பின்னால் செல்லவும்

மாவட்ட மாற்று திறனாளிகள் அலுவலகம்

அலுவலக பெயர்

மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம்

அலுவலக முகவரி

மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், கோரம்பள்ளம், தூத்துக்குடி

தொலைபேசி எண்

0461-2340626

 

1. மாற்றுத்திறனாளிகளுக்கான அரசு நலத்திட்டங்கள்

2. பிற துறைகள் மூலமாக வழங்கப்படும் நலத்திட்ட உதவிகள்

3. அரசாணைகள் மற்றும் படிவங்கள்
4. பள்ளிகள் மற்றும் தொண்டு நிறுவனங்கள்

5. மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்புப்பள்ளிகள
6. இணையதளங்கள்

     

மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் கீழ், தூத்துக்குடி மாவட்டத்தில் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம் மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் செயல்படுகிறது.  மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கப்படும் நலத்திட்ட உதவிகள், பெறுவதற்கான தகுதிகள். இணைக்கப்பட வேண்டிய ஆவணங்கள் மற்றும் விண்ணப்ப படிவங்கள் ஆகியன தெரிவிக்கப்பட்டுள்ளது.  மாற்றுத்திறனாளிகள் நலத்திட்ட உதவிகள் பெறுவதற்கு இணைய தளத்திலிருந்து தங்களுக்கு தேவையான விண்ணப்பத்தினை கீழ்இறக்கம் செய்து தேவையான சான்றுகளுடன் இணைத்து மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலருக்கு நேரிலோ, தபால் மூலமோ விண்ணப்பிக்கலாம்.

 1. மாற்றுத்திறனாளிகளுக்கான அரசு நலத்திட்டங்கள்:

 


.எண்

திட்டத்தின் பெயர்

தகுதி

தேவைப்படும் ஆவணங்கள்

வழங்கப்படும்
உதவி

விண்ணப்பம்

1

மாற்றுத்திறனாளி-களுக்கான
தேசிய அடையாள அட்டை

40 சதவீதத்திற்கு மேல் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கப்படுகிறது.
(பார்வையற்றவர்கள், கை, கால் பாதிக்கப்பட்டவர்கள் , செவித்திறன் குறைபாடுடையவர்கள், மனவளர்ச்சி குன்றியவர்கள்,
ஆட்டிசம், மூளை முடக்குவாதத்தினால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் மனநோயால் பாதிக்கப்பட்டோர்)

குடும்ப அட்டை அசல்,
பாஸ்போர்ட் சைஸ் புகைப்படம் – 3,
1) கை,கால் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகள் –
அரசு எலும்பு முறிவு மருத்துவரிடம் சான்று.
2) கண்பார்வையற்றவர் – அரசு கண் மருத்துவர் சான்று.
3) காது கேளாதவர் (ம) வாய் பேசாதவர் – அரசு காது மூக்கு தொண்டை மருத்துவர் சான்று.
4) மனவளர்ச்சி குன்றியவர் – 12 வயதுக்குட்பட்டவர்கள்  அரசு மனநல மருத்துவர், குழந்தைகள் நல மருத்துவரிடம் சான்று.
5) மனநலம் பாதிக்கப்பட்டவர் –
அரசு மனநல மருத்துவரிடம் சான்று.
6) பல்வகை மாற்றுத்திறனாளிகள் 3 நபர்கள் கொண்ட மருத்துவ குழுவிடம் சான்று.

மாற்றுத்திறனாளி-களுக்கான தேசிய அடையாள அட்டை

விண்ணப்பம்-1

2

மனவளர்ச்சி குன்றியோர்க்கு பராமரிப்பு உதவித்தொகை

45 விழுக்காடுக்கு மேல் பாதிக்கப்பட்ட மனவளர்ச்சி குன்றியோர்

விண்ணப்பம், தேசிய மாற்றுத்திறனாளிகள் அடையாள அட்டை, நகல், குடும்ப அட்டை நகல், கிராம நிர்வாக அலுவலரிடம் வேறு அரசு துறையில் உதவித்தொகை பெறவில்லை எனச் சான்று, இணைசேமிப்பு வங்கிகணக்கு, புகைப்படம்

மாதம் ரூ.1000/-

விண்ணப்பம்-2

3.

கை,கால் பாதிக்கப்
பட்ட மாற்றுத்திறனாளிகளுக்-கான பராமாரிப்பு உதவித்தொகை

80 விழுக்காடுக்கு மேல் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளி

விண்ணப்பம், தேசிய மாற்றுத்திறனாளிகள் அடையாள அட்டை, நகல், குடும்ப அட்டை நகல், கிராம நிர்வாக அலுவலரிடம் வேறு அரசு துறையில் உதவித்தொகை பெறவில்லை எனச் சான்று, இணைசேமிப்பு வங்கிகணக்கு, புகைப்படம்,
அரசு எலும்பு முறிவு மருத்துவரிடம் சான்று

மாதம் ரூ.1000/-

விண்ணப்பம்-2

4.

தசைச்சிதைவு நோயால் பாதிக்கப்பட்டோருக்கான
பராமரிப்பு உதவித்தொகை

தசைச்சிதைவு நோய் பாதிக்கப்பட்டவர் தேசிய மாற்றுத்திறனாளிகள் அடையாள அட்டை பெற்றவராக இருக்க வேண்டும்

விண்ணப்பம், தேசிய மாற்றுத்திறனாளிகள் அடையாள அட்டை, நகல், குடும்ப அட்டை நகல், கிராம நிர்வாக அலுவலரிடம் வேறு அரசு துறையில் உதவித்தொகை பெறவில்லை எனச் சான்று, இணைசேமிப்பு வங்கிகணக்கு, புகைப்படம்

மாதம் ரூ.1000/-

விண்ணப்பம்-2

5.

