பின்னால் செல்லவும்

மாவட்ட பிற்பட்டோர் நல அலுவலகம்துறை

:

மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகம தூத்துக்குடி

முகவரி

:

தரைதளம், மாவட்ட ஆட்சியா அலுவலகம், தூத்துக்குடி.

தொலைபேசி எண்

:

0461  2341378

 

துறைவாரி அறிக்கை

 

20.10.1986 முதல் தூத்துக்குடி மாவட்டஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இது தூத்துக்குடி நகரத்திலிருந்து 7 கி.மீ தொலைவில் உள்ளது. பிற்படுத்தப்பட்டோர்,மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் மற்றும் சிறுபான்மையினா இன மக்களுக்காக பல்வேறு நலத்திட்டங்கள் அமுல்படுத்த அரசிடமிருந்து அறிவுரைகள் வரப்பெற்று தூத்துக்குடி மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தின் மூலம் கீழ்க்கண்ட திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது.


 திட்டங்கள்
1)சிறுபான்மையினருக்கான பள்ளிப்படிப்பு உதவித்தொகை

 

அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனங்களில் 1 முதல் 10ம் வகுப்பு வரை பயிலும் சிறுபான்மையினர் இன மாணவாகளுக்கு ரூ.1000 வழங்கப்படுகிறது.
தகுதிகள்

 


(1)

ஆங்கில வழி மற்றும் தமிழ் வழி கல்வி பயிலும் மாணவாகளின் பெற்றேர்ர்களின் ஆண்டு வருமானம் ரூ.100000 மிகாமல் இருக்க வேண்டும்.

(2)

மாணவாகள் முந்தைய இறுதி தேர்வில் 50 சதவீதம் மிகாமல் இருக்க வேண்டும்.

 

2)சிறுபான்மையினருக்கான பள்ளிமேற்படிப்பு உதவித்தொகை
தகுதிகள்

 

ப்ளஸ் 1 மற்றும் பளஸ் 2 (ஆங்கிலம், தமிழ்வழி) பட்டப்படிப்பு, முதுகலை பட்டப்படிப்பு மற்றும் பட்டயப்படிப்பு ஆகியவற்றை அரசு மற்றும் அரசு உதவி பெறும் மற்றும் தனியா பள்ளி/கல்லூரிகளில்/பாலிடெக்னிக்/ஐடிஐ/ஐஎசி-யில் பயிலும் சிறுபான்மையினா மாணவாகளுக்கு கீழ்க்கண்டவாறு உதவித்தொகை வழங்கப்படுகிறது

 


பாடமுறை

நுழைவு கட்டணம் மற்றும் படிப்பு கட்டணம்(Admission & Tuition fees)

பராமரிப்புத்தொகை விடுதி மாணவாகளுக்கு

ப்ளஸ்1,ப்ளஸ்2

7000

3800

2300

ITI. ITC. Polytechnic, Professional  courses

10000

3800

2300

பட்ட மற்றும் பட்ட மேற்படிப்பு
(Bachelor & Master courses)

3000

5700

3000

Research studies (M.Phil, Ph.d)

0

12000

5500

 

தகுதிகள்

 


(1)

ஆங்கில வழி மற்றும் தமிழ் வழி கல்வி பயிலும் மாணவாகளின் பெற்றேர்ர்களின் ஆண்டு வருமானம் ரூ.100000 மிகாமல் இருக்க வேண்டும்.

(2)

மாணவாகள் முந்தைய இறுதி தேர்வில் 50 சதவீதம் மிகாமல் இருக்க வேண்டும்.

 

3) இலவச கல்வி உதவித்தொகை

 

(1) பிற்படுத்தப்பட்டோர் , மிக பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினா மாணவாகளுக்கு படிப்புக் கட்டணம் வழங்குதல்

 

அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஆங்கில மொழி வழியில் 6ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை பயிலும் மாணவாகளுக்கு பின்வருமாறு படிப்புக்கட்டணம் வழங்கப்படுகிறது.


ஆண்டொன்றுக்கு

..

ரூ.

1 முதல் 6ம் வகுப்பு வரை

..

200/-

9 மற்றும் 10ம் வகுப்பு வரை

..

250/-

11ம்  மற்றும் 12ம் வகுப்பு

..

