பின்னால் செல்லவும்

கூட்டுறவு வீட்டுவசதி
கூட்டுறவு வீட்டுவசதித் துறை


அலுவலகத்தின் பெயர்

துணைப்பதிவாளர் (வீட்டுவசதி)

அலுவலக முகவரி

துணைப்பதிவாளர் (வீட்டுவசதி)
10 A/7, சிங்கம் பில்டிங்
திருவனந்தபுரம் ரோடு
திருநெல்வேலி -2.

தொலைபேசி எண்

0462-2502191

முன்னுரை
வீடு இல்லாத மக்களுக்கு மனை வாங்கி வீடு கட்டவும் வீட்டினை அபிவிருத்தி செய்யவும், புதுப்பிக்கவும் வீடு கட்டும் சங்கங்கள் கடன் வழங்கி வருகின்றன. தூத்துக்குடி மாவட்டத்தில் மொத்தம் 17 கூட்டுறவு வீட்டுவசதி சங்கங்கள் செயல்பட்டு வருகின்றன.
கூட்டுறவு வீட்டுவசதித் துறையின் அமைப்பு
மாநில அளவில் வீட்டுவசதி சங்கங்கட்கு பதிவாளர் வீட்டுவசதி அவர்கள் உள்ளார். அன்னாரது கட்டுப்பாட்டில் 11 மண்டல துணைப்பதிவாளர் வீட்டுவசதி அலுவலகங்கள் உள்ளன. திருநெல்வேலி மண்டல துணைப்பதிவாளர் வீட்டுவசதி அவர்கள் கட்டுப்பாட்டில் திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் உள்ள கூட்டுறவு வீட்டுவசதி சங்கங்கள் அடங்கியுள்ளன. மேற்படி வீட்டுவசதி சங்கங்கட்கு கடன் வழங்குகின்ற நிறுவனமாக தமிழ்நாடு மாநில கூட்டுறவு வீட்டுவசதி இணையம் சென்னையில் உள்ளது. மேற்படி இணையத்திலிருந்து கூட்டுறவு வீட்டுவசதி சங்கங்கள் கடன் பெற்று மக்களுக்கு வழங்குகின்றன.
கூட்டுறவு வீட்டுவசதி சங்கங்களில் கடன் வழங்கும் திட்டங்கள்
வீட்டுவசதி சங்கங்களில் மூன்று விதமான கடன் திட்டங்கள் வழியாக பொது மக்களுக்கு கடன் வழங்கப்படுகிறது.
1) குறைந்த வருவாய் பிரிவினர் LIG
இப்பிரிவில் மிக குறைந்த வருவாய் உள்ள மக்களுக்கு ரூ.1 இலட்சம் வரை வீட்டுவசதி கடன்கள் வழங்கப்படுகிறது.
2) நடுத்தர வருவாய் பிரிவினர் MIG
நடுத்தர பிரிவு மக்களுக்கான இத்திட்டத்தில் ரூ.2 இலட்சம் வரை பொதுமக்களுக்கு வீட்டுவசதி கடன்கள் வழங்கப்படுகிறது.
3) உயர் வருவாய் பிரிவினர் HIG
உயர் வருமானம் பெறும் மக்களுக்கு ரூ.7.00 இலட்சம் வரை இத்திட்டத்தின் கீழ் கடன் வழங்கப்படுகிறது.
கடந்த சில ஆண்டுகளாக வீட்டுவசதி சங்கங்களில் எவ்வித கடனும் வழங்கப்படவில்லை.
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கூட்டுறவு வீட்டுவசதி சங்கங்கள்
நகர கூட்டுறவு வீட்டுவசதி சங்கங்கள்

 1. தூத்துக்குடி என்.ஜி.ஓ. கூட்டுறவு வீட்டுவசதி சங்கம்
 2. தூத்துக்குடி மேலூர் கூட்டுறவு வீட்டுவசதி சங்கம்
 3. தூத்துக்குடி கூட்டுறவு வீட்டுவசதி சங்கம்
 4. நாசரேத் கூட்டுறவு வீட்டுவசதி சங்கம்
 5. கோவில்பட்டி வ.உ.சி. கூட்டுறவு வீட்டுவசதி சங்கம்
 6. கோவில்பட்டி கூட்டுறவு வீட்டுவசதி சங்கம்
 7. ஆறுமுகனேரி காயல்பட்டினம் கூட்டுறவு வீட்டுவசதி சங்கம்
 8. உடன்குடி கூட்டுறவு வீட்டுவசதி சங்கம்

வட்ட கூட்டுறவு வீட்டுவசதி சங்கம்

 1. தூத்துக்குடி வட்ட கூட்டுறவு வீட்டுவசதி சங்கம்
 2. திருச்செந்தூர் வட்ட கூட்டுறவு வீட்டுவசதி சங்கம்
 3. கோவில்பட்டி வட்ட கூட்டுறவு வீட்டுவசதி சங்கம்
 4. விளாத்திகுளம் வட்ட கூட்டுறவு வீட்டுவசதி சங்கம்
 5. திருவைகுண்டம் வட்ட கூட்டுறவு வீட்டுவசதி சங்கம்
 6. சாத்தான்குளம் வட்ட கூட்டுறவு வீட்டுவசதி சங்கம்
 7. ஒட்டப்பிடாரம் வட்ட கூட்டுறவு வீட்டுவசதி சங்கம்
 8. எட்டையபுரம் வட்ட கூட்டுறவு வீட்டுவசதி சங்கம்

அமைப்பு வெளியீடு - மாவட்ட ஆட்சியர் தூத்துக்குடி
ஆக்கம் தேசிய தகவலியல் மையம், தூத்துக்குடி