பின்னால் செல்லவும்

வரலாற்று சுருக்கம்அலுவலக தலைவரது பதவி

:

இணை இயக்குநர் / திட்ட இயக்குநர்

 

முகவரி

 

 

 

:

 

மாவட்ட ஊரக வளாச்சி முகமை

மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம்,

கோரம்பள்ளம்,

தூத்துக்குடி - 628 101.

 

தொலைபேசி எண்.  

:

0461 - 2340575    

 

நிகரி எண்.  

:

0461 - 2340088

 

மின்னஞ்சல் 

 

:

drdatut(at)nic(dot)in

 மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை

தூத்துக்குடி

 

இந்திய அரசின் கட்டுப்பாட்டிலுள்ள ஊரக வளர்ச்சி அமைச்சகம் மற்றும் மாநில அரசின் கீழ் செயல்படுத்தப்படும் பல்வேறு வறுமை ஒழிப்பு திட்டங்களை மாவட்ட அளவில் முதன்மை நிறுவனமாக கண்காணித்து செயல்படுத்தி வருவது டி.ஆர்.டி.ஏ என்னும் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையாகும்.

 

மத்திய அரசு தொடங்கியுள்ள வறுமை ஒழிப்பு திட்டங்களை திறமையாக நிர்வகிக்க கூடிய சிறப்பான நிறுவனம் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை ஆகும். இந்நிறுவனம் மாவட்டத்தில் கிராமங்களில் வாழும் மக்கள் தொகையில் 3/4 பகுதி மக்களுக்கு வறுமை ஒழிப்பு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. ஏராளமான வறுமை ஒழிப்பு திட்டங்களை செயல்படுத்தி வரும் இம்முகமையின் மிக உயர்ந்த நோக்கம் மக்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்துதல், வறுமையை அகற்றுதல் மற்றும் விரைவான சமூக பொருளாதார திட்டங்களை உறுதிப்படுத்துவதே ஆகும். அவ்வாறாகவே> ஊரக வளர்ச்சி திட்டங்களை தீவிரமாக்கி ஊரக பகுதிகளில் எல்லா மட்டத்திலும் சமூக பொருளாதார மாற்றங்களை கொண்டு வந்து ஊரக பகுதிகளில் வாழும் தனிச்சுதந்திரம் இல்லாத மற்றும் மிகவும் ஏழை எளியவர்களுக்கு மிகவும் நன்மை செய்வது இம்முகமையின் நோக்கமாகும்.

 

மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை அமைப்பு -

 

1986ஆம் வருடம் தூத்துக்குடி மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை அமைக்கப்படுவதற்கு முன்னர், சிறு விவசாயிகள் மேம்பாட்டு முகமை என்ற நிறுவனம் பல்வேறு வறுமை ஒழிப்பு திட்டங்களை கண்காணித்து செயல்படுத்தி வந்தது. மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை கூடுதல் ஆட்சியர் (வ) / இணை இயக்குநர் / திட்ட இயக்குநர் ஆகியோரால் நிர்வகிக்கப்பட;டு வருகிறது. 01.04.1999 முதல் மத்திய, மாநில அரசுகள் 75:25 விகிதாச்சார அடிப்படையில் நிதியை இம்முகமைக்கு ஒதுக்கி வருகிறது. மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை, சங்கங்கள் gதிவு சட்டத்தின்படி பதிவு செய்யப்பட்ட தனித்தன்மை வாய்ந்ததாகும். மாவட்ட ஆட்சித்தலைவர் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் தலைவர் ஆவார். மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் நிர்வாகத்தை ஆணைக்குழு நிர்வகித்து வருகிறது. இம்முகமையின் கொள்கை வழிகாட்டுதல், ஆண்டு திட்டங்களை அனுமதித்தல் ஆய்வு மற்றும் திட்டங்களை கண்காணித்தல் ஆகிய பணிகளை இக்குழு மேற்கொள்கிறது. தேவைகேற்ப ஒவ்வொரு சமயமும் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமைக்கு தேவையான வழிகாட்டுதல்களை ஆணைக்குழு வழங்கும். ஒவ்வொரு காலாண்டுக்கு ஒரு முறை ஆணைக்குழுவானது கூட்டப்படுகிறது.

