பின்னால் செல்லவும்

கூட்டுறவு


தூத்துக்குடி மாவட்டத்தில் கூட்டுறவுத் துறையின் செயல்பாடுகள்

 

மண்டல அலுவலகம்

 

கூட்டுறவுச் சங்கங்களின் இணைப்பதிவாளர் தூத்துக்குடி மண்டலம், தூத்துக்குடி

 

முகவரி

 

கூட்டுறவுச் சங்கங்களின் இணைப்பதிவாளர்

அலுவலகம்
39 ஆ (முதல் தளம்) டி. ஆர். நாயுடு தெரு, 

தூத்துக்குடி – 628 002

 

 

 

சரக அலுவலங்கள்

1) கூட்டுறவுச் சங்கங்களின் துணைப்பதிவாளர் தூத்துக்குடி
136, எட்டயபுரம் ரோடு, போல்பேட்டை,

தூத்துக்குடி -628 002

 

2) கூட்டுறவுச் சங்கங்களின் துணைப்பதிவாளர் , திருச்செந்தூர்
225, பாரதியார் தெரு, பாளையங்கோட்டைரோடு
திருச்செந்தூர் – 628 215

 

3) கூட்டுறவுச் சங்கங்களின் துணைப்பதிவாளர், கோவில்பட்டி
47 எட்டயபுரம் சாலை கோவில்பட்டி.

 

4)துணைப்பதிவாளர் ( பொது விநியோகத் திட்டம்) தூத்துக்குடி
39 ஆ (முதல தளம்) டி. ஆர். நாயுடு தெரு,
தூத்துக்குடி – 628 002

 

      கூட்டுறவுத் துறையின் தூத்துக்குடி மண்டலம் 17.09.1986 ல் ஆரம்பிக்கப்பட்டது.  இம்மண்டலம் தூத்துக்குடி, திருச்செந்தூர், கோவில்பட்டி ஆகிய மூன்று சரகங்களாக பிரிக்கப்பட்டு ஒவ்வொரு சரகமும் துணைப்பதிவாளர் கட்டுப்பாட்டில் இயங்கி வருகின்றன.மண்டலம் முழுவதும் மண்டல இணைப்பதிவாளரின் கட்டுப்பாட்டில் இயங்கி வருகிறது. 

1, இம் மண்டலத்தில் தற்போது கீழ்கண்டவாறு 353 கூட்டுறவு நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன.


வ.எண்

சங்கங்களின் வகைகள்

சங்கங்களின் எண்ணிக்கை

(1)

(2)

(3)

1

     மாவட்ட மத்தியகூட்டுறவு வங்கி

1

2

மாவட்ட கூட்டுறவு ஒன்றியம்

1

3

மாவட்ட நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டகசாலை

1

4

மாவட்ட கூட்டுறவு அச்சகம்

1

5

தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம்

152

6

தொடக்ககூட்டுறவு வேளாணமை மற்றும் ஊரக வளர்ச்சி வங்கி

3

7

கூட்டுறவு நகர வங்கி

8

8

பணியாளர் கூட்டுறவு சிக்கன நாணயகடன் சங்கம்

53

9

கூட்டுறவு விற்பனை சங்கம்

3

10

மாணவர் கூட்டுறவு பண்டகசாலை

96

11

கூட்டுறவு நிலக்குடியேற்ற சங்கம்

1

12

உப்பு உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கம்

3

13

கூட்டுறவு சிற்றுண்டி

1

14

கூட்டுறவு நகர கடன் சங்கம

3

15

பிரதம கூட்டுறவு பண்டக சாலைகள்

26

 

மொத்தம்

353

 

2. இணைப்பதிவாளரின் நிர்வாக கட்டுப்பாட்டில்  செயல்பட்டு வரும் துணைப்பதிவாளர் (பொது விநியோகத் திட்டம்)  தூத்துக்குடியின் கீழ் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கூட்டுறவு நிறுவனங்களால் நடத்தப்படும் பொது விநியோகத் திட்ட அங்காடிகளின் செயல்பாடுகள் கண்காணிக்கப்பட்டு வருகிறது.  கூட்டுறவு நிறுவனங்களால் கீழ்க்கண்ட விவரப்படி 790 நியாயவிலைக்கடைகள் மூலம் குடிமைப்பொருட்கள் விநியோகிக்கப்பட்டு வருகிறது.