தொழுநோயால் பாதிக்கப்பட்டோருக்கான
பராமரிப்பு உதவித்தொகை

தொழுநோயால் பாதிக்கப்பட்டவர் தேசிய
மாற்றுத்திறனாளிகள் அடையாள அட்டை பெற்றவாராக இருக்க வேண்டும்

விண்ணப்பம், தேசிய மாற்றுத்திறனாளிகள் அடையாள அட்டை, நகல், குடும்ப அட்டை நகல், கிராம நிர்வாக அலுவலரிடம் வேறு அரசு துறையில் உதவித்தொகை பெறவில்லை எனச் சான்று, இணைசேமிப்பு வங்கிகணக்கு, புகைப்படம்

மாதம் ரூ.1000/-

விண்ணப்பம்-2

6.

சுயவேலைவாயப்பு
வங்கிக்கடன்

வேறு எந்த வங்கியிலம் கடன் பெறாதவராக இருத்தல் வேண்டும்
18 வயது முதல் 45 வயது வரை

விண்ணப்பம், தேசிய மாற்றுத்திறனாளிகள் அடையாள அட்டை நகல், குடும்ப அட்டை நகல், புகைப்படம்

3ல் ஒரு பங்கு (அ) அதிகபட்சம் ரூ.10,000/- மானியம் வழங்கப்படும்

விண்ணப்பம்-6

7.

தேசிய ஊனமுற்றோர்
நிதி மேம்பாட்டு கழகத்தின் மூலமாக மாவட்ட கூட்டுறவு வங்கிகளில் சுயதொழில் வங்கி கடன் உதவி

வேறு எந்த வங்கியிலும் கடன் பெறாதவராக இருத்தல் வேண்டும்.
18 வயதுக்கு மேற்பட்டவராக இருத்தல் வேண்டும்

விண்ணப்பம், தேசிய மாற்றுத்திறனாளிகள் அடையாள அட்டை நகல், குடும்ப அட்டை நகல், புகைப்படம்.
அருகாமையில் உள்ள கூட்டுறவு வங்கியில் விண்ணப்பம் சமர்ப்பிக்க வேண்டும்

ரூ.25,000/-க்குள் கடன் உதவி பெறுபவர்கள் 1 நபர் ஜாமீன்.  ரூ.50,000/-க்குள் கடன் உதவி பெறுபவர்கள் 2 நபர்
ஜாமீன்.  அதற்கு மேல் கடன் உதவி பெறுபவர்கள் சொத்து ஜாமீன் வழங்க வேண்டும்.  4 விழுக்காடு வட்டியில் வங்கி கடன் வழங்கப் படும். தவறாது வங்கி கடன் செலுத்துபவர்களுக்கு வட்டி தமிழக அரசு ஏற்று செலுத்தும்.

விண்ணப்பம்-7

8.

பாரத பிரதமரின் வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டத்தின்கீழ் வங்கி கடன்

8ம் வகுப்பு தேர்ச்சி.  வேறு எந்த வங்கியிலும் கடன் பெறாதவராக இருத்தல் வேண்டும்.

18 வயது முதல் 45 வயது வரை.

விண்ணப்பம், தேசிய மாற்றுத்திறனாளிகள் அடையாள அட்டை நகல், குடும்ப அட்டை நகல், புகைப்படம்

வங்கி கடன் வழங்க மாவட்ட தொழில் மையத்தால் பரிந்துரைக்கப்படுகிறது.

மாவட்ட தொழில் மையத்தின் மூலமாக கிராமபுற மாற்றுத்திறனாளி-
களுக்கு 35 விழுக்காடு மானியமும், நகர்புற மாற்றுத்திறனாளி-
களுக்கு 25 விழுக்காடு மானியமும் மாற்றுத்திறனாளிகள் நலத்துளை மூலமாக 5 விழுக்காடு மானியமும் வழங்கப்படுகிறது.

விண்ணப்பம்-8

 

9.

படித்த இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டத்தின்கீழ் வங்கி கடன்

8ம் வகுப்பு தேர்ச்சி

வேறு எந்த துறையிலும்
கடன் பெறாதவராக இருத்தல் வேண்டும்

18 வயது முதல் 45 வயது வரை

விண்ணப்பம், தேசிய மாற்றுத்திறனாளிகள் அடையாள அட்டை நகல், குடும்ப அட்டை நகல், புகைப்படம்.

மாவட்ட தொழில் மையத்தின் மூலமாக வழங்கப்படுகிறது.

வியாபாரம், சேவை / உற்பத்தி ஆகியவற்றிற்கு
ரூ. 3,00,000/- முதல் ரூ.5,00,000/- வரை வங்கி கடன் வழங்க மாவட்ட தொழில் மையத்தால் பரிந்துரைக்கப்படுகிறது.

மாவட்ட தொழில் மையத்தின் மூலமாக 15 விழுக்காடு மானியமும் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மூலமாக 5 விழுக்காடு மானியமும் வழங்கப்படுகிறது.

விண்ணப்பம் மாவட்ட தொழில் மையத்தில் பெற்றுக்
கொள்ளவும்.

10.

மாற்றுத்திறனாளி
மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை

1 முதல் 8ம் வகுப்பு வரை

விண்ணப்பம், தேசிய மாற்றுத்திறனாளிகள் அடையாள அட்டை நகல், குடும்ப அட்டை நகல், புகைப்படம், இணை சேமிப்பு வங்கி கணக்கு

1 முதல் 5ம் வகுப்பு
வரை ரூ. 1000/-

6 முதல் 8ம் வகுப்பு
வரை ரூ. 3000/-.

விண்ணப்பம்-10

11

மாற்றுத்திறனாளி
மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை

9ம் வகுப்பு அதற்கு மேல் பயில்பவர்கள்

விண்ணப்பம், தேசிய மாற்றுத்திறனாளிகள் அடையாள அட்டை நகல், குடும்ப அட்டை நகல், புகைப்படம், இணை சேமிப்பு வங்கி கணக்கு.  முந்தைய கல்வி ஆண்டில் 40 விழுக்காட்டிற்கு மேல் மதிப்பெண் பெற்ற சான்று

9 முதல் 12ம் வகுப்பு
வரை ரூ.4000/-.