500/-

     .
(2) மூன்றாண்டு கலை மற்றும் அறிவியல் பட்டப்படிப்புகளுக்கு இலவச கல்வி உதவித்தொகை


பிற்படுத்தப்பட்டோர், மிக பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் மரபினரில் குடும்பத்தில் முதன் முதலாக பட்டப்படிப்பு பயிலும் மாணவாகள் தகுதி பெற்றவர்கள்.


 (3)கலை மற்றும் அறிவியல் கல்லுர்ரி (Arts and Science colleges)

 


(1)

குடும்ப ஆண்டு வருமானம் ரூ.100000 மிகாமல் இருக்க வேண்டும்.(பிற்படுத்தப்பட்டோர் மாணவர்களுக்கு மட்டும்)

(2)

மாணவாகள் முந்தைய இறுதி தேர்வில் 40 சதவீதம் பெற்றிருக்க வேண்டும்.

(3)

குடும்பத்தில் பட்டதாரி இல்லை எனச் சான்று வேண்டும். (மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் மாணவாகளுக்கு நிபந்தனைகள் ஏதுமில்லை).

 

(4) பாலிடெக்னிக் மற்றம் தொழிற்கல்வி கல்லூரிகள்

 


(1)

குடும்ப ஆண்டு வருமானம் ரூ.100000 மிகாமல் இருக்க வேண்டும்.

(2)

பிற்படுத்தப்பட்டோர், மிக பிற்படுத்தப்பட்டோர் மாணவர்கள் முந்தைய இறுதி தேர்வில் 40 சதவீதம் பெற்றிருக்க வேண்டும்.(சீர்மரபினர் மாணவர்களுக்கு நிபந்தனையில்லை.

(3)

மாணவாகள்  முதல் பட்டதாரியாக இருக்க வேண்டும்.


 (4) தொழில்  கல்வி,பட்டப்படிப்பு பயில்வோருக்கு இலவச கல்வி உதவித்தொகை(மருத்துவம், பொறியியல், சட்டம், வேளாண்மை மற்றும் கால்நடை மருத்துவம்)

அரசு மற்றும் அரசு உதவி பெறும் தொழில் கல்லூரிகளில் பயிலும் பிற்படுத்தப்பட்டோர், மிக பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினா மாணவாகளில் பெற்றோரது ஆண்டு வருமானம் ரூ.100000 மிகாமல் குடும்பத்தில் எவரும் பட்டதாரி இல்லாதவாகள் இத்திட்டத்தின் கீழ் பயன் அடையலாம். சிறப்பு கட்டணம், படிப்பு கட்டணம், தேர்வு கட்டணம் மற்றும் திரும்ப பெற்றிடாத கட்டணம் ஆகியவை வழங்கப்படும். இது தவிர தமிழ்நாடு அரசின் உதவித்தொகை அறிவிக்கையில் வரையறுக்கப்பட்ட புத்தகத்தொகையும் வழங்கப்படும்.

சுயநிதி கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டின் கீழ் ஒற்றைச்சாரை முறையில்  தேர்வு செய்யப்படும் மாணவாகளுக்கும் மேற்காணும் நிபந்தனைகளுக்கு உட்பட்டு வழங்கப்படும். இதில் அரசு பொறியியல் கல்லூரிகளில் எவ்வளவு கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதோ அதே தொகை வழங்கப்படும். கல்லூரிகளில்  பயிலும் பிற்படுத்தப்பட்டோர், மிக பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபின மாணவர்களுக்கு உதவித்தொகை 2009-2010ம் ஆண்டு முதல் கல்லூரிகள் மூலம் இணையதளம் வழியாக அனுப்ப்ப்படும் கேட்புகள் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் அவர்களால் அனுப்ப்ப்படுகிறது.


