மாவட்ட அலுவலர்

மாவட்ட திட்ட அலுவலர்
ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித் திட்டம்

முகவரி

6 ஏ - டுவிபுரம் 9வது தெரு, தூத்துக்குடி

தொலைபேசி

0461-2300318

                             
         
 
        

        தூத்துக்குடி மாவட்டத்தில் ஒருங்கினைந்த குழந்தை வளர்ச்சி திட்ட பணிகள் 12 வட்டாரம் மற்றும் தூத்துக்குடி நகர்ப்புரம் சேர்த்து மொத்தம் 13 திட்டங்களாக செயல்படுத்தப்படுகிறது.  இம் மாவட்டத்தில் 1428 அங்கன்வாடி மையங்களும் 81 மினி மையங்களும் ஆக மொத்தம் 1509 மையங்கள் செயல்பட்டு வருகிறது.

ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட நோக்கம்.
“சமூக நலத்துறையின்” கீழ் செயல்படுத்தப்படும் இத்திட்டம் கிராம மக்களுக்கு ஊட்டச்சத்து, சுகாதார கல்வி ஆகியவற்றில் விழிப்புணர்வு ஏற்படுத்தி மக்கள் வாழ்க்கை தரத்தை மேம்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தோடு செயல்படுகிறது.  பிறக்கும் குழந்தைகள் அனைத்தும் 3.000 கி.கி பிறப்பு எடையுடன் பிறக்க வேண்டும் என்றும், ஊட்டச்சத்து குறைபாடின்றி பிறக்க வேண்டும் என்றும் கர்பிணிகள், பாலூட்டும் தாய்மார்கள், வளர்இளம் பருவத்தினர் இத்திட்டத்தில் தனிக்கவனம் செயல்படுத்தப்படுகின்றனர்.  கீழ் குறிப்பிட்டுள்ள பணிகள் இத்திட்டத்தின் முக்கிய பணிகளாக கொண்டு செயல்பட்டு வருகின்றது.

 • பிறந்தது முதல் 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளின் ஊட்டச்சத்து நலம்.
 • குறிப்பாக மூன்று வயதுக்குட்பட்ட குழந்தைகளிடையே ஊட்டச்சத்து குறைபாட்டை தடுத்தல்.
 • பெண்கள், குறிப்பாக கர்ப்பிணிகள் பாலூட்டும் தாய்மார்கள் மற்றும் வளர்இளம் பெண்கள் ஆகியோாின் ஊட்டச்சத்து நிலையை மேம்படுத்துதல்.
 • பெண்கள் மற்றும் வளர்இனம் பெண்கள் மத்தியில் குடும்பத்தில் ஊட்டச்சத்து சுகாதார பிரச்சனைகள் சம்பந்தமாக தேவையான பராமாிப்பு பற்றிய விழிப்புணர்வை மேலோங்கச் செய்தல்.
 • குறிப்பாக குழந்தைகள் பாலூட்டும் தாய்மார்கள் மற்றும் வயோதிகர்களின் மத்தியில் காணப்படும் ஊட்டச்சத்து குறைபாட்டை நீக்குதல்.

பணிகள்

பயனாளிகள்

 • இணை உணவு

6-36 மாத குழந்தைகள் கர்ப்பிணி தாய்மார்கள் பாலூட்டும் தாய்மார்கள்

 • தடுப்புசி

குழந்தைகள்
கர்ப்பிணி தாய்மார்கள்

 • மருத்துவ பரிசோதனை

0-6 மாத குழந்தைகள்
கர்ப்பிணி தாய்மார்கள்
பாலூட்டும் தாய்மார்கள்
வளர் இளம் பெண்கள்.

 • மருத்துவ பரிந்துரை

நோய்வாய்பட்ட குழந்தைகள்
தேவை மிகுந்த கர்பிணிகள்

 • முன்பவருக்கல்வி

2+to 4 + வயதினர்
(கிராமத்தில் மக்கள் பணிக்கு செல்ல அங்கன்வாடி மையம் காப்பகமாக செயல்படுத்தப்படுகிறது)

 • சத்துணவு / சுகாதார கல்வி

2+to 4 + வயது குழந்தைகளுக்கு மதிய உணவு வாரம் மூன்று முட்டையுடன் அளிக்கப்படுகிறது.  தாய்மார்கள் மற்றும் வளர்இளம் பெண்களுக்கு பெண்கள் மற்றும் வளர் இளம் மகளிர் குழு கூட்டங்கள் மூலம் சுகாதார கல்வி வழங்கப்படுகிறது.