 

மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையால் வேலைகள் செயல்படுத்தும் முறை

 

ஊரகப் பகுதிகளில் உள்கட்டமைப்பு வசதிகள் செய்யும் பொருட்டு மத்திய, மாநில அரசுகளால் தொடங்கப்படும் திட்டங்களை செயல்படுத்த மாவட்டம் அளவில் செயற்பொறியாளர் தலைமையில் ஒரு தொழில் நுட்ப பிரிவு அமைக்கப்பட்டுள்ளது. மேலும்> பலதரப்பட்ட திட்டங்களை பயனளிக்கக் கூடிய வகையில் கண்காணித்து செயல்படுத்த தொழில் நுட்ப பிரிவை தூத்துக்குடி, கோவில்பட்டி, திருச்செந்தூர் ஆகிய மூன்று உபகோட்டப் பிரிவுகளாக பிரித்து, ஒவ்வொரு உபகோட்டப்பிரிவும் ஒவ்வொரு உதவி செயற்பொறியாளர் தலைமையில் செயல்படுகிறது. தொழில் நுட்ப பிரிவுடன் திட்டங்களை செயல்படுத்த கூடுதலாக மூன்றடுக்கு ஊராட்சிகளான, தற்போதுள்ள மாவட்ட ஊராட்சி, ஊராட்சி ஒன்றியம் மற்றும் கிராம ஊராட்சிகள் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமைக்கு உதவுகிறது. மேலும், பிற துறைகளான, மாநகராட்சி, நகராட்சிகள், பேரூராட்சிகள் மற்றும் பொதுப்பணித்துறை ஆகியவை பாராளுமன்ற உறுப்பினர் உள்ளுர் வளர்ச்சித் திட்டம், சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டுத் திட்டம் மற்றும் தன்னிறைவு திட்டம் ஆகிய திட்டங்களை மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை மூலமாக செயல்படுத்தி வருகிறது. குறிப்பாக தன்னிறைவு திட்டம் பொது மக்களின் பங்களிப்புடன் செயல்படுத்தப்படுகிறது.

 

கண்காணிப்பு முறை

 

மத்திய அரசு திட்டங்கள் முன்னேற்றத்தினை பாராளுமன்ற உறுப்பினர் தலைமையில் விழிப்புணர்வு மற்றும் கண்காணிப்பு குழுக்களை ஏற்படுத்தி, அக்குழு ஒவ்வொரு வருடமும் 3 மாதங்களுக்கு ஒரு முறை மேற்படி திட்டங்கள் குறித்து ஆய்வு செய்து வருகிறது. மேலும், தேசிய அளவில் தரக்கட்டுப்பாட்டு ஆய்வாளர்களும், மாநில அளவில் தரக்கட்டுப்பாட்டு ஆய்வாளர்களும் அனைத்து பணிகளும், குறிப்பாக பிரதம மந்திரி கிராமச் சாலைகள் திட்டம் (பி.எம்.ஜி.எஸ்.ஒய்) மற்றும் நபார்டு திட்டம் ஆகியவற்றின் கீழ் மேற்கொள்ளப்படும் அனைத்து சாலைப் பணிகளையும் தரமாகவும், விதிமுறைகளை பின்பற்றி செயல்படுத்தப்படுகின்றனவா என்பதனை உறுதி செய்வார்கள்.

 


அமைப்பு வெளியீடு - மாவட்ட ஆட்சியர் தூத்துக்குடி
ஆக்கம் தேசிய தகவலியல் மையம், தூத்துக்குடி