பின்னால் செல்லவும்

தணிக்கை


அலுவலகத்தலைவர்

:

ஊரக வளாச்சி உதவி இயக்குநா (தணிக்கை) தூத்துக்குடி

முகவரி

:

3வது தளம்,

மாவட்ட ஆட்சியரகம்,

தூத்துக்குடி.

 

தொலைபேசி எண்

:

0461 – 2340107

 

துறையின் செயல்பாடுகள்:

 1. துணை வட்டார வளாச்சி அலுவலாகள் (தணிக்கை) மற்றும் உள்ளாட்சி நிதித் தணிக்கைத் துறையினரால் மேற்கொள்ளப்படும் கிராம ஊராட்சிகளின் கணக்குகள் தணிக்கை மீதான முன்னேற்றத்தினைக் கண்காணித்தல்.
 2. மாநிலக் கணக்காயர் சென்னை மற்றும் உள்ளாட்சி நிதித் தணிக்கைத் துறையினரால் வெளியிடப்படும் கிராம் ஊராட்சிகள், ஊராட்சி ஒன்றியங்கள் மற்றும் மாவட்ட ஊராட்சிகளின் தணிக்கை அறிக்கை மீதான தொடர் நடவடிக்கைகள்.
 3. அனைத்து ஊராட்சி ஒன்றியங்களும் குறிக்கப்பட்ட காலத்திற்குள் ஆண்டுக் கணக்குகளை தயார் செய்து, உள்ளாட்சி நிதித் தணிக்கைத் துறைக்கு ஒப்படைத்தலைக் கண்காணித்தல்.
 4. துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் (தணிக்கை) ஆல் எழுப்ப படும் கிராம ஊராட்சிகளின் தணிக்கைத் தடைகளைத் தீர்வு செய்தல்.
 5. உள்ளாட்சி நிதித் தணிக்கைத் துறையினரால் கிராம ஊராட்சிகள் மற்றும் ஊராட்சி ஒன்றியங்கள் மீது எழுப்ப்ப்பட்ட தணிக்கைத் தடைகளைத் தீர்வு செய்யும் பொருட்டு வட்டார / மாவட்ட அளவிலான கூட்டமர்வுகள் நடத்துதல்.
 6. மாதந்தோறும் 10 கிராம ஊராட்சிகளை ஆய்வு செய்து கண்டறியப்பட்ட குறைபாடுகளை நிவிர்த்தி செய்திட தொடர் நடவடிக்கை மேற்கொள்ளுதல்.
 7. ஊராட்சி ஒன்றியங்களில் உள்ள நீண்ட கால தணிக்கைத் தடை நிலுவைப் பத்திகளை தீர்வு செய்திட மாவட்ட அளவிலான உயர் மட்டக் குழுக் கூட்டம் நடத்துதல்.
 8. சென்னை மாநிலக் கணக்காயரின் தணிக்கைத் தடைகளுக்கு (மூன்றடுக்கு ஊராட்சிக்களுக்கும்) உரிய பதில்களை தயார் செய்து அனுப்புதலைக் கண்காணித்தல்.
 9. சென்னை மாநிலக் கணக்காயரால் வட்டார / மாவட்ட ஊராட்சிகள் மீது எழுப்ப்ப்பட்ட தணிக்கைத் தடைகளைத் தீர்வு செய்யும் பொருட்டு மாவட்ட அளவிலான கூட்டமர்வு ஏற்பாடு செய்தல்.
 10. மூன்றடுக்கு ஊராட்சிகளிலும் தணிக்கைத் தொடர்பான பொதுக் கணக்கு குழுவின் அறிக்கை மீது தொடர் நடவடிக்கை மேற்கொள்ளுதல்.
 11. தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டம் 1994ன் கீழ் கிராம ஊராட்சிகளின் தலைவாகள் மீதான தண்டத் தீர்வை உத்தரவு பிறப்பித்தல்.
 12. அரசு / ஊரக வளாச்சி இயக்குநர் /மாவட்ட ஆட்சியரால் அவ்வப்போது நிர்ணயிக்கப்படும் இதரப்பணிகளை மேற்கொள்ளுதல்.

 

அமைப்பு வெளியீடு - மாவட்ட ஆட்சியர் தூத்துக்குடி
ஆக்கம் தேசிய தகவலியல் மையம், தூத்துக்குடி