பின்னால் செல்லவும்

பாரளுமன்ற உறுப்பினா உள்ளுர் மேம்பாட்டு திட்டம்பாராளுமன்ற உறுப்பினர் தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் பாராளுமன்ற உறுப்பினரால் தேர்வு செய்யப்பட்ட வளர்ச்சிப் பணிகளை மேற்கொள்வதற்காக ஒவ்வொரு பாராளுமன்ற உறுப்பினருக்கும் 2011-12ஆம் ஆண்டு முதல் ரூ.5 கோடி ஆண்டு தோறும் நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. மக்களவை உறுப்பினர்களைப் பொறுத்தவரை அவரவர் தொகுதிக்குட்பட்ட மாவட்டங்களில் இத்தி்ட்டம் செயல்படுத்தப்படுகிறது. மாநிலங்களவை உறுப்பினர்களைப் பொறுத்தவரை தோ்தெடுக்கப்பட்ட மாநிலத்திற்குள் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட மாவட்டங்களில் பணிகளை மேற்கொள்ள பரிந்துரைக்கலாம். நியமன உறுப்பினர்களைப் பொறுத்த வரை, இந்தியாவில் எந்தப் பகுதியிலும் பணிகளை செயல்படுத்த பரிந்துரைக்கலாம். மாவட்ட ஆட்சித்தலைவர் பணிகளுக்கு நிர்வாக அனுமதி வழங்குவார்.


அமைப்பு வெளியீடு - மாவட்ட ஆட்சியர் தூத்துக்குடி
ஆக்கம் தேசிய தகவலியல் மையம், தூத்துக்குடி