4)கிராமப்புற மாணவியர்களுக்கான கல்வி ஊக்கத்தொகை (மிபிப/சீர்மரபினருக்கு மட்டும்)

 

கிராமப்புறங்களில் அமைந்துள்ள பள்ளிகளில் கல்வி பயிலும் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினா வகுப்பை சார்ந்த மாணவியாகள் தங்களது கல்வியினை இடையில் நிறுத்தாமல் தொடர்ந்து கல்வி பயிலுபவரை ஊக்குவிக்கும் பொருட்டு 3ம் வகுப்பு முதல் 5ம் வகுப்பு வரை பயிலும் மாணவியாகளுக்கு ரூ.500/- (ஆண்டொன்றுக்கு) 6ம் வகுப்பு மாணவியருக்கு ரூ.1000/- (ஆண்டொன்றுக்கு) ஊக்கத்தொகை வழங்கப்படுகிறது.
தகுதிகள்

 

(1)

குடும்ப ஆண்டு வருமானம் ரூ.250000/-

(2)

கிராமப்புறங்களில் அமைந்துள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயில வேண்டும்.

(3)

ஆதரவற்ற விதவை மற்றும் கணவனால் கைவிடப்பட்ட பெண்களின் குழந்தைகளுக்கு முன்னுரிமை வழங்கப்பட வேண்டும்.

 

5)இலவச மிதிவண்டிகள் வழங்கும் திட்டம்

 

தூத்துக்குடி மாவட்டத்தில் அரசு, அரசு உதவி பெறும் மற்றும் பகுதி உதவி பெறும் பள்ளிகளில் பளஸ் 1 பயின்று வரும் பிற்படுத்தப்பட்ட, மிக பிற்படுத்தப்பட்ட மற்றும் சீர்மரபினா இன மாணவ, மாணவியாகளுக்கு இலவச மிதிவண்டிகள் வழங்கப்படுகிறது.


6) 10ம் வகுப்பு பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்று தலைசிறந்த பள்ளிகளில் ப்ளஸ்1 (11ம் வகுப்பு) சேர்ந்துள்ள பிவ, மிபிவ, சீம. மாணவ, மாணவியர்களுக்கு பரிசு வழங்குதல்

 

பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்று அவர்கள் விரும்பும் தலைசிறந்த தனியார் பள்ளிகளில் 11ம் வகுப்பு மாணவ, மாணவியர்களுக்கு பளிளியில் பயில ஆண்டொன்றுக்கு ரூ.28000/– வீதம் இரண்டு ஆண்டுகளுக்கு ரூ.56000/– வழங்கப்படுகிறது.

 

பிற்படுத்தப்பட்டோர்

ஆண்கள்

3

பெண்கள்

3

மிக பிற்படுத்தப்பட்டோர்  சீர்மரபினர்

ஆண்கள்

2

பெண்கள்

2

 

தகுதிகள்

 

10ம் வகுப்பு அரசுப் பள்ளியில் பயின்று இருக்க வேண்டும்.

11ம் வகுப்பு தலைசிறந்த பள்ளியில் பயில வேண்டும்

மாணவரது குடும்ப ஆண்டு வருமானம் ரூ.1,00,000/– க்கு மிகாமல் இருக்க வேண்டும்.


7) பேரறிஞர் அண்ணா நினைவு பரிசு

 

மாவட்ட அளவில் 12ம் வகுப்பு பொதுத் தேர்வில் முதல் இரண்டு நிலைகளில் அதிக மதிப்பெண் பெற்று தொழிற் பட்டப்படிப்புகளில் சேர்ந்து பயிலும் பிற்படுத்தப்பட்ட, மிக பிற்படுத்தப்பட்ட மற்றும் சீர்மரபினர் இன 2 மாணவ, 2 மாணவியாகளுக்கு ரூ.10000/– வீதம் கீழ்க்கண்டவாறு வழங்கப்படுகிறது.

 


பிற்படுத்தப்பட்டோர்

2 ஆண்கள்

10000

2 பெண்கள்

10000

மிக பிற்படுத்தப்பட்டோர் / சீர்மரபினர்

2 ஆண்கள்

10000

2 பெண்கள்

10000


8)தந்தை பெரியார் நினைவு பரிசு

 

மாவட்ட அளவில் 10ம் வகுப்பு பொதுத் தேர்வில் முதல் இரண்டு நிலைகளில் அதிக மதிப்பெண்கள் பெற்று தொழிற்நுட்ப கல்லூரிகளில் கல்வி பயிலும் பிற்படுத்தப்பட்ட, மிக பிற்படுத்தப்பட்ட மற்றும் சீர்மரபினர் இன 2 மாணவ, 2 மாணவியாகளுக்கு ரூ.10000/– வீதம் கீழ்க்கண்டவாறு வழங்கப்படுகிறது.

