பின்னால் செல்லவும

அலுவலகத்தின் பெயர்

கைத்தறி மற்றும் துணிநூல் துறை          

 

முகவரி

கைத்தறி மற்றும் துணிநூல்                                       உதவி இயக்குநர் அலுவலகம்
எண்.1ஏ, 27வது குறுக்குத் தெரு,

(பாம்பே தியேட்டர் எதி்ர்புறம்)
மகாராஜநகர்,
திருநெல்வேலி – 627 011.

      
தொலைபேசி எண்                                      

 

0462-2572980.

 

கைத்தறி மற்றும் துணிநூல் துறை, திருநெல்வேலி
தூத்துக்குடி மாவட்டம்

            தூத்துக்குடி மாவட்டத்தில் 16 கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கங்கள் இயங்கி வருகின்றன.  இவற்றில் 15 நெசவாளர் கூட்டுறவு சங்கங்கள் 660 தறிகளுடன் செயல்பட்டு வருகின்றன.  ஒரு நெசவாளர் கூட்டுறவு சங்கம் செயலிழந்த நிலையில் உள்ளது.  கைத்தறி நெசவாளர்கள் விலையில்லா சேலைகள் மற்றும் பருத்தி சேலைகளை உற்பத்தி செய்து வருகின்றனர்.

கைத்தறி துறையினால் செயல்பட்டு வரும் நலத்திட்டங்கள்

  1. விலையில்லா வேட்டி சேலை திட்டம்

 
விலையில்லா வேட்டி சேலை திட்டத்தின்கீழ் வழங்குவதற்காக சேலை மற்றும் வேட்டிகள் கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கங்களால் உற்பத்தி செய்யப்பட்டு கோ-ஆப்டெக்ஸ் மூலம் கொள்முதல் செய்யப்பட்டு வட்டாட்சியர் அலுவலகங்களுக்கு விநியோகத்திற்காக அனுப்பி வைக்கப்படுகிறது.

 

வருடம்

கைத்தறி சேலைகள்

குறியீடு

எய்தியது

2008-2009

1,50,000

1,50,639

2009-2010

1,60,200

1,47,036

2010-2011

95,500

95,367

2011-2012

1,26,000

1,27,872

2012-2013 63,000 50,000

 

1.(அ) பள்ளிக் குழந்தைகளுக்கான விலையில்லா சீருடை வழங்கும் திட்டம்

பள்ளி குழந்தைகளுக்கான விலையில்லா சீருடை வழங்கும் திட்டத்தின்கீழ் வழங்குவதற்காக சீருடை கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கங்களால் உற்பத்தி செய்யப்பட்டு சமூக நலத்துறை அலுவலகங்களுக்கு விநியோகத்திற்காக அனுப்பி வைக்கப்படுகிறது.

 

வருடம்

சீருடை - காடா

குறியீடு (மீ)

எய்தியது (மீ)

2008-2009

30,000

26,858

2009-2010

30,000

43,049

2010-2011

24,000

34,658

2011-2012

23,700

24,480

2012-2013 78,000 54,000

                                                           

  1. சேமிப்பு மற்றும் பாதுகாப்புத் திட்டம்

 கைத்தறி நெசவாளர்களின் சேமிக்கும் பழக்கத்தினை ஊக்குவிக்கும் பொருட்டு தமிழக அரசால் 1975-ம் ஆண்டு முதல் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.  1985-86-ம் ஆண்டு மத்திய அரசும் இத்திட்டத்தில் பங்கு கொண்டுள்ளது.  இத்திட்டத்தின்கீழ் நெசவாளர் தான் பெறும் கூலியில் 8 பைசா தனது பங்களிப்பாகவும், 8 பைசா அரசு பங்களிப்பாகவும் பெறுகிறார்.  மேலும் தமிழக அரசு இத்திட்டத்தில் சோ்ந்துள்ள தொகைக்கு 6.5 சதவீதம் வருடந்தோறும் வட்டி வழங்கி வருகிறது.  முதியோர் மற்றும் குடும்ப ஓய்வூதியத் திட்டத்திற்கு அடிப்படையாக இத்திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

  1. முதியோர் ஓய்வூதியத் திட்டம்

                         சேமிப்பு மற்றும் பாதுகாப்புத் திட்டத்தில் சோ்ந்து 2 வருடங்களுக்கு மேல் தொடர்ந்து செயல்பட்டு, 60 வயதினை பூர்த்தி அடைந்த நெசவாளர்களுக்கு 1.4.1997 முதல் இத்திட்டத்தின்கீழ் மாதந்தோறும் ரூ.200 வீதம் முதியோர் ஓய்வூதியமாக வழங்கப்பட்டு வருகிறது.  1.6.2007 முதல் இத்தொகை ரூ.400-ஆக உயர்த்தி வழங்கப்பட்டு தற்போது 1.1.2012 முதல் இத்தொகை ரூ.1,000-ஆக வழங்கப்பட்டு வருகிறது.

