பின்னால் செல்லவும்

பொது சுகாதார கழிப்பிட முகாம்


தனிப்பட்ட ஒருவரின் உடல் நலனும், தூய்மையும் அவருக்கு போதுமான அளவிற்கு தண்ணீர் கிடைக்கப் பெறுவதையும், முறையான துப்புரவு வசதிகளையுமே பொிதும் சார்ந்துள்ளன. ஆகவே, குடிநீர், துப்புரவு,சுகாதாரம் ஆகியவற்றுக்கிடையே நேரடியான தொடர்பு உள்ளது. பாதுகாப்பற்ற குடிநீரைப் பருகுதல், மனிதக் கழிவுகளை முறையாக அகற்றாமை, சுற்றுபுறத்தை துப்புரவாக வைத்துக்கொள்ளாமை, தூய்மையான உணவு மற்றும் தனிநபர் தூய்மை இல்லாமை ஆகியவையே வளர்ந்து வரும் நாடுகளில் பல நோய்கள் பரவுவதற்கான முக்கியமான காரணங்களாக இருந்து வந்துள்ளன. இந்தியாவும் இதற்கு விதிவிலக்கல்ல. சிசு இறப்பு விகிதம் அதிகாமாக இருப்பதற்கும் மோசமான துப்புரவு நிலைமையே பெரிதும் காரணமாக அமைகிறது.

 

இச்சூழ்நிலையில்தான் ஊரக மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதையும், கண்ணியமும், தனிமை பாதுகாக்கப்படுவதையும், நோக்கமாகக் கொண்டு தூத்துக்குடி மாவட்டத்தில் 2003-04ஆம் ஆண்டிலிருந்து முழு சுகாதாரத் திட்டம் தொடங்கப்பட்டது.

 

முழு சுகாதாரத் திட்டத்தின் முக்கிய நோக்கங்கள் -

 

  • ஊரகப்பகுதி மக்களின் பொதுவான வாழ்க்கைத் தரத்தை மேம்படச் செய்தல்
  • ஊரகப் பகுதிகளில் துப்புரவுப் பணிகளை விரைவுபடுத்துதல்
  • சுகாதாரக் கல்வியின் மூலமாகவும், விழிப்புணர்வை உருவாக்குவதன் மூலமாகவும், துப்புரவு வசதிகளின் தேவை பற்றி உணரச் செய்தல்
  • ஊரகப் பகுதிகளிலுள்ள அனைத்துப் பள்ளிகள் ஃ அங்கன்வாடிகளில் துப்புரவு வசதிகள், தூய்மை பற்றிய கல்வியை மேம்படுத்தி, மாணவர்களிடையே சுத்தமான பழக்கங்களை ஊட்டி வளர்த்தல்
  • துப்புரவில் பயன்பாட்டிற்கேதுவான தொழில் நுட்பத்தையும், பொருத்தமான தொழில் நுட்பத்தையும் ஊக்குவித்தல்
  • குடிநீர் ஆதாரங்கள் மற்றும் உணவுப் பொருட்களின் தூய்மைக் கேட்டைக் குறைப்பதற்காக திறந்த வெளியில் மலம் கழிப்பதை ஒழித்தல்.
  • உலர் கழிவறைகளை நீரடிக் கழிவறைகளாக மாற்றியமைத்தல் மற்றும் ஊரகப் பகுதிகளில் மனிதக் கழிவுகளை மனிதர் அகற்றும் பழக்கம் எங்கு நடைமுறையில் இருந்தாலும் அதை ஒழித்தல்

 

முழுச்சுகாதாரத் திட்டம் தூத்துக்குடி மாவட்டத்தில் 2003ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. இதுவரை அங்கீகரிக்கப்பட்ட 91637 எண்ணிக்கைக்கு 70947 தனிநபர் இல்லக் கழிப்பறைகள“ கட்டப்பட்டுள்ளன.

 

  • 245 பள்ளிக் கழிப்பறைகள் கட்டப்பட்டுள்ளன.
  • 647 அங்கன்வாடி மையங்களுக்கு கழிப்பபைறைகள் கட்டப்பட்டுள்ளன.
  • 46 ஊராட்சிகளுக்கு நிர்மல் கிராம் புரஸ்கார் விருது கிடைத்துள்ளது.