 


பிற்படுத்தப்பட்டோர்

2 ஆண்கள்

10000

2 பெண்கள்

5000

மிக பிற்படுத்தப்பட்டோர் / சீர்மரபினர்

2 ஆண்கள்

5000

2 பெண்கள்

5000

 

 

மேற்படி பரிசு திட்டங்களின் கீழ் ஒன்றுக்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர்கள் ஒரே மதிப்பெண் பெற்றிருந்தால் அவாகள் அனைவருக்கும் பரிசுத்தொகை முழுமையாக வழங்கப்படும்.


9) பொதுப்பரிசுகள்

 

மாவட்ட அளவில் முதல் மூன்று இடங்களை பிடித்த 10 மற்றும் 12ம் வகுப்பைச் சேர்ந்த பிற்படுத்தப்பட்ட, மிக பிற்படுத்தப்பட்ட மற்றும் சீர்மரபினா இன மாணவ, மாணவியாகளுக்கு கீழ்க்கண்டவாறு பரிசுகள் வழங்கப்படுகிறது.
மாவட்ட அளவில் 12ம் வகுப்பு பொதுத் தேர்வில் முதல் இரண்டு நிலைகளில் அதிக மதிப்பெண் பெற்று தொழிற் பட்டப்படிப்புகளில் சேர்ந்து பயிலும் பிற்படுத்தப்பட்ட, மிக பிற்படுத்தப்பட்ட மற்றும் சீர்மரபினர் இன 2 மாணவ, 2 மாணவியாகளுக்கு ரூ.5000/– வீதம் கீழ்க்கண்டவாறு வழங்கப்படுகிறது.

 


10ம் வகுப்பு

முதல் பரிசு

1500

2 ம் பரிசு

1000

3ம் பரிசு

500

12ம் வகுப்பு

முதல் பரிசு

3000

2 ம் பரிசு

2000

3ம் பரிசு

1000

 

 

மேற்படி பரிசு திட்டங்களின் கீழ் ஒன்றுக்கும் மேற்பட்ட மாணவ,மாணவியாகள் ஒரே மதிப்பெண் பெற்றிருந்தால் அவர்கள் அனைவருக்கும் பரிசுத்தொகை முழுமையாக வழங்கப்படும்.


10) விடுதிகள் பராமரிப்பு

 

பிற்படுத்தப்பட்ட, மிக பிற்படுத்தப்பட்ட மற்றும் சீர்மரபினர் இன மாணவ, மாணவியர்களுக்கு விடுதியில் தங்கிப் பயில்வதற்கு வசதிகள் செய்து தரப்பட்டுள்ளது.

தகுதிகள்

  1. பள்ளி விடுதிகள்

1)

4ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு பயிலும் மாணவர்களாக இருத்தல் வேண்டும்.

2)

பெற்றோரின் குடும்ப ஆண்டு வருமானம் ரூ.1,00,000/- மிகாமல் இருத்தல் வேண்டும்.

3)

மாணவர்களாக இருப்பின் அவர்களது இருப்பிடம் பள்ளியிலிருந்து 8 கி.மீ.க்கு மேல் இருக்க வேண்டும். மாணவியர்களுக்கு எந்தவித நிபந்தனையும் இல்லை.


(2)கல்லூரி விடுதிகள்

 


1)

கல்லூரி மாணவர்களாக இருப்பின் ஏதாவது ஒரு கல்லூரியில் பட்டப்படிப்பு (அ)பட்ட மேற்படிப்பு படிப்பவராக இருத்தல் வேண்டும்..

2)

பெற்றோரின் குடும்ப ஆண்டு வருமானம் ரூ.1,00,000/- மிகாமல் இருத்தல் வேண்டும்.


(3)விடுதிகளின் எண்ணிக்கை விபரம்
பள்ளி விடுதிகள் மொத்தம் -36

 

 

ஆண்கள்

பெண்கள்

பிற்படுத்தப்பட்டோர்

15

10

மிக பிற்படுத்தப்பட்டோர்

4

2

சீர்மரபினா

2

1

கல்லூரி விடுதிகள்

1

1

மொத்தம்

22

14

                                                

 

 

அரசு கட்டிடத்தில் இயங்கும் விடுதிகள்

..