வ.
எண்

சங்கங்களின் வகைகள்

நடத்தப்படும் நியாயவிலைக் கடைகளின் எண்ணிக்கை

 

 

சங்கங்களின்
எண்ணிக்கை

முழு நேர நியாயவிலைக்
கடை

பகுதி நேர நியாயவிலைக்
கடை

மொத்தம்

1

தூத்துக்குடி மாவட்ட நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டக சாலை

1

33

1

34

2

கூட்டுறவு விற்பனைச் சங்கம்

3

51

5

56

3

தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம்

133

391

195

586

4

கூட்டுறவு பண்டகசாலைகள்

19

83

28

111

5

இதர வகைச் சங்கங்கள்

1

3

-

3

 

மொத்தம்

157

561

229

790

3. கூட்டுறவு நிறுவனங்கள் மூலம் கடன் வழங்கல்


வ.எண்

கடன் வகை

2011 - 12

 

 

குறியீடு

31.3.2012 வரை எய்தியது

1

குறுகிய கால கடன்

6100

6269.98

2

மத்திய கால கடன்

600

602.00

3

நகைக் கடன்

1031

943.00

4

தானிய ஈட்டுக்கடன்

296

317.02

5

சிறுவணிகக்கடன்

460

427.24

6

பண்ணைசாராக்கடன்

1980

141.01

7

வீடுகட்டும் கடன்

1110

988.68

8

தொழில் கடன்

991

982.71


9

பணிபுரியும் மகளிர் கடன்

305

303.90

10

மகளிர் தொழில் முனைவோர் கடன்

345

337.77

11

மகப்பேறு கடன்

11

6.28

12

சுயஉதவிக்குழு கடன்

585

586.40

13

மகளிர் சிறுவணிக்கடன்

185

182.06

14

டாப்செட்கோ

100

6.04

15

டாம்கோ

265

68.15

4. துறையினால் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள்

         கூட்டுறவுத்துறை ஒவ்வொரு கிராமத்திற்கும் தொடர்புடையதாக வேளாண் துறை சார்ந்த சேவைகள் அனைத்தும் ஒரேஇடத்தில் விவசாயிகள் பெற வேண்டும் என்பதே துறையின் நோக்கமாகும்.  எனவே தற்போது கீழ்கண்ட திட்டங்கள் துறையின் மூலம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

  1. வேளாண் மருந்தகம்.

 

        விவசாயிகளிடையே நல்ல விழிப்புணர்வு ஏற்படுத்தி நவீன விவசாய முறைகளை செயல்படுத்திட ஆலோசனைகள் வழங்கிடவும், மண் பரிசோதனைகள் செய்து அதற்கெற்ப இரசாயண உரங்கள் பரிந்துரைக்கவும் நல்ல தரமான விதைகள், பூச்சிக்கொல்லி மருந்துகள், விவசாய உபகரணங்கள் ஆகியவற்றை உபயோகித்து விவசாய உற்பத்தியினை அதிகரிக்கவும் துர்த்துக்குடி மாவட்டத்தில் 12 தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் மூலம் வேளாண் மருந்தகங்கள் நடத்தப்பட்டு செயல்பட்டு வருகிறது.

  1. வேளாண் சேவை மையம்.

 

                     நவீன விவசாயக்கருவிகளை பயன்படுத்தி விவசாயத்தினை மேம்படுத்திட விவசாய்களை ஊக்குவிக்கும் வித்த்தில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் மூலம் வேளாண் சேவை மையங்கள் ஆரம்பிக்க அரசு ஆணை வழங்கியுள்ளது.  இம்மாவட்டத்தில் 48 தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் மூலம் வேளாண் சேவை மையங்கள் நடத்தப்பட்டு வருகிறது.  இவற்றின் மூலம் விவசாயிகளுக்கு தேவையான சிறு உபகரணங்களான மண்வெட்டி, கடப்பாறை, அயன்சட்டி, பவர்ஸ்பிரேயர் முதல் பெரிய விவசாய கருவிகளான டிராக்டர், டில்லர், நாற்றுநடும் இயந்திரம், களைஎடுக்கும் இயந்திரம், விதை விதைக்கும் இயந்திரம் ஆகியனவும் வாங்கப்பட்டு இம்மையங்கள் மூலம் விவசாயிகளுக்கு குறைந்த வாடகையில் வழங்கப்பட்டு வருகிறது.