இளங்கலை பட்டப்படிப்பு
ரூ.6000/-.

முதுகலை பட்டப்படிப்பு
ரூ.7000/-.

விண்ணப்பம்-11

12.

மாற்றுத்திறனாளி
மாணவர்களுக்கு
வாசிப்பாளர்
உதவித்தொகை

9ம் வகுப்பு அதற்கு மேல் பயில்பவர்கள்

 

9ம் வகுப்பு அதற்கு மேல் பயில்பவர்கள்
தேர்வு எழுதுவதற்கு உதவியாக வாசிப்பதற்கு பயன்படுத்திக் கொள்ளுதல்.

விண்ணப்பம்-11ல் உள்ளது.

13.

வேலைவாய்ப்பற்ற மாற்றுத்திறனாளி-களுக்கு நிவாரணத்தொகை

வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து இருக்க வேண்டும்.  மாற்றுத்திறனாளி-களுக்கான தேசிய அடையாள அட்டை பெற்றிருக்க வேண்டும்.

45 வயதுக்கு உட்பட்டவராக இருத்தல் வேண்டும்.

10ம் வகுப்பு வரை மாதம் ரூ.300./-

12ம் வகுப்பு வரை மாதம் ரூ.375./-

பட்டப்படிப்பு ரூ.450./-

வேலைவாய்ப்பு அலுவலகத்தில் விண்ணப்பம் பெற்றுக் கொள்ளவும்.

14.அ.

மாற்றுத்திறனாளி-களுக்கான இலவச
பேருந்து பயணச்சலுகை

பள்ளி, கல்லூரி, மருத்துவமனை மற்றும் பணிக்கு செல்பவராக இருத்தல் வேண்டும்

விண்ணப்பம், தேசிய மாற்றுத்திறனாளிகள் அடையாள அட்டை நகல், குடும்ப அட்டை நகல், புகைப்படம்-2,
வேலைபார்க்கும் நிறுவனத்திடமிருந்து சான்று, பள்ளி, கல்லூரி, மருத்துவமனை, சிறப்பு பள்ளிக்கு செல்பவராக இருப்பின் நிறுவனத்திடமிருந்து சான்று.

வீட்டிலிருந்து பள்ளி, கல்லூரி, மருத்துவமனை மற்றும் பணிக்கு செல்லும் வரை.

விண்ணப்பம்-14-அ

ஆ.

பார்வையற்ற மாற்றுத்திறனாளி-களுக்கான இலவச
பேருந்து பயணச்சலுகை

தேசிய மாற்றுத்திறனாளி
அடையாள அட்டை பெற்றவராக இருத்தல் வேண்டும்.

விண்ணப்பம், தேசிய மாற்றுத்திறனாளிகள் அடையாள அட்டை நகல், குடும்ப அட்டை நகல், புகைப்படம்-2,

தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் சென்று வர இலவச பேருந்து பயணச்சலுகை

விண்ணப்பம்-14-ஆ

இ.

அரசுப்பேருந்தில் மாற்றுத்திறனாளி-களுக்கான 75 விழுக்காடு இலவச பேருந்து பயணச்சலுகை

தேசிய மாற்றுத்திறனாளி
அடையாள அட்டை பெற்றவராக இருத்தல் வேண்டும்.

தேசிய மாற்றுத்திறனாளிகள் அடையாள அட்டை நகல் நடத்துனரிடம் வழங்க வேண்டும்.

தமிழ்நாடு முழுவதும்.

-

ஈ.

அரசுப்பேருந்தில் கடுமையாக பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளியுடன் செல்லும் துணையாளருக்கு 75 விழுக்காடு பேருந்து பயணச்சலுகை

தேசிய மாற்றுத்திறனாளி
அடையாள அட்டை பெற்றவராக இருத்தல் வேண்டும்.

மருத்துவரிடம் துணையாளரை அழைத்துச்செல்ல பெறப்பட்ட மருத்துவச்சான்று நகல் நடத்துனரிடம் வழங்க வேண்டும்.

தமிழ்நாடு முழுவதும்.

விண்ணப்பம்-
14-அ--ல் உள்ளது.

15.

இணைப்புச்சக்கரங்கள்
பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர்

1) 18 வயதுக்கு மேற்பட்ட பள்ளி, கல்லூரியில் படிக்கும் மாணவர்கள் (ம) பணிபுரிபவர்களாக இருக்க வேண்டும்.

2) இரண்டு கால்களும் செயல் இழந்து கைகளால் வண்டியை இயக்கக்கூடிய நிலையில் இருத்தல் வேண்டும்.

விண்ணப்பம், தேசிய மாற்றுத்திறனாளிகள் அடையாள அட்டை நகல், குடும்ப அட்டை நகல், புகைப்படம், பணிச்சான்று / கல்விச்சான்று.

விலையில்லா இணைப்புச்சக்கரங்கள் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர்.

விண்ணப்பம்-15

16.

மோட்டார் பொருத்திய தையல் இயந்திரம்

1) 18 வயதுக்கு மேல் 45 வயது வரை.

2) தையல் பயிற்சி முடித்தவர்கள்.

விண்ணப்பம், தேசிய மாற்றுத்திறனாளிகள் அடையாள அட்டை நகல், குடும்ப அட்டை நகல், புகைப்படம்,
தையல் பயிற்சி முடித்த சான்று.

விலையில்லா மோட்டார் பொருத்திய தையல் இயந்திரம்

விண்ணப்பம்-16

17.அ.

மூன்று சக்கர சைக்கிள்

இரண்டு கால்களும் செயல் இழந்து கைகளால் வண்டியை இயக்கக்கூடிய நிலையில் இருத்தல் வேண்டும்.