        குழந்தை மையத்திற்கான வரையறை


அங்கன்வாடி மையம்

ஜனத்தொகை 450 முதல் 800 (அ) 1000 (கிராமம்)

மினி அங்கன்வாடி மையம்

ஜனத்தொகை 250 முதல் 400 (குக்கிராமம்)

மைய பணி நேரம்


8.00 மு.ப – 9.00 மு.ப

-

இணை உணவு

10.30 மு.ப – 12.30 பி.ப

-

முன் பருவக் கல்வி

12.30 பி.ப – 1.30 பி.ப

-

மதிய உணவு

1.30 பி.ப – 3.00 பி.ப

-

குழந்தைகள் உறங்க வைத்தல் மற்றும் வீடுகளுக்கு சென்று பார்வையிடல்

3.00 பி.ப – 4.00 பி.ப

-

வெளி விளையாட்டு மற்றும் வீடு திரும்பல்

ஒவ்வொரு நாளும் மதிய உணவாக வழங்கப்படும் உணவு விபரம்


திங்கள் கிழமை

கலவை சாதம் மற்றும் முட்டை

செவ்வாய் கிழமை

கலவை சாதம் மற்றும் கொண்டக்கடலை அல்லது பாசிப்பயிறு

புதன் கிழமை

கலவை சாதம் மற்றும் முட்டை

வியாழக் கிழமை

கலவை சாதம் மற்றும் முட்டை

வெள்ளிக் கிழமை

கலவை சாதம் மற்றும் உருளைக்கிழங்கு

சனிக்கிழமை

கலவை சாதம்

ஞாயிற்றுக் கிழமை

கலவை சாதம்

 

 

 

சிறப்பு உணவு – தலைவர்கள் பிறந்த நாள் (சர்க்கரை பொங்கல்)


ஜனவாரி 17

-

புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர்

பிப்ரவரி 24

-

மாண்புமிகு தமிழக முதல்வர்

ஜுலை 15

-

பெருந்தலைவர் காமராஜர்

செப்டம்பர் 15

-

பேரறிஞர் அண்ணா

ICDS – சிறப்பு நாட்கள்


மார்ச் 8

-

மகளிர் தினம்

ஆகஸ்ட் முதல் வாரம்

-

உலக தாய்ப்பால் வாரம்

செப்டம்பர் முதல் வாரம்

-

ஊட்டச்சத்து வாரம்

நவம்பர் 14

-

குழந்தைகள் தினம்

அக்டோபர் 21

-

அயோடின் தினம்

இணை உணவு தயாரித்தல்
அங்கன்வாடி மையங்களில் வழங்கப்படும் இணை உணவு திருச்செந்தூர் வட்டாரத்தில் செயல்பட்டு வரும் வீரபாண்டியன் பட்டிணம் இணை உணவு தயாரிப்போர் மகளிர் மேம்பாட்டுத் தொழில் கூட்டுறவு சங்கம் மூலம் தயாரிக்கப்படுகிறது.  தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அனைத்து குழந்தை மையங்களுக்கு தேவைபடும் இணை உணவு இச்சங்கத்தின் மூலம் தயாரிக்கப்பட்டு வழங்கப்பட்டு வருகிறது.


இணை உணவு பெறுவோர்

-

6 வயது வரையிலான குழந்தைகள், கர்ப்பிணி தாய்மார்கள் மற்றும் பாலூட்டும் தாய்மார்கள்

கலோரிகள்

-

380

புரதச்சத்து

-

8.5 கிராம்

வளர் இளம் பெண்கள் திட்டம்
11 முதல் 18 வயதினையுடைய வளர் இளம் பெண்கள் பயனடையும் வகையில் கிஷோர் சக்தி யோஜனா (KSY) என்ற திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.  இத்திட்டத்திற்கான பயனாளிகளை வட்டார அளவில் குழந்தை வளர்ச்சித் திட்ட அலுவலர்களும் மாவட்ட அளவில் மாவட்ட திட்ட அலுவலரும் தேர்வு செய்கிறார்கள்.
கீழ்கண்டவைகள் இத்திட்டத்தின் பிரதான நோக்கமாகும்.

