பின்னால் செல்லவும்

தோட்டக்கலை
மாவட்டத்தலைமை அலுவலகம்
மற்றும் அலுவலர்

:

தோட்டக்கலை துணை இயக்குநர்

முகவரி

:

தூத்துக்குடி மாவட்ட மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலக வளாகம், கோரம்பள்ளம்

தொலைபேசி

:

0461 – 2340681

நிகரி

:

0461 – 2340681

 

இருப்பிடம்

      தமிழ்நாட்டில் தூத்துக்குடி மாவட்டம் தென்கிழக்கு மூலையில் உள்ளது. இதன் எல்கையாக கிழக்கு மற்றும் தென்கிழக்கில் மன்னார் வளைகுடாக்கடலும், மேற்கே திருநெல்வேலி மாவட்டமும், வடக்கே விருதுநகர் மாவட்டம், திருநெல்வேலி மாவட்டம் மற்றும் இராமநாதபுரம் மாவட்டமும்  அமைந்துள்ளது.

      இம்மாவட்டத்தின் மொத்த நிலப்பரப்பு 4621 ச.கிலோ மீட்டர் ஆகும். இதன் தலைமையிடம் தூத்துக்குடி நகர்புறத்தில் அமைந்துள்ளது.

பருவ நிலை

      தூத்துக்குடி மவாட்டத்தின் பருவநிலை அதிக பட்ச வெப்பநிலை 35.60 சென்டிகிரேட்டும். குறைந்தபட்ச வெப்பநிலை 24.050 சென்டிகிரேட்டு ஆகும். இம் மாவட்டத்தின் பருவநிலை வேளாண்மை மற்றும் தோட்டக்கலைப் பயிர் சாகுபடிக்கு உகந்தாக அமைந்துள்ளது.


வேளாண் பருவநிலை பகுதி

      ஆண்டு மழையளவு நீர்ப்பாசன முறை, மண் வளம், பயிர் சாகுபடி முறை, சமூக பொருளாதார சுற்றுப்புற சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு பார்க்கும் போது 100 சதம் இப்பகுதி தென் வேளாண் பருவநிலை பகுதியாக (South Zone) அமைந்துள்ளது.

புவியியல் அமைப்பு

      இம்மாட்டத்தில் மொத்தப்பரப்பு 4,70,723 ஹெக்டர் ஆகும். இம்மாவட்டத்தின் தாலூகா, வட்டாரம் மற்றும் கிராமப்பஞ்சாயத்துக்கள் விபரம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

1.    தாலூகா (வட்டம்) 8 எண்ணிக்கைகள் அவையாவன
1. தூத்துக்குடி,      2 திருச்செந்தூர்
3 கோவில்பட்டி,    4 ஓட்டப்பிடாரம்,
5. விளாத்திகுளம், 6 எட்டையாபுரம்
7. சாத்தான்குளம்   8. ஸ்ரீவைகுண்டம்
2.    வட்டாரம்        12 எண்ணிக்கைகள்
1. தூத்துக்குடி,      2 ஓட்டப்பிடாரம்,
3. ஸ்ரீவைகுண்டம் 4 கருங்குளம்
5 திருச்செந்தூர்   6 உடன்குடி
7. சாத்தான்குளம்  8. ஆழ்வார்திருநகரி
9. கோவில்பட்டி,         10. கயத்தார்
11. விளாத்திகுளம், 12. புதூர்

3.    வருவாய் கிராமங்கள்   480

4.    கிராமப்பஞ்சாயத்துக்கள் 408

5.    நகரப் பஞ்சாயத்துகள்   19
6.    ஆறுகள்                1. கோரம்பள்ளம் ஆறு    2. சாலிகுளமாறு
3. உப்பத்தூரர்            4. உப்போடை
5. வைப்பார்             6. வேம்பார்
7.கருமேனி              8. தாமிரபரணி
நில வகைப்பாடு

வ.எண்

வகை

பரப்பு
(ஹெக்டரில்)

1

2

3

4

5

 

6

7

8
­
9

காடுகள்

சாகுபடியல்லாத நிலங்கள்

வேளாண்மை அல்லாத
பயன்பாட்டு நிலங்கள்

சாகுபடிக்குரிய தரிசு

புல்வெளி மற்றும் மேய்ச்சல் நிலங்கள்

மரப்பயிர்கள்

நடப்பு சாகுபடி தரிசு

பிறவகை தரிசு

சாகுபடியாகும் மொத்த நிலம்

மொத்த நிலப்பரப்பு

11012

19.878

76475

48015

5132

38034

10.238

77.217

184.723

470724


மழையளவு

      தூத்துக்குடி மாவட்டம் குறைந்த மழையளவுப் பகுதியாகவே அமைந்துள்ளது. வருடாந்திர மழையளவு சராசரியாக 662. மி.மீ. வடகிழக்கு மழையால் 65சத மழையளவும், குளிர்காலத்தில் 9சத மழையளவும், கோடையில் 17சத மழையளவும், தென் மேற்கு பருவகால மழையில் 9சதம் இதில் அடங்கும்.