விண்ணப்பம், தேசிய மாற்றுத்திறனாளிகள் அடையாள அட்டை நகல், குடும்ப அட்டை நகல், புகைப்படம்,

விலையில்லா மூன்று சக்கர சைக்கிள்

விண்ணப்பம்-17-அ

ஆ.

சக்கர நாற்காலி

இரண்டு கால்களும், கைகளும் செயல் இழந்து இருத்தல் வேண்டும்.

விண்ணப்பம், தேசிய மாற்றுத்திறனாளிகள் அடையாள அட்டை நகல், குடும்ப அட்டை நகல், புகைப்படம்,

விலையில்லா சக்கர நாற்காலி

விண்ணப்பம்-17ஆ

இ.

காதொலி கருவி

3 முதல் 70 வயது வரைக்குள் இருக்க வேண்டும்.

விண்ணப்பம், தேசிய மாற்றுத்திறனாளிகள் அடையாள அட்டை நகல், குடும்ப அட்டை நகல்,

விலையில்லா காதொலி கருவி

விண்ணப்பம்-17இ

ஈ.

பார்வையற்றோருக்கான
கருப்பு கண்ணாடி மற்றும் ஊன்றுகோல்

தேசிய மாற்றுத்திறனாளி
அடையாள அட்டை பெற்றவராக இருத்தல் வேண்டும்.

விண்ணப்பம், தேசிய மாற்றுத்திறனாளிகள் அடையாள அட்டை நகல், குடும்ப அட்டை நகல், புகைப்படம்,

விலையில்லா கருப்பு
கண்ணாடி மற்றும் ஊன்றுகோல்

விண்ணப்பம்-17ஈ

உ.

பார்வையற்றோருக்கான பிரெய்லி கைக்கடிகாரம்

பணிபுரிபவராகவோ (அ)
பத்தாம் வகுப்பிற்கு மேல் படிப்பவராகவோ இருத்தல் வேண்டும்.

விண்ணப்பம், தேசிய மாற்றுத்திறனாளிகள் அடையாள அட்டை நகல், குடும்ப அட்டை நகல்,பணிச்சான்று,
புகைப்படம்,

விலையில்லா பிரெய்லி கைக்கடிகாரம்

விண்ணப்பம்-17உ

ஊ.

நவீன செயற்கை அவயம்

கை, கால்களை இழந்த பள்ளி, கல்லூரியில் படிக்கும் மாணவர்கள் (ம) பணிபுரிபவர்களாக இருத்தல் வேண்டும்.

விண்ணப்பம், தேசிய மாற்றுத்திறனாளிகள் அடையாள அட்டை நகல், குடும்ப அட்டை நகல்,பணிச்சான்று / கல்விச்சான்று
புகைப்படம்,

விலையில்லா நவீன செயற்கை அவயம்

விண்ணப்பம்-17ஊ

எ.

செயற்கை அவயம்

விபத்து மற்றும் நோயினால் கால் துண்டிக்கப்பட்டவர்கள்

விண்ணப்பம், தேசிய மாற்றுத்திறனாளிகள் அடையாள அட்டை நகல், குடும்ப அட்டை நகல், புகைப்படம்,

விலையில்லா செயற்கை அவயம்

விண்ணப்பம்-17எ

ஏ.

முடநீக்கு சாதனம்

மறுவாழ்வு முகாமில் தேர்வு செய்யப்பட்டவராக இருத்தல் வேண்டும்

விண்ணப்பம், தேசிய மாற்றுத்திறனாளிகள் அடையாள அட்டை நகல், குடும்ப அட்டை நகல், புகைப்படம்,

விலையில்லா முடநீக்கு சாதனம்

விண்ணப்பம்-17ஏ

ஐ.

ஊன்றுகோல்

மறுவாழ்வு முகாமில் தேர்வு செய்யப்பட்டவராக இருத்தல் வேண்டும்.

விண்ணப்பம், தேசிய மாற்றுத்திறனாளிகள் அடையாள அட்டை நகல், குடும்ப அட்டை நகல், புகைப்படம்,

விலையில்லா ஊன்றுகோல்

விண்ணப்பம்-17ஐ

18.

ஆய்வுக்கூட தொழில் நுட்ப பயிற்சி

பன்னிரெண்டாம் வகுப்பில் இயற்பியல், வேதியியல், உயிரியல் அல்லது விலங்கியல் மற்றும் தாவரவியல் பாடத்தில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

18-30 வயதுக்குள் இருக்க வேண்டும்.

விண்ணப்பம், தேசிய மாற்றுத்திறனாளிகள் அடையாள அட்டை நகல், குடும்ப அட்டை நகல், புகைப்படம், கல்விச்சான்று நகல்

மாதம் ரூ.300 வீதம் 2 ஆண்டுகளுக்கு உதவித்தொகை

விண்ணப்பம்-18

19.

செல்போன் பயிற்சி

8ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

18-30 வயதுக்குள் இருக்க வேண்டும்.

விண்ணப்பம், தேசிய மாற்றுத்திறனாளிகள் அடையாள அட்டை நகல், குடும்ப அட்டை நகல், புகைப்படம், கல்விச்சான்று நகல்

மாதம் ரூ.300 வீதம் 3 மாதத்திற்கு உதவித்தொகை

விண்ணப்பம்-19

20.அ.

மாற்றுத்திறனாளி-
களுக்கான திருமண நிதியுதவி

முதல் திருமணமாக இருக்க வேண்டும்.

திருமண உதவித்தொகைக்காக வேறு அரசு துறையில் விண்ணப்பித்திருக்கக்
கூடாது

விண்ணப்பம், தேசிய மாற்றுத்திறனாளிகள் அடையாள அட்டை நகல், குடும்ப அட்டை நகல், திருமண பத்திரிக்கை, திருமணப்புகைப்படம், திருமண பதிவுச்சான்று (அ) வழிபாட்டுத் தலத்தில் திருமணம் நடைபெற்றதற்கான சான்று, கிராம நிர்வாக அலுவலரிடம் முதல் திருமணம் என்பதற்கான சான்று.

