பின்னால் செல்லவும்

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு உறுதி திட்டம்





 

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம் 01.04.2008 முதல் தூத்துக்குடி மாவட்டத்தில் செயல்படுத்தப்பட்டது.

 

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் முக்கிய நோக்கம்

 1. வாழ்வாதாரத்தை உயர்த்துதல்
 2. ஒவ்வொரு குடும்பத்திற்கும் 100 நாள் வேலை வாய்ப்பினை வழங்குதல்
 3. ஆண்களுக்கும் பெண்களுக்கும் சம அளவில் அவர்கள் செய்த வேலையின் அளவுப்படி ரூ.119/- ஊதியம் உறுதி செய்யப்பட்டுள்ளது. அரசாணை (நிலை) எண். 20 ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் (சி.ஜி.எஸ்-1) துறை, நாள்  11.02.2011-ன்படி 12.02.2011 முதல் ஊதிய விகிதம் ரூ.119/-ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
 4. வேலையாட்களின் வசிப்பிடம் குக்கிராமத்திலிருந்து வேலை செய்யும் இடம் 5 கி.மீட்டருக்கு மேல் இருப்பின் அவர்கள் வாங்கும் குறைந்தபட்ச ஊதியத்தில் 10% பயணப்படி அவர்கள் பெற்றுக்கொள்வார்கள்.

 

செயல்படுத்தப்படும் அலுவலர்கள்

 

1.

செயல்படுத்தப்படும் அலுவலர்கள்

சம்பந்தப்பட்ட கிராம ஊராட்சி தலைவர்

2.

திட்ட ஒருங்கிணைப்பாளர்

மாவட்ட ஆட்சித்தலைவர்

3.

இணை திட்ட ஒருங்கிணைப்பாளர்

திட்ட இயக்குநர்,
மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை,
தூத்துக்குடி

4.

வட்டார திட்ட ஒருங்கிணைப்பாளர்

வட்டார வளர்ச்சி அலுவலர் (கிராம ஊராட்சிகள்)

 

நிதி ஒதுக்கீடு : -

 

இத்திட்டத்திற்கான நிதி - மத்திய அரசு பங்கு  - 90% மற்றும்
                                     மாநில அரசு பங்கு    - 10%

 

பதிவேடுகள் பராமரித்தல் விபரங்கள் : -

 

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் தி்ட்டத்தில் சரியான முறையில் பதிவேடுகளை பராமரிப்பதை உறுதி செய்ய கீழ் குறிப்பிடும் பதிவேடுகளை அரசு நிர்ணயித்த படிவத்தில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையினால் மாவட்ட அளவிலும், ஊராட்சி ஒன்றிய அளவிலும் மற்றும் ஊராட்சி அளவிலும் அச்சிட்டு வழங்கப்பட்டுள்ளது.


கிராம ஊராட்சி : -

 1. விண்ணப்பங்கள் பதிவு மற்றும் வேலை அட்டை வழங்கும் பதிவேடு
 2. வரவு செலவு பதிவேடு
 3. குடும்ப வேலை வாய்ப்பு பதிவேடு
 4. வேலை அட்டை இருப்பு பதிவேடு
 5. வருகை பதிவேடுகள் இருப்பு பதிவேடு

 

ஊராட்சி ஒன்றியம் : -

 1. பட்டியல்கள் அனுமதி பதிவேடு
 2. ஊராட்சி வாரியாக தொகை வழங்குதல் மற்றும் செலவின பதிவேடு
 3. வேலை அட்டைகள் இருப்பு பதிவேடு
 4. வருகை பதிவேடுகள் இருப்பு பதிவேடு

மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை : -

 1. வாராந்திர செலவினப் பதிவேடு
 2. ஊராட்சி ஒன்றியம் வாரியாக நிதி விடுவித்தல் மற்றும் செலவினப் பதிவேடு
 3. வருகைப் பதிவேடுகள் இருப்பு பதிவேடு
 4. வேலை அட்டைகள் இருப்பு பதிவேடு
 5. ”1299” புகார் பதிவேடு

 

வேலை அட்டைகள் மற்றும் வருகைப் பதிவேடு : -

 

அரசினால் வழங்கப்பட்ட அறிவுரைப்படி வேலை அட்டைகள் மற்றும் வருகை பதிவேடுகள் தேவையினை கணக்கிட்டு அச்சிடப்பட்டு வழங்கப்பட்டுள்ளது.

