ராய்டரி பயிற்சி, தோல் கை பை தயாரிப்பு ஆகிய பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகிறது.  மேற்படி பயிற்சிகள் மூலம் ரூ.17.01 இலட்சம் மதிப்பீட்டில் 477 சுய உதவிக் குழு உறுப்பினர்கள் பயன் பெற்றுள்ளார்கள்

அமைப்பு வெளியீடு - மாவட்ட ஆட்சியர் தூத்துக்குடி
ஆக்கம் தேசிய தகவலியல் மையம், தூத்துக்குடி