 

தனிநபர் இல்லக் கழிப்பறைகள்

 

உரியவாறு கட்டி முடிக்கப்பட்ட துப்புரவுக் கழிப்பறை (மேற் கட்டுமானம் இல்லாமல்) அடிப்படையில் குறைந்த செலவிலான கழிப்பறையாக இருக்கும். கிராமப் பகுதிகளில் தற்போதுள்ள உலர் வகை கழிப்பறைகள் அனைத்தும் நீரடிக் கழிப்பறைகளாக மாற்றப்பட வேண்டும். இத்திட்டம் கிராமப் பகுதிகள் அனைத்தையும் உள்ளடக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

இத்திட்டத்தின் கீழ் வழங்கப்படுகிற ஊக்க உதவித் தொகையை வறுமைக்கோட்டிற்குக் கீழேயுள்ள குடும்பங்களுக்கு வழங்கப்படுகிறது. வீடுகளில் கழிப்பறைகள் கட்டும் பணியை வறுமைக் கோட்டுக்குக் கீழேயுள்ள குடும்பங்களே மேற்கொள்ள வேண்டும்.

கழிவறைகள் கட்டி முடிக்கப்பட்டு வறுமைக்கோட்டிற்கு கிழேயுள்ள குடும்பம் அவற்றை பயன்படுத்துகிறபோது அதனை அங்கீகரிக்கின்ற வகையில் வறுமைக்கோட்டுக்குக் கீழேயுள்ள குடும்பத்திற்கு ரொக்க ஊக்க உதவித் தொகையாக ரூ.3200 வழங்கப்படுகிறது.

முழு சுகாதாரத் திட்டத்தின் கீழ் தனிநபர் இல்லக் கழிப்பறைக்கான அலகுத் தொகை ரூ.3,500/- வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ள பயனாளிகளுக்கான மத்திய அரசின் ஊள்ள உதவித் தொகை ரூ.2200/-, மாநில அரசின் ஊக்க உதவித் தொகை ரூ.1000/- மற்றும் பயனாளி பங்குத் தொகை ரூ.300/- ஆகும்.

இந்திரா நினைவு குடியிருப்புத் திட்டத்தின் கீழ் கட்டப்படும் வீடுகள் ஒவ்வொன்றுக்கும் முழுச்சுகாதாரத் திட்டத்தின் கீழ் கழிப்பறைகள் தனியாக கட்டிக்கொடுக்கலாம்.

 

பள்ளிகளில் துப்புரவு மற்றும் சுகாதாரம் குறித்த கல்வி -

 

பள்ளிகளில் கழிப்பறைகளைப் பயன்படுத்துவதன் மூலம் குழந்தைக்குக் கிடைக்கிற அனுபவமும், ஆசிாியர்கள் கற்பிக்கிற சுகாதாரம் குறித்த கல்வியும் அவர்கள் மூலம் வீடுகளைச் சென்றடைவதுடன், அவர்களின் பெற்றோர் நல்ல சுகாதார பழக்க வழக்கங்களைப் பின்பற்றவும் வழிவகுக்கும். எனவே, பள்ளிச் சுகாதாரம் முழுச் சுகாதாரத் திட்டத்தின் ஒரு முக்கிய கூறாக அமைகிறது. தொடக்கப் பள்ளி, நடுநிலைப்பள்ளி, உயர்நிலைப்பள்ளி, மேனிலைப்பள்ளி மற்றும் அங்கன்வாடி போன்ற அனைத்து வகை அரசுப் பள்ளிகளிலும் கழிப்பிடங்கள் கட்டப்பட வேண்டும். பள்ளிகளில் மாணவிகளுக்காக கழிப்பிடங்கள் கட்டுவது குறித்து வலியுறுத்தப்பட வேண்டும். பள்ளி கழிப்பறை கட்டுவதற்கான அலகுத் தொகை ரூ.35000/- ஆகும். இதில் மத்திய அரசும், மாநில அரசும் 70:30 என்ற விகிதத்தில் நிதி உதவி அளிக்கின்றன.

 

அங்கன்வாடி கழிப்பிடங்கள் -

 

சின்னஞ்சிறு வயதிலிருந்தே குழந்தையின் பழக்கவழக்கத்தை மாற்ற வேண்டியது அவசியம். குழந்தைகள் மற்றும் அங்கன்வாடிகளைக் கவனிக்கின்ற தாய்மார்கள் ஆகியோரின் நடத்தையை மாற்றுகிற ஒரு அடித்தளமாக அங்கன்வாடிகள் பயன்படுத்தப்படுகின்றன. இதற்காக, ஒவ்வொரு அங்கன்வாடியிலும்  குழற்தைக்கு உகந்த கழிப்பிடம் ஒன்று அமைக்கப்பட வேண்டும். ஒரு அங்கன்வாடி கழிப்பறை கட்டுவதற்கு அலகுத் தொகை ரூ.8000/- ஆகும்.

 

அமைப்பு வெளியீடு - மாவட்ட ஆட்சியர் தூத்துக்குடி
ஆக்கம் தேசிய தகவலியல் மையம், தூத்துக்குடி