பின்னால் செல்லவும்

மாவட்ட கண்பார்வையற்றோர் கட்டுபாட்டு நலசங்கம்


மாவட்ட பார்வை இழப்பு தடுப்புச் சங்கம், தூத்துக்குடி

 

சங்கத்தலைவர்

மாவட்ட ஆட்சித்தலைவர்

 

பொறுப்பு அலுவலர், செயலர்

 

மரு.S.V.சந்திரகுமார்,
எம்.எஸ்,டிஓ.,
மாவட்ட திட்ட மேலாளர்,
தலைமை மருத்துவர்

தூத்துக்குடி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமைனை,
தூத்துக்குடி.

அலுவலகம்

தூத்துக்குடி மருத்துவக்கல்லூரி  
மருத்துவமனை, தூத்துக்குடி-3.

தொலைபேசி

 0461-2330007

பதிவு செய்த தேதி

 பதிவு எண். 49/91 நாள் 30.07.91

 

சங்கத்தின் செயல்பாடுகள்

  1. மாதாமாதம் இலவச கண்சிகிச்சை முகாம்கள் நடத்த ஏற்பாடு செய்தல்,  ஆரம்ப சுகாதார கண்மருத்துவ உதவியாளர்கள் தொண்டு நிறுவனங்களுடன் இணைந்து முகாம் நடத்த ஏற்பாடு செய்தல்.
  2. மாநிலத்திலிருந்து வரும் நிதியைக் கொண்டு கீழ்க்கண்ட செலவுகள் செய்யப்படுகிறது.
 1. கண் அறுவை சிகிச்சைக்கு தேவையான கண்மருந்துகள், தலைமை கண் மருத்துவரின் தேவைக்கு ஏற்ப தூத்துக்குடி மருத்துவக்கல்லூரி மருத்துவமனை, அரசு தலைமை மருத்துவமனை, கோவில்பட்டி, அரசு மருத்துவமனை, திருச்செந்தூர் ஆகியோருக்கு வாங்கிக்கொடுத்தல்.
 2. கண் அறுவை சிகிச்சைக்குத் தகுதியான நபர்களை திருச்செந்தூர் அரசு மருத்துவமனை, கோவில்பட்டி அரசு தலைமை மருத்துவமனை, தூத்துக்குடி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை ஆகிய இடங்களுக்கு அழைத்து வந்து இலவசமாக கண் அறுவை சிகிச்சை செய்யப்படுகிறது.
 3. கண் அறுவை சிகிச்சைக்கு அழைத்து வரும் நோயாளிகளுக்கு போக்குவரத்து, தங்குமிடம், உணவு, ஐஓஎல் லென்ஸ் இலவசமாக வழங்கப்படுகிறது.
 4. பொது சுகாதாரப் பணியாளர்களுடன் வியாழக்கிழமை தோறும் பள்ளிக்குழந்தைகள் பார்வையிடப்பட்டு வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள குழந்தைகளுக்கு இலவசமாக மூக்குக்கண்ணாடி வழங்கப்படுகிறது.
 5. தொண்டு நிறுவனங்களான அரவிந்த் கண் மருத்துவமனை, திருநெல்வேலி சங்கரா கண்மருத்துவமனை, கிருஷ்ணன்கோவில் பெஜான்சிங் கண்மருத்துவமனை, நாகர்கோவில் ஆகியவர்களுக்கு வருடாவருடம் இலவச கண் சிகிச்சை முகாம் நடத்த அனுமதியும் மாதாமாதம் முகாம் நடத்த அனுமதியும் வழங்கப்பட்டு வருகிறது.
 6. தொண்டு நிறுவனங்கள் இலவச கண் சிகிச்சை முகாம்கள் நடத்தி கண் அறுவை சிகிச்சை செய்யும் வகைக்கு போக்குவரத்து, விளம்பரம், தங்குமிடம், லென்ஸ் ஆகியவற்றிற்காக ஒரு கேஸ்க்கு ரூ.625⁄-  (ஐஓஎல்) ரூ.500 (கேட்ரக்ட்) வீதம் அரசு உதவித்தொகை இச்சங்கத்திலிருந்து வழங்கப்படுகிறது.
 7. மாதாமாதம் கண் மருத்துவர், கண்மருத்துவ உதவியாளர்களுக்கும் தொண்டு நிறுவனங்கள் சாதனைப் பற்றியும் ஆய்வுக் கூட்டம் இணை இயக்குநர் அலுவலகத்தில் வைத்து நடைபெறுகிறது.
 8. கண்தானம் பற்றி, கண்பார்வை தினம் பற்றி அவ்வப்போது பத்திரிக்கைகளில் விளம்பரம் செய்வது மற்றும் விழிப்புணர்ச்சி ஏற்படுத்துவது.
 9. கண்தானம் பற்றி, கண்பார்வை தினம் பற்றி அவ்வப்போது பத்திரிக்கைகளில் விளம்பரம் செய்வது மற்றும் விழிப்புணர்ச்சி ஏற்படுத்துவது.
 10. தூத்துக்குடி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை, அரசு தலைமை மருத்துவமனை, கோவில்பட்டி, அரசு மருத்துவமனை, திருச்செந்தூர் ஆகியோருக்குத் தேவையான கண் அறுவை சிகிச்சை உபகரணங்கள், ஐஓஎல் லென்ஸ் வாங்கிக் கொடுத்தல்.
 11. மாதாந்திர அறிக்கை, காலாண்டு அறிக்கை தயார் செய்து நலவாழ்வு இயக்குநர் மாநில சுகாதார சங்கம் சென்னை, திட்ட இயக்குநர் மாநில பார்வையிழப்பு தடுப்புச் சங்கம், சென்னை, இயக்குநர், மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் மற்றும் மாவட்ட ஆட்சி்த்தலைவர் அவர்களுக்கும் அனுப்பப்படுகிறது.
 12. மூன்று மாதத்திற்கு ஒருமுறை சென்னையில் நடைபெறும் நலவாழ்வு இயக்குநர் மாநில சுகாதார சங்கம் சென்னை ஆய்வில் கலந்து கொண்டு அவர்கள் அறிவுரைப்படி நடப்பது.
 13. மாவட்ட ஆட்சித்தலைவர், இணை இயக்குநர் சுகாதாரப்பணிகள், துணை இயக்குநர் சுகாதாரப்பணிகள், தூத்துக்குடி, கோவில்பட்டி மற்றும் நேர்முக உதவியாளர் வளர்ச்சிப்பிரிவு ஆகியோருடன் தொடர்பு கொண்டு கண் சம்பந்தமாக நடவடிக்கைகள் எடுத்தல்.
 14. ஊராட்சி ஒன்றிய மன்றத்தலைவர்கள், ஊராட்சி ஒன்றிய ஆணையர், மாவட்ட கல்வி அலுவலர்கள் மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்களுடன் தொடர்பு கொண்டு கண் சம்பந்தமாக செய்தியை மக்களுக்கு தெரிவிப்பது, இலவச கண் சிகிச்சை முகாம்கள் நடத்துவது.

