பின்னால் செல்லவும்

இந்திர நினைவு குடியிருப்பு


இந்திரா நினைவு குடியிருப்புத் திட்டம் 1985-86 முதல் ஊரக நிலமற்றோர் வேலைவாய்ப்பு உறுதியளிப்பு திட்டத்தின் துணை திட்டமாக செயல்படுத்தப்பட்டது. 01.01.1996 முதல் இந்திரா நினைவு குடியிருப்புத் திட்டம் தனித் திட்டமாக செயல்பட துவங்கியது. ஊரக பகுதியில் வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ள குடும்பங்களுக்கு இலவச தொகுப்பு வீடு கட்டி கொடுக்கப்படுகிறது. 1999-2000-க்கு பின்பு கூடுதலான எண்ணிக்கையில் ஊரக பகுதிகளில் தொகுப்பு வீடு கட்டப்பட்டு வருகிறது.

 

இந்திரா நினைவு குடியிருப்புத் திட்டத்தில் 60% ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கும் 40% இதர வகுப்பினருக்கும் வீடுகள் ஒதுக்கீடு செய்யப்படும்

அமைப்பு வெளியீடு - மாவட்ட ஆட்சியர் தூத்துக்குடி
ஆக்கம் தேசிய தகவலியல் மையம், தூத்துக்குடி