29

தனியார் மற்றும் வாடகை கட்டிடத்தில் இயங்கும் விடுதிகள்

..

7

மொத்த விடுதிகள்

..

36

 

 

விடுதிகளை சிறப்பாக பராமரித்திட கீழ்க்கண்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.

 


(1)

மாணவர்கள் பள்ளி முடிந்தவுடன் விடுதியில் கண்டிப்பாக ஆஜரில் இருக்க வேண்டும்.

(2)

விடுதி மாணவர்களுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டால் உடனடியாக அவர்கள மருத்துவமனையில் அனுமதித்து அதன் விபரத்தை அவர்களது பெற்றோர்களுக்கும் பின்னா மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலருக்கும் தெரிவிக்க வேண்டும்.

(3)

விடுதிப் பணியாளர்கள் மற்றும் காப்பாளர், காப்பாளினிகளுக்கான நகரும் பதிவேடு பராமரிக்கப்பட வேண்டும்.

(4)

விடுதியின் மாணவர்களுக்கு அரசு விதிகளின்படி தரமான உணவு வழங்கப்பட வேண்டும். முட்டை வாரத்திற்கு ஒருமுறையும், கறி மற்றும் கோழிக்கறி மாதத்திற்கு இருமுறையும் வழங்கப்பட வேண்டும். காப்பாளர், காப்பாளினிகள் மாணவர்களுக்கு வழங்கப்படும் உணவு தயாரித்தல் மற்றும் வழங்குதலை மூன்று வேளைகளும் கண்காணிக்க வேண்டும்.

(5)

காப்பாளர், காப்பாளினிகள் மாணவர்களுக்கு வழங்கப்படும் உணவினை சோதித்து ருசி பார்த்த பின்னரே மாணவர்களுக்கு வழங்க வேண்டும்.

(6)

மாணவாகளுக்கு சலவை சோப் மற்றும் குளியல் சோப் வழங்கப்படுகிறது.

(7)

காப்பாளர், காப்பாளினிகள் விடுதியிலுள்ள சமையலறை, உணவருந்தும் அறை,கழிவறை மற்றும் விடுதியில் சுற்றியுள்ள பகுதிகளை தூய்மையாக வைத்திட அறிவுறுத்தப்பட்டுள்ளனர்

(8)

விடுதி சமையலர்கள் சமையல் பாத்திரங்களை சுத்தமாக வைத்திட அறிவுறுத்தப்பட்டுள்ளனர்

(9)

மாணவர்கள் அனைவரும் நூலக புத்தகங்களை பயன்படுத்திட அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

(10)

காப்பாளர், மாணப்பாளினிகள் மாணவர்களுக்கு மாலை நேரங்களில் பாடங்களில் ஏற்படும் சந்தேகங்களுக்கு விளக்கம் கொடுத்து மாணவர்களின் படிப்பில் அக்கறை செலுத்த வேண்டும்.

(11)

தூய்மையான தண்ணா மாணவர்களுக்கு வழங்க காப்பாளர், காப்பாளினிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

(12)

மாவட்ட ஆட்சியர் தலைமையில் ஏற்படுத்தப்பட்டுள்ள குழு உறுப்பினர்களாக உள்ள துணை ஆட்சியர்கள் விடுதிகளை அவ்வப்போது ஆய்வு செய்ய வேண்டும்.

(13)

ஒவ்வொரு வருடமும் மருத்துவ முகாம் நியமிக்கப்பட்டு மாணவர்களின் உடல்நலம் பரிசோதிக்கப்படுகிறது.

(14)

மாணவர்களின் விடுதிகளிலுள்ள அறைகள் மற்றம் சுற்றுப்புறத்திற்கு மருந்து தெளிக்கப்படுகிறது.

(15)

காப்பாளர், காப்பாளினிகள்  விடுதிகளிலுள்ள மின்விளக்கு மற்றும் மின்விசிறிகளை சிறப்பாக பராமரித்திட அறிவுறுத்தப்பட்டுள்ளது.

(16)

காப்பாளர், காப்பாளினிகள் மாணவர்களை படிப்பினைத் தவிர மற்ற எந்த வேலைகளைளும் செய்ய விடக்கூடாது என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

(17)

விடுதியில் ஏதேனும் பிரச்னை ஏற்பட்டால் அதனை உடனடியாக  மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலருக்கு தெரிவித்து அதற்கு தீர்வு காண வழிவகை செய்ய வேண்டும்.

