பின்னால் செல்லவும்

முன்னாள் படைவீரர் நலத்துறை


அலுவலரின் பதவி

:

உதவி இயக்குநர்

அலுவலக முகவரி

:

முன்னாள் படைவீரர் நல அலுவலகம்,

டூவீபுரம் 8 வது தெரு,

தூத்துக்குடி – 628 003.

 

தொலைபேசி எண்

:

0461 – 2321678

 

முன்னாள் படைவீரர் நல அலுவலகமானது இம்மாவட்ட முன்னாள் படைவீரர்களி்ன் மறுவாழ்வு மற்றும் மறு வேலைவாய்ப்பு பெற்றிட உறுதுணை புரிவதுடன், முன்னாள் படைவீரர்களி்ன் நலன் காப்பது மற்றும் படைவீரர்களின் சார்ந்தோரின் நலன் காப்பதிலும் பொறுப்புவகிக்கிறது.

மாவட்ட ஆட்சித்தலைவர் முப்படைவீரர் வாரியத்தின் தலைவராகவும், முன்னாள் படைவீரர் நல துணை /                 உதவி இயக்குநர் மாவட்ட முப்படைவீரர் வாரியத்தின் செயலாளராகவும் செயல்படுகின்றனர்.

மாவட்டத்தில் உள்ள முன்னாள் படைவீரர்கள் மற்றும் விதவையரின் எண்ணிக்கை

முன்னாள் படைவீரர்கள் - 3909
விதவையர்கள்         - 1668

நல செயல்பாடுகள்

     (அ) வேலைவாய்ப்பு பெற்று வழங்குதல்

     (ஆ) சுயவேலைவாய்ப்பு செய்திட ஊக்குவித்தல்

     (இ) பயிற்சிகள் வழங்குதல்

     (ஈ) நிதி உதவிகள் வழங்குதல்

     (உ) அரசின் உதவிகள் பெற்று வழங்குதல்

            (ஊ) கல்லு ரிகளில் இட ஒதுக்கீட்டின் கீழ் முன்னாள்
படைவீரர்  சிறார்களின் சேர்க்கைக்கான  
சார்ந்தோர் சான்று வழங்குதல்

      (எ) முன்னாள் படைவீரர் சார்ந்தோர் ஒருவருக்கு
வேலைவாய்ப்பு முன்னுரிமைசான்று வழங்குதல்


நலத்திட்டங்கள்

செம்பெக்ஸ் 1

     தமிழ் நாடு தொழில் முதலீட்டுக்கழகம் வாயிலாக 60 வயதுக்குள் உள்ள முன்னாள் படைவீரர்கள் மற்றும் விதவையர்களுக்கு சுயவேலைவாய்ப்பில் கடன்உதவி பெற்று சிறு தொழில் நடத்தலாம்.

     அதிக பட்ச கடன் ரூ. 15 லட்சம்

செம்பெக்ஸ் 3

     கதர் மற்றும் கிராம தொழில் ஆணையம் மூலம் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் ரூ. 10 லட்சம் வரை கடன் பெற்று தொழில் நடத்தலாம்.

வங்கிக்கடன் வட்டிமானியம் திட்டம்

     முன்னாள் படைவீரர்கள் மற்றும் அவர்தம் விதவையர்கள் சுயதொழில் மற்றும் கல்வி கடன் களுக்கு தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் கடன்தொகை உயர்ந்த பட்சம் ரூ. 5 லட்சம் வரை 75 சதவீதம் வட்டிமானியம் வழங்கப்படும்.

தொழிற்கூடம் மானியம்

     தொழிற்கூடம் அமைக்க விரும்பும் சுயதொழில் புரியும்      முன்னாள் படைவீரர்கள் மற்றும் முன்னாள் படைவீரரை பெரும்பான்மை பங்குதாரராக கொண்ட கூட்டமைப்பிற்கும் 25 சதவீதம் தொழிற்கூட மானியம் அதிகபட்சமாக ரூ.50,000 வரை வழங்கப்படும்.

வேலைவாய்ப்பில் இட ஒதுக்கீடு
மத்திய அரசு கடித எண். 39016 /7/78 இஸ்டி (சி) நாள் 19/05/1979

பிரிவு சி        10 சதவீதம்
பிரிவு டி        20 சதவீதம்

மத்திய அரசின் பொது துறை நிறுவனங்கள் 
கடித எண். 6(55)/79 பிசிஇ (ஜிஎம் 1) நாள் 13/03/1980
    
     பிரிவு சி        14.5 சதவீதம்
     பிரிவு டி        24.5 சதவீதம்

மாநில அரசு
அரசாணை எண். 762 பொது (மு.ப.வீ) துறை நாள் 29/08/2002
மாநில சீருடை பணிக்கு பிரிவு சி   5 சதவீதம்

அரசாணை எண். 631 கல்வி நாள் 09/04/1981

பிரிவு டி        10 சதவீதம்

லஸ்கர் , ஓட்டுநர் , காவலர் (என்.சி.சி) பிரிவு சி 25 சதவீதம்

வனத்துறை காவலர் 10 சதவீதம்
வனத்துறை ஊழியர் 5 சதவீதம்

பொது துறை நிறுவனங்கள் 
அரசாணை எண். 9 நிதி (பி.பி.இ) துறை நாள் 03/01/1990

பேசிக் சர்வீஸ் 10 சதவீதம்

மாநகராட்சி
அரசாணை எண். 961 மாநகராட்சி நிற்வாகம் மற்றும் குடிநீர் வினியோகம் நாள் 29/11/1990

பேசிக் சர்வீஸ் 10 சதவீதம்

கோவில்பாதுகாப்பு பணி
அரசாணை எண். 1019  ஹோம் (காவல் /4) துறை நாள் 19/06/1992

தேர்தல் பாதுகாப்பு பணி
சட்டசபை மற்றும் பாராளுமன்ற தேர்தல் பாதுகாப்பு பணிக்கு முன்னாள் படைவீரர்கள் மதிப்பூதியத்தில் ஈடுபடுத்தப்படுவார்கள்.

 

 

 

கருணை அடிப்படையில் பணி நியமனம்
போரில் உயீர் நீத்த படைவீரரை சார்ந்தோர்ந்த இருவருக்கும் மற்றும்
போரில் ஊனமுற்றோரை சார்ந்த / படைப்பணியில் உயிரிழந்த வரைச் சார்ந்த ஒருவருக்கும் கீழ் கண்ட அரசாணையின் வாயிலாக அரசு பணியினை மத்திய மாநில அரசு பணிகள் வழங்கப்படுகிறது.

 

மத்திய அரசு
கடித எண். 14014/6/86 இஎஸ்டிடி(டி) நாள் 30/06/1987

மாநில அரசு
அரசாணை எண். 1218 பொது (மு.ப.வீ) துறை நாள் 03/09/1999

முன்னுரிமை சான்று

முன்னாள் படைவீரர் மற்றும் சார்ந்தோர்களின் ஒருவருக்கு வேலைவாய்ப்பு முன்னுரிமை சான்று கீழ் கண்ட அரசாணையின் மூலம் வழங்கப்படுகிறது
அரசாணை எண். 1161 தனி மற்றும் மேலாண்மை துறை நாள் 22/11/1984

அமைப்பு வெளியீடு - மாவட்ட ஆட்சியர் தூத்துக்குடி
ஆக்கம் தேசிய தகவலியல் மையம், தூத்துக்குடி