ரொக்கம் ரூ.12,500/-
பத்திரம் ரூ.12,500/-
தங்கம் 4 கிராம்

விண்ணப்பம்-20அ

ஆ.

பட்டப்படிப்பு படித்து முடித்த மாற்றுத்திறனாளிகளுக்கு திருமண நிதியுதவி

தம்பதியரில் ஒருவர் பட்டயம் / பட்டப்படிப்பு
முடித்தவராக இருத்தல் வேண்டும்.

முதல் திருமணமாக இருத்தல் வேண்டும்.

திருமண உதவித்தொகைக்காக வேறு அரசு துறையில் விண்ணப்பித்திருக்கக்
கூடாது.

விண்ணப்பம், தேசிய மாற்றுத்திறனாளிகள் அடையாள அட்டை நகல், குடும்ப அட்டை நகல், திருமண பத்திரிக்கை, திருமணப்புகைப்படம், திருமண பதிவுச்சான்று (அ) வழிபாட்டுத் தலத்தில் திருமணம் நடைபெற்றதற்கான சான்று, கிராம நிர்வாக அலுவலரிடம் முதல் திருமணம் என்பதற்கான சான்று, பட்டயம் / பட்டதாரி சான்று.

ரொக்கம் ரூ.25,000/-

பத்திரம் ரூ.25,000/-

தங்கம் 4 கிராம்

விண்ணப்பம்-20அ.

21

சமூக பாதுகாப்பு திட்டம்

 

 

 

 

மாற்றுத்திறனாளி-
களுக்கான நலவாரிய
பதிவுச்சான்று

10 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு வழங்கப்படுகிறது.

மாற்றுத்திறனாளி-களுக்கான தேசிய அடையாள அட்டை

மாற்றுத்திறனாளிக்கு
நலவாரிய பதிவுச்சான்று வழங்கப்படுகிறது.

மாவட்ட மாற்றுத்
திறனாளிகள் நல
அலுவலரை
தொடர்பு கொள்ளவும்.

 

ஆ.

தனிநபர் விபத்து நிவாரணம்

 

 

 

 

 

1) விபத்து மரணம்

மாற்றுத்திறனாளிக்குரிய
நலவாரிய பதிவுச்சான்று
பெற்றவர்கள்.

1. G+ர்த்தி செய்யப்பட்ட
விண்ணப்பபடிவம்.
2. காவல்துறையிடம்
இருந்து பெறப்பட்ட
முதல் தகவல் அறிக்கை (F.I.R.) நகல்.
3. மருத்துவர் சான்று
(விபத்தின் காரணமாக
ஏற்பட்ட இழப்பின்
சதவிகிதத்துடன்)
4. வேறு அரசு திட்டம்
மூலமாக மேற்கண்ட
திட்டத்திற்கான உதவித்தொகை பெறவில்லை என
விண்ணப்பதாரர்களின்
உறுதிமொழிச்
சான்றிதழ்.
5.அடையாள அட்டை,
வாரிய அட்டை மற்றும் குடும்ப அட்டை நகல்

ரூ. 1,00,000/-

விண்ணப்பம்-21ஆ

 

 

2. இழப்பு (உறுப்பு இழப்பு)
இரு கைகள் (அ) இரு
கால்கள் (அ) ஒரு கை மற்றும் ஒரு கால் (அ)
குணமடையாத அளவிற்கு இரு கண்கள் பார்வை இழப்பு

மருத்துவர் மதிப்பீடு செய்யும் விழுக்காட்டின்படி உதவித்தொகை அளிக்கப்படும்.

-

-

விண்ணப்பம்-
21ஆ

 

3. நிரந்தர பகுதி ஊனம்
ஒரு கை (அ) ஒரு கால்
(அ) குணமடையாத அளவிற்கு ஒரு கண்ணில் பார்வை இழப்பு.

-

-

ரூ.50,000/-

விண்ணப்பம்-
21ஆ

 

4. மேற்படி 2 மற்றும் 3ல்
குறிப்பிட்டுள்ளதை தவிர
ஏற்படும் நிரந்தர முழு
ஊனம்.

-

-

ரூ. 25,000/-

விண்ணப்பம்-
21ஆ

ஈமச்சடங்கு செலவுகள்

1.பூர்த்தி செய்யப்பட்ட
விண்ணப்பபடிவம்
2. அடையாள அட்டை.
மற்றும் நலவாரிய
சான்று.
3. இறப்பு மற்றும் வாரிசு
தாரர் சான்றிதழ்.
4. வேறு அரசுத்திட்டம்
மூலமாக உதவித்தொகை பெறவில்லை என விண்ணப்பதாரரின் உறுதிமொழிச்சான்று.
5. குடும்ப அட்டை நகல்.

 

ரூ.2000/-

பவிண்ணப்பம்-21இ

ஈ.

இயற்கை மரணம்

1.பூர்த்தி செய்யப்பட்ட
விண்ணப்பபடிவம்
2. அடையாள அட்டை.
மற்றும் நலவாரிய
சான்று.
3. இறப்பு மற்றும் வாரிசு
தாரர் சான்றிதழ்.
4. வேறு அரசுத்திட்டம்
மூலமாக உதவித்தொகை பெறவில்லை என விண்ணப்பதாரரின் உறுதிமொழிச்சான்று.
5. குடும்ப அட்டை நகல்

 

ரூ.15,000/-

விண்ணப்பம்-21இ

உ.