 • சுகாதார விழிப்புணர்வினை ஏற்படுத்திட 2 நாட்கள் முகாம் நடத்துதல்.
 • சுய தொழில் மேம்பாட்டிற்கான 38 நாட்கள் சுய தொழில் பயிற்சி பட்டறைகள் நடத்துதல்.

 

 

ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித் திட்டம்


வ. எண்

திட்டத்தின் பெயர் மற்றும் விவரம்

உதவி பெறுவதற்குரிய தகுதிகள்

தொடர்பு அலுவலரின் பதவி

(1)

ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித் திட்டம் நலப் பணிகளின் விவரம்

 • மூன்று வயதிற்கு உட்பட்ட குழந்தைகளுக்கு எடை எடுத்து வளர்ச்சி நிலையை கண்காணித்து உயர்த்துதல்.
 • குழந்தைகள் கர்ப்பிணிகள், பாலூட்டும் தாய்மார்களுக்கு இணை உணவளித்தல்.
 • கர்ப்பகால முன்/பின் பராமரிப்பு
 • 3-6 வயது குழந்தைகளுக்கு மதிய உணவு மற்றும் மழலையர் கல்வி.
 • சுகாதார பணியாளர்கள் (கிராம நல செவிலியர் மருத்துவ அலுவலர்) மூலம் நலப்பணிகள்.
 • 12-24 மாத குழந்தைக்கு புதன் கிழமை வேகவைத்த முட்டை

பிறந்தது முதல் 36 மாத குழந்தைகள்
37 மாதம் முதல் 60 மாத குழந்தைகள்

 • கர்ப்பிணிகள்
 • பாலூட்டும் தாய்மார்கள்
 • வளாிளம் பெண்கள்
 • முதியோர்
 • கிராம அளவில் - அங்கன்வாடிப் பணியாளர்
 • வட்டார அளவில் - குழந்தை வளர்ச்சித் திட்ட அலுவலர்
 • மாவட்ட அளவில் - மாவட்ட திட்ட அலுவலர் (ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித் திட்டம்) 0461-2300318
 • இயக்குனர்

ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித் திட்டப்பணிகள் துறை தரமணி, சென்னை-113. தொலைபேசி : 245451771, 24540772 நிகரி 24540980

(2)

புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் சத்துணவுத் திட்டம் – நலப்பணியின் விவரம் 25-60 மாத குழந்தைகளை

 • திங்கட்கிழமை – வேகவைத்த ஒரு முட்டை
 • செவ்வாய் கிழமை 20 கிராம் வேக வைத்த கருப்புக் கொண்டைக் கடலை (அ) பச்சைப்பயிறு
 • புதன் கிழமை – வேக வைத்த ஒரு முட்டை
 • வியாழக் கிழமை – வேக வைத்த ஒரு முட்டை
 • வெள்ளிக் கிழமை – 20 கிராம் வேக வைத்த உருளைக்கிழங்கு
 • ஓய்வூதியம் பெறும் முதியோர்களுக்கு அங்கன்வாடி மையங்களில் சத்துணவு (2 கிலோ அரிசி பெறும் முதியோர்)

25 மாதம் முதல்

60 மாதம் வரையிலான குழந்தைகள்

 • கிராம அளவில் - அங்கன்வாடிப் பணியாளர்
 • வட்டார அளவில் - குழந்தை வளர்ச்சித் திட்ட அலுவலர்
 • மாவட்ட அளவில் - மாவட்ட திட்ட அலுவலர் (ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித் திட்டம்) 0461-2300318
 • இயக்குனர்

ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித் திட்டப்பணிகள் துறை தரமணி, சென்னை-113. தொலைபேசி : 245451771, 24540772 நிகரி 24540980

அமைப்பு வெளியீடு - மாவட்ட ஆட்சியர் தூத்துக்குடி
ஆக்கம் தேசிய தகவலியல் மையம், தூத்துக்குடி