தூத்துக்குடி மாவட்டத்தில் தோட்டக்கலைப் பயிர்கள் சாகுபடி ஓர் பார்வை

      தூத்துக்குடி மாவட்டம் இயற்கையிலேயே மலைப்பயிர்களைத் தவிர ஏனைய தோட்டக்கலைப் பயிர்கள் சாகுபடிக்கு உகந்தது.

மொத்த சாகுபடி பரப்பு                      -     1,84,723
தோட்டக்கலைப் பயிர்கள் சாகுபடிப் பரப்பு     -     41,609
மொத்த சாகுபடிப் பரப்பின் தோட்டக்கலைப்   -     22.50%
பயிர்கள் சாகுபடி சதவீதம்


வ.
எண்

விபரம்

பரப்பு
(ஹெக்டரில்)

உற்பத்தி அளவு   (மெ.டன்)

1

பழவகைகள்

11680

525600

2

காய்கறிப்பயிர்கள்

4243

10675

3

சுவைதாளித மற்றும்    
நறுமணமூட்டும் பயிர்கள்

20461

75092

4

மலைத்தோட்டப் பயிர்கள்

3994

12501

5

மலர் வகைப்பயிர்கள்

367

2818

6

மருத்துவ மற்றும் மூலிகைப்
பயிர்கள்

864

864

 

மொத்தம்

41609

627550


                                    

  1. ஒருங்கிணைந்த தோட்டக்கலை அபிவிருத்தித் திட்டம் (Integrated Horticulture Development Scheme) :-

      இத்திட்டம் மாநில அரசின் ஒரு திட்டமாகும். இதன் கீழ் 50சத மானிய விலையில் காய்கறி விதைகள் மற்றும் பழமரச்செடிகளின் ஒட்டுகன்றுகள் எல்லா விவசாயிகளுக்கும் விநியோகிக்கப்படுகிறது.

  1. காய்கறி சாகுபடிக்காக ஒரு விவசாயிக்கு அதிகபட்சமாக 0.5 எக்டர் பரப்புக்கு மான்யம் வழங்கப்படுகிறது.
  2. பழமரச்செடிகளின் ஒட்டுகன்றுகள் சாகுபடிக்காக ஒரு விவசாயிக்கு அதிகபட்சமாக 1 எக்டர் பரப்புக்கு மான்யம் வழங்கப்படுகிறது.

வ.எண்

வருடம்

பொருள் இலக்கு (ஹெக்)

நிதி இலக்கு

பயனாளிகள்
எண்ணிக்கைகள்

இலக்கு

சாதனை

இலக்கு

சாதனை

1

2009 – 2010

1400

1404

20.00

20.00

1753

2

2010 – 2011

1643

1126

19.72

19.72

2148

3

2011 - 2012

1162

1162

20.00

19.99

2140

2.    தேசிய நுண்ணீர் பாசன இயக்கம் (National Mission on Micro Irrigation)
இது மத்திய அரசின் நிதி உதவியுடன் மத்திய அரசும், மாநில அரசும் இணைந்து செயல்படுத்தும் திட்டமாகும். இத்திட்டத்தில் சிறு மற்றும் குறு விவசாயிகளுக்கு 100% மானியத்திலும், இதர விவசாயிகளுக்கு 75% மானியத்திலும், 25.11.2011 முதல் நுண்ணீர்ப்பாசன வசதி விவசாயிகளுக்கு செய்து கொடுக்கப்பட்டுள்ளது. திட்ட செயலாக்க முகமையின் மூலம் மாவட்ட ஆட்சியரைத் தலைவராகக் கொண்டு தூத்துக்குடி மாவட்டத்தில் செயல்படுத்தப்படுகிறது. நடப்பு நிதியாண்டில் தூத்துக்குடி மாவட்டத்தில் 600 ஹெக்டோ் சாகுபடிபரப்பில் இத்திட்டத்தை செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.