                                                                                                                                                

வருடம்

திட்டத்தின்கீழ் உள்ள
பயனாளிகள்

இவ்வருடம் சோ்க்கப்பட்ட / காலமான பயனாளிகள்

மொத்தம்

2008-2009

718

85/51

752

2009-2010

752

73/42

783

2010-2011

783

67/26

824

2011-2012

824

71/47

848

2012-2013 815 -/33 815

                     

  1. குடும்ப ஓய்வூதியத் திட்டம்

         சேமிப்பு மற்றும் பாதுகாப்புத் திட்டத்தில் சோ்ந்து 2 வருடங்களுக்கு மேல் தொடர்ந்து செயல்பட்டு வருகின்ற உறுப்பினர்களை இத்திட்டத்தில் உறுப்பினராக சோ்க்கப்படுகின்றனர்.  இத்திட்டத்தின்கீழ் உறுப்பினராக உள்ள நெசவாளர் 60 வயது பூர்த்தி அடைவதற்கு முன் காலமானால், அவருடைய வாரிசுதாரருக்கு காலமான நாள் முதல் 10 ஆண்டுகளுக்கு அல்லது காலமான நெசவாளர் 60 வயதினை எய்தும் நாள் இதில் எது அதிக பயனளிக்குமோ அவ்வழியில் மாதந்தோறும் ரூ.550 வீதம் 1.5.2007 முதல் வழங்கப்பட்டு வருகிறது.  தற்போது இத்தொகை 1.1.2012 முதல் ரூ.1,000-ஆக வழங்கப்பட்டு வருகிறது.

 

வருடம்

திட்டத்தின்கீழ் உள்ள
பயனாளிகள்

இவ்வருடம் சோ்க்கப்பட்ட பயனாளிகள்

மொத்தம்

வழங்கப்பட்ட தொகை (இலட்சத்தில்)

2008-2009

14

3

17

1.30

2009-2010

17

4

21

2.65

2010-2011

21

4

25

2.85

2011-2012

25

4

29

3.20

2012-2013 24 -/5 24 2.88
  1. மகாத்மா காந்தி புங்கர் பீமா யோஜனா திட்டம்

புங்கர் பீமா யோஜனா திட்டம் மத்திய மாநில அரசுகளால் 2004-05-ம் ஆண்டு முதல் செயல்படுத்தப்பட்டு வருகிறது.  2.10.2006 முதல் மகாத்மா காந்தி புங்கர் பீமா யோஜனா திட்டம் என பெயர் மாற்றம் செய்யப்பட்டு, இத்திட்டத்தில் உறுப்பினராக உள்ள நெசவாளர்களுக்கு கீழ்க்கண்டவாறு காப்பீட்டுத் தொகை வழங்கப்பட்டு வருகிறது.

                                                                                                                

இயற்கை மரணம்                 ரூ. 60,000
விபத்து மரணம்                   ரூ.1,50,000
முழுமையான செயல்பாடு இழத்தல் ரூ.1,50,000
பகுதி செயல்பாடு இழத்தல்          ரூ. 75,000


வருடம்

பயன்பெற்ற பயனாளிகள்

வழங்கப்பட்ட தொகை (இலட்சத்தில்)

2008-2009

3

1.80

2009-2010

1

0.60

2010-2011

5

3.00

2011-2012

12

7.20

2012-2013 10 6.00

இத்திட்டத்தின்கீழ் உறுப்பினராக உள்ள நெசவாளர்களின் 9 முதல் 12-ம் வகுப்பு வரை பயின்று வரும் 2 குழந்தைகளுக்கு வருடம் ஒன்றுக்கு ரூ.1,200 வீதம் கல்வி உதவித் தொகையாக சிக் ஷா சகயோக் யோஜனா திட்டத்தின்கீழ் வழங்கப்பட்டு வருகிறது.


வருடம்

பயன்பெறும் குழந்தைகளின் எண்ணிக்கை

வழங்கப்பட்ட தொகை (இலட்சத்தில்)

2008-2009

340

3.78

2009-2010

250

2.25

2010-2011

250

1.32

2011-2012

814

4.88

2012-2013 791 --
                 
  1. கைத்தறி மற்றும் விசைத்தறி நெசவாளர்களுக்கு இலவச மின்சாரம்  வழங்கும் திட்டம்

      தமிழக அரசால் 1.8.2006 முதல் செயல்படுத்தப்பட்டு வரும் இத்திட்டத்தின்கீழ் கைத்தறி நெசவாளர்களுக்கு இரு மாதங்களுக்கு 100 யூனிட்டுகள் மற்றும் விசைத்தறி நெசவாளர்களுக்கு 500 யூனிட்டுகள் இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது.  இத்திட்டத்தின்கீழ் 1321 பயனாளிகள் பயன்பெற்று வருகின்றனர்.

  1. கைத்தறி நெசவாளர்களுக்கான நலக்காப்பீட்டுத் திட்டம் 

மத்திய அரசினால் 2005-06-ம் ஆண்டு முதல் ஐசிஐசிஐ லொம்பார்டு நிறுவனம் மூலம் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.  இத்திட்டத்திற்கு வருடம் ஒன்றுக்கு ஒரு நெசவாளர்களுக்கு ரூ.939.76 பிரிமியமாக செலுத்தப்பட்டு வருகிறது.  இதில் மத்திய அரசு தனது பங்காக ரூ.769.36-ம் மாநில அரசு நெசவாளரின் பங்கிற்காக ரூ.170.40-ம் செலுத்தி வருகின்றனர்.  இத்திட்டத்தின்கீழ் வருடம் ஒன்றுக்கு ரூ.15,000-க்கு மிகாமல் நெசவாளர் குடும்பத்தை சோ்ந்த உறுப்பினர், கணவர், மனைவி மற்றும் இரு குழந்தைகள் தங்களது மருத்துவ சிகிச்சையினை மேற்கொண்டு பயன்பெறலாம்.

 
அமைப்பு வெளியீடு - மாவட்ட ஆட்சியர் தூத்துக்குடி
ஆக்கம் தேசிய தகவலியல் மையம், தூத்துக்குடி