பணியாளர்கள் விபரம்

      திட்ட ஒருங்கிணைப்பாளர், ஊர்தி ஓட்டுநர், பெண் பணியாளர் (கோவில்பட்டி)

      மேலே குறிப்பிட்டுள்ள அனைத்து வேலைகளையும் இணை இயக்குநர், மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் அனுமதி பெற்று செய்யப்படுகிறது.

2006-2007 முதல் 31.03.2013 முடிய குறியீடு, சாதனை விவரம்

வருடம்

குறியீடு

சாதனை

விழுக்காடு

2006-2007

9500

10045

105

2007-2008

10000

10381

104

2008-2009

14000

9493

69

2009-2010

14000

9609

69

2010-2011

14000

10296

74

2011-2012

14000

13497

103

2012-2013

13000 13046 100

 

நிதி ஒதுக்கீடு 31.03.2013 முடிய

வருடம்

ஒதுக்கீடு

செலவு

2006-2007

1926402

1685661

2007-2008

2108734

2040329

2008-2009

5267327

4282632

2009-2010

3962506

3339668

2010-2011

3579546

3369642

2011-2012

3865829

3743463

2012-2013 2920000 2570916

 

அமைப்பு வெளியீடு - மாவட்ட ஆட்சியர் தூத்துக்குடி
ஆக்கம் தேசிய தகவலியல் மையம், தூத்துக்குடி