வ.எண்

வருடம்

பொருள் இலக்கு (ஹெக்)

நிதி இலக்கு

பயனாளிகள்
எண்ணிக்கைகள்

இலக்கு

சாதனை

இலக்கு

சாதனை

1

2009 – 2010

400

384

92.00

92.396

302

2

2010 – 2011

505

523.40

133.0

133.47

379

3

2011 - 2012

600

432.44

135.00

135.75

328

 

3.     தேசிய வேளாண்மை வளர்ச்சித் திட்டம் – துல்லிய பண்ணையம் (National Agriculture Development Programme – Precision Farming) :-

      இத்திட்டமானது முக்கிய தோட்டக்கலை பயிர்களில் நுண்ணீர் பாசனம் மூலம் நீரில் கரையும் உரங்களை இடுவதன் மூலம் விளைச்சலை அதிகரித்து, விவசாயிகளுக்கு அதிக வருமானம் தருவதற்கு உருவாக்கப்பட்டது. இத்திட்டமானது ஒரு கிராமத்தில் குறிப்பிட்டபரப்பை தொகுப்பாகக் கொண்டு செயல்படுத்தப்படுகிறது. இத்திட்டமானது 2007-08 ஆம் ஆண்டு முதல் வாழை மற்றும் வீரிய ஒட்டுரக காய்கறி பயிர்களில் சொட்டுநீர் பாசனம் மூலம் நீரில் கரையும் உரங்களை இடுவதன் மூலம் விளைச்சலை அதிகரிக்க இம்மாவட்டத்தில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் மூலம் விவசாயிகள் நல்ல தரமுள்ள உயர் விளைச்சலையும், ஒரே நேரத்தில் முதிர்வடையும் நிலையையும் பெற்று அதிக வருவாய் பெறலாம்.


வ.எண்

வருடம்

பொருள் இலக்கு (ஹெக்)

நிதி இலக்கு

பயனாளிகள்
எண்ணிக்கைகள்

இலக்கு

சாதனை

இலக்கு

சாதனை

1

2009 – 2010

100

100

43.70

43.70

110

2

2010 – 2011

160

75

33.60

21.486

80

3

2011 - 2012

20

20

4.00

3.60

20

4.    தமிழ்நாடு நீர்வள நிலவள மேம்பாட்டுத் திட்டம்
(TN- IAMWARM Project)
உலக வங்கி நிதி உதவியுடன் மாநில அரசால் செயல்படுத்தப்படும் இத்திட்டமானது தூத்துக்குடி மாவட்டத்தில் கண்மாய்ப்பாசனப் பகுதியில் தோட்டக்கலைப்பயிர்கள் மற்றும் அனைத்துப் பயிர்களின் உற்பத்தியை குறைந்த அளவு நீரைப் பயன்படுத்தி அதிக அளவு உற்பத்தி செய்வது என்ற நோக்கில் செயல்படுத்தப்பட்டு வரப்படுகிறது.
இத்திட்டம் இம்மாவட்டத்தில் கோரம்பள்ளமாறு, சாலிகுளமாறு, உப்பத்தூரர், வைப்பார், வேம்பார், உப்போடை, கருமேனியாறு ஆகிய உபவடி நிலப்பகுதிகளில் செயல்படுத்தப்பட்டு வரப்படுகிறது. வீரிய ஒட்டு காய்கறி சாகுபடியை ஊக்குவிக்கவும், இதர தோட்டக்கலைப்பயிர்களின் விளைவை மேம்படுத்தும் விதமாக இத்திட்டம் செயல்படுத்தப்பட்டு வரப்படுகிறது.


வ.எண்

வருடம்

பொருள் இலக்கு
(ஹெக்)

நிதி இலக்கு
(.லட்சததில்)

பயனாளிகள்
எண்ணிக்கைகள்

இலக்கு

சாதனை

இலக்கு

சாதனை

1

2009 – 2010

18

18

2.025

2.02

30

2

2010 – 2011

236

236

37.49

37.315

405

3

2011 - 2012

247

247

30.206

30.206

119


5.     தேசிய மூலிகை பயிர்கள் இயக்கம் (National Mission on Medical Plants)

      இத்திட்டமானது தேசிய மருத்துவப் பயிர்கள் வாரிய நிதி உதவியுடன் தோட்டக்கலைத் துறை மூலம் மாவட்ட அளவில் மாவட்ட ஆட்சியரைத் தலைவராகக் கொண்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டமானது தூத்துக்குடி மாவட்டத்தில் சென்னா சாகுபடியை ஊக்குவிக்க 20 சத மான்யத்தில் ஒரு எக்டருக்கு ரூ.5000 அதிக பட்சமாக விவசாயிகளுக்கு வழங்கப்படுகிறது.