 

 

11) இலவச வீட்டுமனைப் பட்டா வழங்கும் திட்டம்

 

தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள பிற்படுத்தப்பட்ட, மிக பிற்படுத்தப்பட்ட, சீர்மரபினர் மற்றும் சிறுபான்மையினர் இனமக்களுக்கு நேரடி பேச்சு வார்த்தை மூலம் நிலம் கையக்ப்படுத்தப்பட்டு இலவச வீட்டுமனைப்பட்டா வழங்கப்படுகிறது.
தகுதிகள்
  கிராமப்புறமாக இருப்பின் வருட வருமானம் ரூ.16,000/- க்கு மிகாமல் இருக்க வேண்டும். நகர்ப்புறமாக இருப்பின் வருட வருமானம் ரூ.24,000/-க்கு மிகாமல் இருக்க வேண்டும்.


12) இலவச தேய்ப்பு பெட்டி வழங்கும் திட்டம்

 

தேய்க்கும் தொழிலை செய்யும் பிற்படுத்தப்பட்ட, மிக பிற்படுத்தப்பட்ட, சீர்மரபினா மற்றும் சிறுபான்மையினர் இனமக்களுக்கு இலவச தேய்ப்பு பெட்டி வழங்கப்படுகிறது.
 தகுதிகள்

கிராமப்புறமாக இருப்பின் வருட வருமானம் ரூ.40,000/- க்கு மிகாமல் இருக்க வேண்டும். நகர்ப்புறமாக இருப்பின் வருட வருமானம் ரூ.60,000/-க்கு மிகாமல் இருக்க வேண்டும்.


13)இலவச தையல் இயந்திரம் வழங்கும் திட்டம்

தகுதிகள்

 

கிராமப்புறமாக இருப்பின் வருட வருமானம் ரூ.40,000/- க்கு மிகாமல் இருக்க வேண்டும். நகர்ப்புறமாக இருப்பின் வருட வருமானம் ரூ.60,000/-க்கு மிகாமல் இருக்க வேண்டும். வயது வரம்பு 20லிருந்து 40க்குள் இருக்க வேண்டும்.


14) வேலை வாய்ப்பு பயிற்சி திட்டம்


 இத்திட்டத்தின் கீழ் பிற்படுத்தப்பட்ட, மிக பிற்படுத்தப்பட்ட. சீர்மரபினா இனமக்களுக்கு பயிற்சி வழங்கப்படுகிறது. வருட வருமானம் ரூ.50,000/- மிகாமல் இருக்க வேண்டும்.


15)டாப்செட்கோ திட்டம்(TABCEDCO)

 

டாப்செட்கோ திட்டத்தின் கீழ் பிற்படுத்தப்பட்ட, மிக பிற்படுத்தப்பட்ட மற்றும் சீர்மரபினா இனமக்களுக்கு டாப்செட்கோ நிறுவனமானது காலக்கடன்களை பல்வேறு திட்டங்கள் மூலம் வழங்கி வருகிறது.


தகுதிகள்

 


(1)

பிற்படுத்தப்பட்ட, மிக பிற்படுத்தப்பட்ட. சீர்மரபினர் இனமக்களாக இருத்தல் வேண்டும்.

(2)

கிராமப்புறமாக இருப்பின் வருட வருமானம் ரூ.40,000/- க்கு மிகாமல் இருக்க வேண்டும். நகர்ப்புறமாக இருப்பின் வருட வருமானம் ரூ.55,000/-க்கு மிகாமல் இருக்க வேண்டும்

(3)

வயது 18-க்கு மேல் இருக்க வேண்டும்.

(4)

குடும்பத்தில் ஒரு நபருக்கு மட்டுமே வழங்கப்படும்.