 

வேலைகள் தேர்வு பட்டியல்

 

ஊரக வளர்ச்சி இயக்குநரின் அறிவுரைப்படி, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில் கீழ்குறிப்பிடும் முன்னுரிமைப்படி வேலைகள் தேர்வு செய்யப்பட்டுள்ளது.

 1. ஒரு தனி வேலையின் மதிப்பு ரூ.3.00 இலட்சத்திற்கு குறைவாக இருத்தல் கூடாது.
 2. சுலபமாக செயல்படுத்துதல்
 3. மேலான கண்காணிப்பு
 4. பார்க்கக்கூடிய உறுதியான சொத்துக்களை உருவாக்குதல் மற்றும் துண்டு துண்டான வேலைகளை தேர்வு செய்யாமல் ஒட்டு மொத்தமாக வேலைகளை செயல்படுத்துதல்
 5. முன் அளவீடுகள் மற்றும் மற்றும் புகைப்படம்
 6. கிராமசபையில் வேலைகளை அனுமதிக்கப்பட வேண்டும்
 7. ஊரக விலைப்பட்டியல்படி மதிப்பீடுகள் தயார் செய்தல்

முன்னுரிமை பணிகள்

 1. புதிய குளங்கள்
 2. ஏற்கனவே உள்ள குளம், குட்டைகள், ஊரணிகள் மற்றும் கோயில் குளங்களை புதுப்பித்தல்
 3. வரத்துக்கால்வாய்கள் தூர் வாருதல்
 4. விவசாய குளங்களின் கரைகளை பலப்படுத்தி தூர் வாருதல்
 5. புதிய சாலைகளை அமைத்தல்
 6. மற்ற நீர் நிலைகளை பராமரித்தல் / மண்வள பராமரிப்பு நடவடிக்கைகள் / வெள்ள பெருக்கு பாதுகாப்பு நடவடிக்கைகள்

 

ஒவ்வொரு ஊராட்சியிலும் வங்கிக் கணக்கு எண். - IV துவங்குதல்

 1. அரசாணை எண். 146 ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை நாள்  17.08.2007-ன்படி தேசிய ஊரக வேலை உறுதித் திட்ட கணக்குகளை பராமரிக்க அனைத்து ஊராட்சிகளுக்கும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்ட தனி கணக்கு எண்.4 தொடங்கப்பட்டுள்ளது.

 

கட்டணமில்லா தொலைபேசி வசதி :-

 

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்ட வேலையாட்கள், தங்கள் குறைகளை சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சியரிடம் எடுத்து கூறும் பொருட்டு, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் கட்டணமில்லா தொலைபேசி வசதி எண் ”1299” வழங்கப்பட்டுள்ளது.

 

 தனி வங்கிக் கணக்கு :-

 

அரசாணை எண். 47 (ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை) (CGS-1) துறை நாள்  24.03.2008-ன்படி அனைத்து மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்ட வேலை அட்டை வைத்திருப்பவர்களுக்கு ஊதியம் வழங்கிட ஏதுவாக தனிநபர் வங்கி சேமிப்பு கணக்கு தொடங்கப்பட வேண்டும்.

   • மேலும், ஊரக வளர்ச்சி ஆணையர் அவர்களின் அறிவுரைப்படி, ஊதியம் ரொக்கமாக வழங்கப்படுகிறது.
   • அனைத்து மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்ட வேலை அட்டை வைத்திருப்பவர்களுக்கு அரசுடைமையாக்கப்பட்ட வங்கிகளில் தனியாகவோ, கூட்டமாகவோ சேமிப்பு கணக்கு தொடங்கப்பட வேண்டும்.
   • குறிப்பிட்ட தினங்களில் தேசிய ஊரக வேலை உறுதி திட்ட பணியாளர்களுக்கு ஊதியம் வழங்க இயலவில்லையெனில், அடுத்த வேலை நாளில் சம்பந்தப்பட்டவர்களின் வங்கி சேமிப்பு கணக்குகளில் செலுத்தப்பட வேண்டும்.
   • வங்கிக் கணக்கு விபரங்களை பதிவேடு -1ல் பதியப்பட வேண்டும்.
அமைப்பு வெளியீடு - மாவட்ட ஆட்சியர் தூத்துக்குடி
ஆக்கம் தேசிய தகவலியல் மையம், தூத்துக்குடி