வ.எண்

வருடம்

பொருள் இலக்கு (ஹெக்)

நிதி இலக்கு

பயனாளிகள்
எண்ணிக்கைகள்

இலக்கு

சாதனை

இலக்கு

சாதனை

1

2009 – 2010

160

160

8.00

8.00

87

2

2010 – 2011

300

300

15.00

15.00

226

3

2011 – 2012

215

215

10.75

10.75

227

6.     உயர் தொழில் நுட்பம் மூலம் உற்பத்தியை அதிகரிக்கும் திட்டம் (Hi-Tech Productivity Enhancement Programme)

      இத்திட்டமானது 2009-10ஆம் ஆண்டு முதல் தூத்துக்குடி மாவட்டத்தில் செயல்படுத்தப்படுகிறது. இத்திட்டத்தில் உயர் தொழில் நுட்பம் மூலம் உற்பத்தியை அதிகரிக்க மா அடர்நடவு, திசுவளர்ப்பு வாழை வளர்ப்பு, பலா அடர்நடவு, எலுமிச்சை பதியன்கள் நடவு போன்ற தொழில்நுட்பங்களை அறிமுகப்படுத்தி விவசாயிகளின் வருமானத்தை அதிகரிக்க வழிவகை உள்ளது. இதனைப் போன்று வீரிய ஒட்டுரக காய்கறி விதைகள் மற்றும் பயிர்பாதுகாப்பு மருந்துகள், பயிர்பாதுகாப்பு கருவிகள் வழங்கவும் இத்திட்டத்தில் வழிவகை உள்ளது. இத்திட்டமானது 50 சத மான்யத்தில் செயல்படுத்தப்படுகிறது.

 

வ.எண்

வருடம்

பொருள் இலக்கு (ஹெக்)

நிதி இலக்கு

பயனாளிகள்
எண்ணிக்கைகள்

இலக்கு

சாதனை

இலக்கு

சாதனை

1

2009 – 2010

1582

1582

118.65

118.65

720

2

2010 – 2011

500

229

122.50

17.175

176

3

2011 – 2012

409

236

56.56

28.967

178

 

7.     தேசிய வேளாண் காப்பீடு திட்டம் (National Agriculture Insurance Scheme) :-

      விவசாயிகளுக்கு இயற்கை இடர்பாடுகள் மற்றும் பூச்சி மற்றும் நோய்தாக்குதலினால் மகசூல் குறைபாடு ஏற்படும்போது, இழப்பீடு வழங்க ஏற்படுத்தப்பட்ட திட்டமாகும் இத்திட்டத்தில் தோட்டக்கலைப் பயிர்களான வாழை பயிருக்கு குறிப்பிட்ட பிர்காவுக்கு அறிவிப்பு செய்து, சிறு மற்றும் குறு விவசாயிகளுக்கு 55 சத மான்யத்திலும் இதர விவசாயிகளுக்கு 50 சதமான்யத்திலும் பிரீமியம் செலுத்த வழிவகை செய்யப்பட்டுள்ளது. மிளகாய் பயிருக்கு வட்டார அளவில் அறிவிப்பு செய்து சிறு மற்றும் குறு விவசாயிகளுக்கு 55 சத மான்யத்திலும், இதர விவசாயிகளுக்கு 50 சத மான்யத்திலும் பிரீமியம் செலுத்த வழிவகை செய்யப்பட்டுள்ளது.  


வ.எண்

வருடம்

பொருள் இலக்கு (ஹெக்)

நிதி இலக்கு

பயனாளிகள்
எண்ணிக்கைகள்

இலக்கு

சாதனை

இலக்கு

சாதனை

1

2009 – 2010

1110

530

7123

3.41

286

2

2010 – 2011

950

2691

37.50

20.42

1786

3

2011 – 2012

950

2550

37.59

28.06

2449


அமைப்பு வெளியீடு - மாவட்ட ஆட்சியர் தூத்துக்குடி
ஆக்கம் தேசிய தகவலியல் மையம், தூத்துக்குடி