 

கடன்தொகை ரூ.1 இலட்சம் முதல் அதிகபட்சமாக ரூ.5 இலட்சம் வரை வழங்கப்படுகிறது. கடன்தொகையினை 1 முதல் 5 ஆண்டு கால அளவிற்குள் மாதாந்திரம் / வருடாந்திரம் அடிப்படையில் திருப்பி செலுத்த வேண்டும். இதற்கான வட்டி விகிதம் 6 % ஆகும்.
சிறுதொழில்கடன்

 


(1)

இத்திட்டத்தின் கீழ் பிற்படுத்தப்பட்ட, மிக பிற்படுத்தப்பட்ட. சீர்மரபினர் இனமக்களுக்கு ரூ.2000/- முதல் ரூ.10000/- கடன் வழங்கப்படுகிறது.

(2)

1 முதல் 3 ஆண்டுகளுக்குள் கடனை திருப்பி செலுத்த வேண்டும்.

(3)

ஆண்களுக்கு வட்டி விகிதம் 5% மற்றும் பெண்களுக்கு 4% வசூல் செய்யப்படும்.

 

தகுதிகள்


 விண்ணப்பதாரர்  சுயஉதவிக்குழுவில் உறுப்பினாகளாக இருக்க வேண்டும். கடன் தொகை சுயஉதவிக்குழு மூலம் வழங்கப்படும்.

கிராமப்புறமாக இருப்பின் வருட வருமானம் ரூ.40,000/- க்கு மிகாமல் இருக்க வேண்டும். நகர்ப்புறமாக இருப்பின் வருட வருமானம் ரூ.55,000/-க்கு மிகாமல் இருக்க வேண்டும்


16) டாம்கோ திட்டம் (TAMCO)

 

டாம்கோ திட்டத்தின் கீழ் பிற்படுத்தப்பட்ட, மிக பிற்படுத்தப்பட்ட மற்றும் சீர்மரபினா இனமக்களுக்கு டாம்கோ நிறுவனமானது காலக்கடன்களை பல்வேறு திட்டங்கள் மூலம் வழங்கி வருகிறது.தகுதிகள்

 


  .(1)

சிறுபான்மையினர்(முஸ்லீம், கிறிஸ்தவர்கள், சீக்கியர்கள் மற்றும் புத்தமத்த்தினர்) இனமக்களாக இருத்தல் வேண்டும்.

(2)

கிராமப்புறமாக இருப்பின் வருட வருமானம் ரூ.39,500/- க்கு மிகாமல் இருக்க வேண்டும். நகர்ப்புறமாக இருப்பின் வருட வருமானம் ரூ.54,500/-க்கு மிகாமல் இருக்க வேண்டும்

(3)

வயது 18-க்கு மேல் இருக்க வேண்டும்.

(4)

குடும்பத்தில் ஒரு நபருக்கு மட்டுமே வழங்கப்படும்.

 

கடன்தொகை ரூ.1 இலட்சம் முதல் அதிகபட்சமாக ரூ.5 இலட்சம் வரை வழங்கப்படுகிறது. கடன்தொகையினை 1 முதல் 5 ஆண்டு கால அளவிற்குள் மாதாந்திரம் / வருடாந்திரம் அடிப்படையில் திருப்பி செலுத்த வேண்டும். இதற்கான வட்டி விகிதம் 5 % ஆகும்.
சிறுதொழில்கடன்

 


(1)

இத்திட்டத்தின் கீழ் சிறுபான்மையினர் அன மகளாகளுக்கு  ரூ.2000/- முதல் ரூ.10000/- கடன் வழங்கப்படுகிறது.

(2)

1 முதல் 3 ஆண்டுகளுக்குள் கடனை திருப்பி செலுத்த வேண்டும்.

(3)

பெண்களுக்கு 4 % வசூல் செய்யப்படும்.

 

தகுதிகள்


 விண்ணப்பதாரர்  சுயஉதவிக்குழுவில் உறுப்பினாகளாக இருக்க வேண்டும். கடன் தொகை சுயஉதவிக்குழு மூலம் வழங்கப்படும்.


 17) முஸ்லீம் மகளிர் உதவும் திட்டம்

 

அரசாணை எண்.145/07, நாள்.6.9.2007-ல் அறிவுறுத்தியபடி முஸ்லீம் மகளிர் சமுதாயத்தில் அனைத்து நலன்களையும் பெறுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.


18) விவசாய அபிவிருத்தி கடன் திட்டம்

 

அரசாணை எண்.111, நாள்.3.12.2007-ன்படி பிற்படுத்தப்பட்ட, மிக பிற்படுத்தப்பட்ட மற்றும் சிறுபான்மையினர் இனமக்களில்  சிறு மற்றும் குறு விவசாயிகளுக்கு டாப்செட்கோ மூலம் 50 சதவிகித மான்யத்துடன் ரூ.1 இலட்சம் வரை கடன் வழங்கப்படுகிறது.