  1. பொது சேவை மையம்.

 

             கிராமப்புற பகுதி மக்களுக்கு மின்னஞ்சல் வசதி, ஜெராக்ஸ் மற்றும் இணையதள வசதிகளான கணிணி பட்டா எடுத்தல், ரயில் டிக்கட் எடுத்தல், மதிப்பெண் பட்டியல் பெறுதல் போன்ற காரியங்களுக்காக கண்ணி வசதி கிடைத்திடும் வகையில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களில் பொது சேவை மையங்கள் ஆரம்பிக்க அரசினால் ஆணையிடப்பட்டுள்ளது.  இதன்படி துர்த்துக்குடி மாவட்டத்தில்27 சங்கங்கள் மூலம் பொது சேவை மையங்கள் துவக்கப்பட்டு சேவை புரிந்து வருகின்றன. 

  1. தானிய ஈட்டுக்கடன்

 

         தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் மூலம் வழங்கப்படும் தானிய ஈட்டுக்கடனை ரூ.2 லட்சத்திலிருந்து ரூ.3 லட்சத்திற்கு உயர்த்தப்பட்டுள்ளது.  துர்த்துக்குடி மாவட்டத்தில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் மற்றும் கூட்டுறவு விற்பனைச்சங்கங்கள் மூலம் ரூ.311.02 லட்சம் தானிய ஈட்டுக்கடன் வழங்கப்பட்டுள்ளது.

  1. விவசாய கூட்டுப்பொறுப்புக்குழு

 

      விவசாய தொழிலாளர்களின் வாழ்க்கை தரத்தினை உயர்த்திடும் பொருட்டு விவசாய கூட்டுப்பொறுப்புக்குழுக்கள் ஆரம்பிக்கப்பட வேண்டும் என்ற அரசின் ஆணைக்கேற்ப 2011-12ம் ஆண்டுக்கு துர்த்துக்குடி மாவட்டத்திற்கு நிர்ணயிக்கப்பட்ட குறியீடான 50 குழுக்கள் ஆரம்பிக்கப்பட்டு 2011-12ம் ஆண்டுவரை ஆரம்பிக்கப்பட்ட அனைத்து குழுக்களுக்கும் சூழல் நிதி வழங்கப்பட்டுவிட்டது. 

  1. விதை விற்பனை

 

          விவசாயிகளின் நலனை கருதி கூட்டுறவுத்துறையின் மூலம் குறைந்த விலையில் தரமான விதைகள் கிடைக்க வேண்டும் என்ற அரசுஆணைப்படி இம்மாவட்டத்தில் கோவில்பட்டி கூட்டுறவு விற்பனை சங்கம் விதை ஒருங்கிணைப்பாளராக செயல்பட்டு கூட்டுறவு நிறுவனங்களின் மூலம் 2011-12ம் ஆண்டுக்கு நிர்ணயிக்கப்பட்ட குறையீட ன ரூ.50 லட்சத்தில் 62.852 மெ.டன் அளவிலான ரூ.52.90 லட்சம் மதிப்பிலான விதைகள் விற்பனை செய்யப்பட்டுள்ளது.

  1. உர விற்பனை

 

         தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் மூலம் 7495 மெ.டன் அளவிலான இரசாயண உரங்கள் ரூ.954.21 லட்சம் மதிப்பிலானவை விற்பனை செய்யப்பட்டுள்ளது. 

                    

 


அமைப்பு வெளியீடு - மாவட்ட ஆட்சியர் தூத்துக்குடி
ஆக்கம் தேசிய தகவலியல் மையம், தூத்துக்குடி