கல்வி உதவித்தொகை

 

 

 

 

 

10ம் வகுப்பு படிக்கும்
மகள்

-

 

 

1.G+ர்த்தி செய்யப்பட்ட
விண்ணப்பபடிவம்
2.தற்போது கல்வி பயிலும் நிறுவனத்தில் இருந்து சான்று
3.வேறு அரசு திட்டம் மூலமாக கல்வி உதவித் தொகை பெறவில்லை என விண்ணப்பத்தாரரின் உறுதி மொழிச் சான்று

ரூ.1000/-

விண்ணப்பம்-21உ

 

10ம் வகுப்பு தோ்ச்சி பெற்ற மகன் (ம) மகள்

-

ரூ.1000/-

விண்ணப்பம்-
21உ

 

11ம் வகுப்பு படிக்கும் மகள்

-

ரூ.1000/-

விண்ணப்பம்-
21உ

 

12ம் வகுப்பு படிக்கும் மகள்

-

ரூ.1500/-

விண்ணப்பம்-
21உ

 

12ம் வகுப்பு தோ்ச்சி பெற்ற மகன் (அ) மகள்

-

ரூ.1500/-

விண்ணப்பம்-
21உ

 

முறையான பட்டப்படிப்பு

-

ரூ.1500/-

விண்ணப்பம்-21உ

 

விடுதி வசதியுடன்

-

ரூ.1750/-

விண்ணப்பம்-21உ

 

தொழிற் கல்வி பட்ட படிப்பு விடுதி வசதியுடன்

-

ரூ.2000/-

விண்ணப்பம்-21உ

 

தொழிற் கல்வி பட்ட மேற்படிப்பு

-

ரூ.4000/-

விண்ணப்பம்-21உ

 

விடுதி வசதியுடன்

-

ரூ.6000/-

விண்ணப்பம்-21உ

 

I.டி.I (அ) பாலிடெக்னிக் படிப்பு

-

ரூ.1000/-

விண்ணப்பம்-21உ

திருமண உதவி

 

1. பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்ப படிவம்
2. திருமணப் பத்திரிக்கை
3. வேறு அரசு திட்டம் மூலமாக கல்வி உதவித் தொகை பெறவில்லை என விண்ணப்பத்தாரரின் உறுதி மொழிச் சான்றிதழ்
4. அடையாள அட்டை,வாரிய அட்டை (ம) குடும்ப அட்டை நகல்.

ரூ.2000/-

விண்ணப்பம்-21ஊ

மகப்பேறு உதவி

 

 

 

 

 

அ) பிரசவம் மாதம் ரூ.1000/- வீதம் 6 மாதத்திற்கு

-

 

1. பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்ப படிவம்
2. பிரசவம் என்றால் பிறப்பு சான்றிதழ், கருக்கலைப்பு,
கருச்சிதைவு (ம) கா்ப்பமாக இருந்தால் உரிய மருத்துவ சான்றிதழ்

ரூ.6000/-

விண்ணப்பம்-21எ

 

ஆ) கருச்சிதைவு மற்றும் கருக்கலைப்பு

-

1. G+ர்த்தி செய்யப்பட்ட விண்ணப்ப படிவம்
2. பிரசவம் என்றால் பிறப்பு சான்றிதழ், கருக்கலைப்பு,
கருச்சிதைவு (ம) கா்ப்பமாக இருந்தால் உரிய மருத்துவ சான்றிதழ்

ரூ.3000/-

விண்ணப்பம்-21எ

மூக்குக் கண்ணாடி செலவினம்

-

1. பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்ப படிவம்
2. மூக்குக்கண்ணாடி பெற கண் மருத்துவா் சான்றிதழ்
3. வேறு அரசு திட்டம் மூலமாக கல்வி உதவித் தொகை பெறவில்லை என விண்ணப்பத்தாரரின் உறுதி மொழிச்சான்றிதழ்
4. அடையாள அட்டை, வாரிய அட்டை (ம) குடும்ப அட்டை நகல்.

ரூ.500/-

விண்ணப்பம்-21ஏ

 

2. பிற துறைகள் மூலமாக வழங்கப்படும் நலத்திட்ட உதவிகள் :

 


வ.எண்

துறை/தொடா்புகொள்ள
வேண்டிய அலுவலகம்

திட்டத்தின் பெயா்

வழங்கப்படும் உதவி

1

தாட்கோ, மாவட்ட ஆட்சியா் அலுவலகம், தூத்துக்குடி

மாவட்ட ஆட்சியா்  தன்விருப்ப நிதியின் மூலம் சுய தொழில் புரிய நிதியுதவிகள்

ரூ.20,000/- மானியம்

2.

மாவட்ட சமூக நல அலுவலகம், தூத்துக்குடி

தையல் இயந்திரம்

தையல் இயந்திரம்

3.

மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை, ஊராட்சி ஒன்றிய அலுவலகம்.

1. மகாத்மா காந்தி 100 நாள் ஊரக வேலை வாய்ப்பு திட்டம்

1.மாற்றுத்திறனாளிகளுக்கு 4 மணி நேர பணிக்கு முழு ஊதியம்.

2.கடுமையான மாற்றுத்திறனாளியாக இருந்தால்

 

 

2. பசுமை வீடு

மொத்த ஒதுக்கீட்டில் 3 விழுக்காடு மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கப்படுகிறது

 

 

3.இந்திரா காந்தி குடியிருப்பு திட்டம்

மொத்த ஒதுக்கீட்டில் 3 விழுக்காடு மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கப்படுகிறது

4.

திட்ட மேலாளா் மகளிர் மேம்பாட்டு கழகம்

 

வறுமை கோட்டின் கீழ் உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு சுய தொழில் வங்கி கடன் மானியம் வழங்கப்படுகிறது.

5.

சமூக பாதுகாப்பு வட்டாட்சியா்

உடல் உழைப்பு செய்ய இயலாத 18 வயதிற்கு மேற்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு மாதாந்திர உதவித் தொகை

மாதம் ரூ.1000/- வழங்கப்படுகிறது

6.