19) நரிக்குறவர் நல வாரிய திட்டம்

 

அரசாணை எண்.60, நாள்.24.5.2008-ன் படி தூத்துக்குடி மாவட்டத்தில் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினா நல அலுவலகத்தில் நலவாரியம் அமைக்கப்பட்டுள்ளது. இதில் 11 நபர்களுக்கு உறுப்பினர் அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது.


20) சீர்மரபினர் நல வாரியம்

 

அரசாணை எண்.1329, நாள்.20.4.2007 மற்றும் 28.3.2008-ன் படிதூத்துக்குடி மாவட்டத்தில் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தில் நலவாரியம் அமைக்கப்பட்டுள்ளது. இதில் 191 நபாகளுக்கு உறுப்பினா அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது. இதில் கீழ்க்கண்ட திட்டங்களின் உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது.


(1)

விபத்து நிவாரண உதவித்தொகை

(2)

விபத்தினால் ஊனமுற்றவர்களுக்கான உதவித்தொகை

(3)

இயற்கை மரணத்திற்கான உதவித்தொகை

(4)

ஈமச்சடங்கிற்கான உதவித்தொகை

(5)

மகப்பேறு உதவித்தொகை

(6)

மூக்குக் கண்ணாடி செலவுத்தொகை ஈடு செய்தல்

(7)

முதியா ஓய்வூதியம்

(8)

கல்வி உதவித்தொகை 10ம் வகுப்பு மாணவாகளுக்கு ஆண்டுக்கு ரூ.1000/- மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு ரூ.1500/- வழங்கப்படுகிறது.

 

பிற்படுத்தப்பட்டோர், மிக பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினா நலத்துறை
2008-2009 முதல் 2011-2012 முடிய எய்தப்பட்டவை

 


வ.எ

திட்டத்தின் பெயர்

2009-2010

2010-2011

2011-2012

2012-2013

பயனாளி
கள்

தொகை

பயனாளி
கள்

தொகை

பயனாளி
கள்

தொகை

பயனாளி
கள்

தொகை

1.

கல்வி உதவித்தொகை

10030

13548301

10517

16932123

7601

13936109

7874

17187917

2

தந்தை பெரியார் நினைவு விருது(ஒவ்வொருக்கும் ரூ.5000 வீதம்)

18

90000

22

110000

28

140000

26

130000

3

பேரறிஞர் அண்ணா நினைவு விருது(ஒவ்வொருக்கும் ரூ.5000 வீதம்)

22

110000

29

145000

31

155000

29

145000

4

மாவட்ட அளவிலான பொதுப்பரிசுகள்

30

41500

83

36000

24

36000

14

238188

5

பெண்கல்வி ஊக்குவிப்புத்தொகை வழங்கும் திட்டம்(மிபிப மட்டும்)

1800

1200000

1800

1200000

1741

1200000

AG. authorization awaited.

6

இலவச தேய்ப்பு பெட்டி வழங்கும் திட்டம்

13

36400

144

403200

2

5600

 

 

7

இலவச மிதிவண்டி வழங்கும் திட்டம்

10610

26647428

11214

28177968

11717

15973494

Report not yet received

8

இலவச தையல் இயந்திரம் வழங்கும் திட்டம்

17

45560

78

209040

0

0

0

0

9

இலவச வீட்டுமனைப்பட்டா வழங்கும் திட்டம்

194

324000

168

216000

175

200000

0

0

0010

டாப்செட்கோ கடன் வழங்கும் திட்டம்

256

3589000

74

1430000

74

1430000

0

0

11

டாம்கோ கடன் வழங்கும் திட்டம்

130

5875000

141

3170000

94

5170000

191

8192000

12

சீர்மரபினர் நலவாரியத்திட்டம்

0

0

6

9000

0

0

0

0

 

 

 

 


அமைப்பு வெளியீடு - மாவட்ட ஆட்சியர் தூத்துக்குடி
ஆக்கம் தேசிய தகவலியல் மையம், தூத்துக்குடி