புதுவாழ்வு திட்டம்

 

தூத்துக்குடி

 

கோவில்பட்டி, விளாத்திகுளம், புதூர், கயத்தார், .ஓட்டப்பிடாரம் ஆகிய ஊராட்சி ஒன்றியங்களில் செயல்படுத்தப்படுகிறது.

 

 

 

 

மாற்றுத்திறனாளிகள் மேம்பாட்டு திட்டங்கள்

1. மாற்றுத்திறனாளிகள் தனிநபா் உதவி

2. மாற்றுத்திறனாளிகள் திறன் வளா்ப்பு பயிற்சி

3.நலிவுற்றோர்கள்-தனிநபா் கடன்

4. ஆதார நிதி வழங்குதல்

5. சுழல்நிதி வழங்குதல்

 

3.மாற்றுத்திறனாளிகளுக்கான சலுகைகளுக்கான அரசாணைகள் மற்றும் படிவங்கள் :

 


வ.எண்

சலுகை

அரசாணை எண், நாள் மற்றும் படிவங்கள்

1

அரசு மற்றும் அரசு சார்பு நிறுவனங்களில் பணிபுரியும் கை, கால் பாதிக்கப்பட்ட பார்வையற்ற மாற்றுத்திறனாளிகளுக்கு போக்குவரத்துப்படி ரூ.1000/- வழங்கப்படுகிறது

அரசாணை நிலை எண் 391
நிதித்துறை நாள் 07.10.2010

2.

பணிபுரியும் கை, கால் பாதிக்கப்பட்ட
பார்வையற்ற காது கேளாத மாற்றுத்திறனாளிகளுக்கு தொழில்வரி
விலக்கு

அரசு கெசட் எண் 250, நாள் 05.09.2012.

3.

 அரசு பணிபுரியும் கடும் மாற்றுத்திறனாளிகளுக்கு 15 நிமிடங்கள் முன்னதாக செல்ல அனுமதி

அரசாணை நிலை எண் 149.
பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்தத்துறை,
நாள் 19.08.2008

4.

மாற்றுத்திறனாளிகள் முடிந்தவரை சொந்த
ஊரிலேயே பணிபுரிய பணிமாறுதல் வழங்குதல்.

அரசு கடிதம் எண் 92-2-2009,
பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்தத்துறை,
நாள் 22.08.2009.

5.

மாற்றுத்திறனாளிகள் தினம் டிசம்பர் 3ம் நாள் மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பு விடுப்பு அனுமதி

அரசாணை நிலை எண 72, சமூக நலத்துறை
நாள் 28.05.2009

6.

அரசு மற்றும் அரசு சார்பு நிறுவனங்களில்
மாற்றுத்திறனாளிகளுக்கு ஏ,பி,சி மற்றும் டி பணியிடங்களில் 3 விழுக்காடு இட ஒதுக்கீடு

அரசாணை நிலை எண் 5. மாற்றுத்திறனாளிகள் நலத்துறை, நாள் 29.01.2013

7.

அரசு மற்றும் அரசு சார்பு நிறுவனங்களில்
வயது வரம்பு விலக்கு 10 ஆண்டுகள் மாற்றுத்திறனாளிகளுக்கு கூடுதல் சலுகை

அரசாணை நிலை எண் 704.
பொதுத்துறை நாள் 15.04.1964

8.

அனைத்து அரசு மற்றும் அரசு உதவிபெறும்
கல்வி நிலையங்களில் மாற்றுத்திறனாளிகளுக்கு 3 விழுக்காடு இட ஒதுக்கீடு.

அரசாணை நிலை எண் 602, சமூக நலத்துறை
நாள் 14.08.1981.

9.

அரசு மற்றும் அரசு உதவிபெறும் கல்லூரிகளில் பயிலும் மாற்றுத்திறனாளி
மாணவ. மாணவியருக்கு கல்வி கட்டணம் செலுத்துவதில் இருந்து விலக்கு.

அரசாணை நிலை எண் 135 சமூகநலத்துறை,
நாள் 20.09.2008

10.

அரசு மற்றும் அரசு உதவிபெறும் கல்லூரிகளில் பயிலும் மாற்றுத்திறனாளி மாணவ மாணவியருக்கு தனி கட்டணம்
செலுத்துவதில் இருந்து விலக்க

அரசாணை நிலை எண் 30
மாற்றுத்திறனாளிகள் நலத்துறை நாள் 28.06.2010

11.

மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை வழங்குவதற்கான வழிகாட்டும் அரசாணை

அரசாணை நிலை எண் 21
மாற்றுத்திறனாளிகள் நலத்துறை, நாள் 17.06.2011

12..

கை, கால் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கான 75 விழுக்காடு இரயில் கட்டண சலுகை

விண்ணப்பம்-22

13.

பார்வையற்ற மாற்றுத்திறனாளிகளுக்கான 75 விழுக்காடு இரயில் கட்டண சலுகை

விண்ணப்பம்-23

14.

செவித்திறன் குறையுடைய மாற்றுத்திறனாளிகளுக்கான 50 விழுக்காடு இரயில் கட்டண சலுகை

விண்ணப்பம்-24

15.

மனவளர்ச்சி குன்றிய மாற்றுத்திறனாளிகளுக்கு 75 விழுக்காடு இரயில் கட்டண சலுகை

விண்ணப்பம்-25

 

4. மாற்றுத்திறனாளிகளுக்கான தொண்டு நிறுவனங்கள் :

 


.எண்

 தொண்டு நிறுவனங்கள்

செயல்படுத்தப்படும்
திட்டங்கள்

தொலைபேசி
எண்கள்

1.

அன்பு உள்ளங்கள்,
மனநல காப்பகம்,
கூட்டாம்புளி,
தூத்துக்குடி மாவட்டம்

18 வயதிற்கு மேற்பட்ட மனநலம் குன்றியோர்க்கான
காப்பகம்.

0461-2271538

2.

கனான் தாமஸ் சித்தர் மனவளர்ச்சி குன்றியோர்க்கான
காப்பகம்,
திருமறையுர்,
நாசரேத்,
தூத்துக்குடி மாவட்டம்

14 வயதிற்கு மேற்பட்ட மனவளர்ச்சி குன்றிய ஆண்கள் காப்பகம்.

04639-2279244

3.

புனித சூசை அறநிலையம்,
அடைக்கலாபுரம்,
திருச்செந்தூர்,
தூத்துக்குடி மாவட்டம்.

14 வயதிற்கு மேற்பட்ட மனவளர்ச்சி குன்றிய பெண்கள் காப்பகம்.

04639-242739
04639-245248
04639-243878

4.

SCHTமாற்றுத்திறனாளிகளுக்கான இல்லம்,
அனவரதநல்லூர்.

5 முதல் 18 வயது வரை உள்ள மனவளர்ச்சி குன்றிய ஆண்கள் காப்பகம்.

04630-263240

5.

புனித ஜோசப் தொழுநோய் மருத்துவமனை,
ஆரோக்கியபுரம்,
சாத்தான்குளம்,
தூத்துக்குடி மாவட்டம்

தொழுநோயால் பாதிக்கப்பட்டோருக்கான
இல்லம்

04639-274227
04639-274277

 

5. மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்புப்பள்ளிகள் :

 


.எண்

சிறப்புப்பள்ளிகள்

செயல்படுத்தப்படும்
திட்டங்கள்

தொலைபேசி
எண்கள்

1.

புனித ரபேல் மனவளர்ச்சி குன்றியோர்க்கான சிறப்புப்பள்ளி,
சாயர்புரம்,
ஸ்ரீவைகுண்டம் வட்டம்.
தூத்துக்குடி.

மனவளர்ச்சி குன்றியோர்க்கான சிறப்புப்பள்ளி

04630-274005
9442286621

2.

புனித லூசியா மாற்றுத்திறனாளிகளுக்கான இடைநிலை மாறுபாட்டுப்பள்ளி,
சில்வர்புரம்,
மீளவிட்டான்,
தூத்துக்குடி.

 

மாற்றுத்திறனாளிகளுக்கான இடைநிலை மாறுபாட்டுப்பள்ளி..

1 முதல் 8ம் வகுப்பு வரை உள்ளது.

0461-2345703
9487384716

3.

நல்லாயன் செவித்திறன் குறையுடையோர் பள்ளி,
பிரையண்ட் நகர்,
3வது தெரு,
தூத்துக்குடி.

 

செவித்திறன் குறையுடையோர்க்கான பள்ளி
1 முதல் 8ம் வகுப்பு வரை உள்ளது.

0461-2375246
8189877246

4.

காதுகேளாதோருக்கான சிறப்புப்பள்ளி,
திருமறையுர்,
நாசரேத், திருச்செந்தூர்,
தூத்துக்குடி.

செவித்திறன் குறையுடையோர்க்கான பள்ளி
1 முதல் 8ம் வகுப்பு வரை உள்ளது

04639-279267
9659292051

5.

கனான் தாமஸ் சித்தர் மனவளர்ச்சி குன்றியோர்க்கான சிறப்புப்பள்ளி,
திருமறையுர்,
நாசரேத், திருச்செந்தூர்,
தூத்துக்குடி..

மனவளர்ச்சி குன்றியோர்க்கான சிறப்புப்பள்ளி

04639-279244
9095046683

6.

வ.உ.சி கல்வி அறக்கட்டளை சிறப்புப்பள்ளி,
சிதம்பரநகர்,
தூத்துக்குடி.

மனவளர்ச்சி குன்றியோர்க்கான சிறப்புப்பள்ளி

0461-2325930
9486990377

7.

வித்யாபிரகாசம் மனவளர்ச்சி குன்றியோர்க்கான சிறப்புப்பள்ளி,
முத்தம்மாள் காலனி,
தூத்துக்குடி.

மனவளர்ச்சி குன்றியோர்க்கான சிறப்புப்பள்ளி

0461-2345055
9488355857

8.

டாக்டர் அருள்ராஜ் சிறப்புப்பள்ளி (SAH)
மடத்தூர்,
கோரம்பள்ளம்,
தூத்துக்குடி.

மனவளர்ச்சி குன்றியோர்க்கான சிறப்புப்பள்ளி

0461-2320061
9791666001

9.

துளிர் மனவளர்ச்சி குன்றியோர்க்கான சிறப்புப்பள்ளி,
காயல்பட்டணம்,
திருச்செந்தூர்,
தூத்துக்குடி மாவட்டம்

மனவளர்ச்சி குன்றியோர்க்கான சிறப்புப்பள்ளி
1 முதல் 5ம் வகுப்பு வரை

04639-284662
9381504443

 

6. மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக செயல்படும் அரசு நிறுவனங்களின்        இணையதளங்கள் :

 

வ.எண்

அரசு நிறுவனத்தின் பெயர்

இணையதள முகவரி

1.

மாற்றுத்திறனாளிகளுக்கான மாநில ஆணையர் அலுவலகம்,
கே.கே. நகர், சென்னை – 78

www.scd.tn.gov.in

2.

சமூகநீதி மற்றும் அதிகாரம் வழங்கல் அமைச்சகம், மாற்றுத்திறனாளிகள் நலன்

www.socialjustice.nic.in

3.

National Institute for Empowerment of Persons with Multiple Disabilities (NIEPMD)
East Coast Road, Muttukadu, Kovalam post,
Chennai – 603112.

www.niepmd.tn.nic.in

4.

தூத்துக்குடி மாவட்ட மாற்றுத்திறனாளிகளுக்கான திட்டங்கள் மற்றும் அதற்கான விண்ணப்பங்கள்

www.thoothukudi.nic.in

 

 


அமைப்பு வெளியீடு - மாவட்ட ஆட்சியர் தூத்துக்குடி
ஆக்கம் தேசிய தகவலியல் மையம், தூத்துக்குடி