பின்னால் செல்லவும்

வேளாண்மைத்துறை
வேளாண்மைத்துறை தூத்துக்குடி மாவட்டத்தில் மாவட்ட அளவில் வேளாண்மை இணை இயக்குநர் தலைமையிலும் வட்டார அளவில் வேளாண்மை உதவி இயக்குநர் தலைமையிலும் செயல்பட்டு வருகிறது.

  மத்திய மாநில அரசு திட்டங்கள்  அனைத்தும் விவசாயிகளைச் சென்று அடைவதற்கு வட்டார அளவில் வேளாண்மை அலுவலர், துணை வேளாண்மை அலுவலர், வேளாண்மை உதவி அலுவலர்கள் பணிபுர்ந்து வருகின்றார்கள்.

 

விவசாயிகள் சான்று பெற்ற தரமான விதைகளை பயன்படுத்துவதற்கு உதவி விதை அலுவலர்கள் மூலம் விவசாயிகள் தோந்தெடுக்கப்பட்டு அவர்கள் வயல்களில் விதைப்பண்ணை அமைக்கப்பட்டு அரசு விதிகளுக்கு உட்பட்டு விதைகள் கொள்முதல் செய்து விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

 

பயிர் சாகுபடி பரப்பு

தூத்துக்குடி மாவட்டத்தில் நெல் சாகுபடி 19400 ஹெக்டரில்  மேற்கொள்ள இலக்கு பெறப்பட்டு தற்போது 7200 ஹெக்டரில் நடவு செய்யப்பட்டுள்ளது. இதில் 4800 எக்டரில் திருந்திய நெல் சாகுபடி செய்யப்பட்டுள்ளது

 

சிறுதானியங்கள் 44600 ஹெக்டரில் மேற்கொள்ள இலக்கு பெறப்பட்டு தற்போது 40370 எக்டரில் சாகுபடி செய்யப்பட்டுள்ளது.  

பயறு வகைகளில் உளுந்து, பாசிப்பயறு, தட்டைப்பயறு, துவரை, கொண்டைக்கடலை, கொள்ளு உட்பட 79224 எக்டரில் சாகுபடி மேற்கொள்ள இலக்கு பெறப்பட்டு 67220 எக்டரில் சாகுபடி செயப்பட்டுள்ளது.

 

எண்ணெய் வித்துக்களில் நிலக்கடலை, எள், சூரியகாந்தி உட்பட 3770 எக்டர் சாகுபடி மேற்கொள்ள இலக்கு பெறப்பட்டதில் இதுவரை 2632 எக்டரில் சாகுபடி செய்யப்பட்டுள்ளது.

பருத்தியில் 4300 எக்டர் சாகுபடி மேற்கொள்ள இலக்கு பெறப்பட்டு தற்போது 4007 எக்டரில் சாகுபடி மேற்கொள்ளப்பட்டுள்ளது.

 

விதை விநியோகம்  :

 

விவசாயிகள் சாகுபடி செய்யும் பயிர்கள் நல்ல மகசூல் பெறுவதற்கு வேளாண்மை துறையின் மூலம் தரமான சான்று விதைகள் மானியத்தில் விநியோகிக்கப்பட்டு வருகிறது. 

 

நெல் விதைகளில் 200 மெ.டன் விநியோகம் செய்ய இலக்கு பெறப்பட்டு 311 மெ.டன் சான்று விதைகள் விநியோகிக்கப்பட்டுள்ளது.

 

சிறுதானியங்கள் விதைகளில் 23 மெ.டன் இலக்கு பெறப்பட்டு இதுவரை 5.139 மெ.டன் சான்று விதைகள் விநியோகிக்கப்பட்டுள்ளது.

 

பயறுவகை விதைகளில் 356 மெ.டன் இலக்கு பெறப்பட்டு 220 மெ.டன் சான்று விதைகள் விநியோகிக்கப்பட்டுள்ளது.

 

எண்ணெய் வித்துக்களில் 20 மெ.டன் இலக்கு பெறப்பட்டு 11.65 மெ.டன் சான்று விதைகள் விநியோகிக்கப்பட்டுள்ளது.

 

பருத்தி விதை விநியோகம் செய்ய 15 மெ.டன் இலக்கு பெறப்பட்டு 1.5 மெ.டன் சான்று விதைகள் விநியோகிக்கப்பட்டுள்ளது.

 

 

நமது மாவட்டத்தில் காரிப், ராபி பருவத்திற்கான உரத் தேவையும், விநியோகமும் பின்வருமாறு

 

  தழைச்சத்து உரங்களின் தேவை 9755 மெ.டன் அக்டோபர் மாதம்  வரை விநியோகிக்கப்பட்ட அளவு 4090 மெ.டன் ஆகும். மணிச்சத்து உரங்களின் தேவை 4771 மெ.டன் அக்டோபர் மாதம் வரை விநியோகிக்கப்பட்ட அளவு 3306 மெ.டன் ஆகும். சாம்பல் சத்து உரங்களின் தேவை 3711 மெ.டன். இதில் அக்டோபர் மாதம் வரை விநியோகிக்கப்பட்ட அளவு 949 மெ.டன் ஆகும். மொத்த தேவை 18237 மெ.டன்னில் 8345 மெ.டன் அளவு இதுவரை விநியோகிக்கப்பட்டுள்ளது.

 

முக்கியத் திட்டங்கள்

  1. திருந்திய நெல் சாகுபடி திட்டம்

நெல் பயரில் விவசாயிகள் கூடுதல் மகசூல் பெறுவதற்கான 26 கிராமங்கள் தேர்வு செய்யப்பட்டு 1050 எக்டரில் திருந்திய நெல் சாகுபடி திட்டம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

  1. திருந்திய பயறு சாகுபடி திட்டம்  :

 

பயறு வகைப் பயிர்களில் கூடுதல் மகசூல் பெறுவதற்காக 52 கிராமங்களில் கிராமத்திற்கு 50 எக்டர் வீதம் 2600 எக்டரில் இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

 

  1. உயர் மகசூல் தரவல்லதும், பூச்சி மற்றும் நோய் எதிர்ப்பு ரக வித்துக்களை பயன்படுத்துதல்
  2. ரைசோபியம், பாஸ்போபாக்டீரியா போன்ற உயிர் உரங்கள் மூலம் விதை நோத்தி செய்தல்
  3. சரியான  பயிர் எண்ணிக்கை பராமரித்தல்
  4. ஒருங்கிணைந்த ஊட்டசத்து உர நிர்வாகம் (ஜிப்சம், நுண்ணுரம், அடிஉரம் முதலானவை)
  5. பூக்கும் தருணத்திலும் அதிலிருந்து 15 நாட்கள் கழித்தும் 2 சத டிஏபி உரக்கரைசல் தெளித்தல்
  6. ஈரப்பதம் குறைந்து வரும்போது தெளிப்பு நீர் பாசனம் செய்தல்
  7. காய்ப்புழுக்களைக் கட்டுப்படுத்துவதற்கு ஒருங்கிணைந்த பூச்சி நிர்வாகம் கடைப்பிடித்தல்.

 

  1. தமிழ்நாடு நீர்வள நிலவளத் திட்டம்

 

  தமிழ்நாடு நீர்வள நிலவளத் திட்டத்தில் செங்கோட்டையாறு, கோரம்பள்ளம் ஆறு, சாலிக்குளமாறு, உப்பத்தூரார், வைப்பாறு, வேம்பார், உப்போடை, கருமேனியாறு ஆகிய 8 உபவடிக் கோட்டங்களில் வேளாண்மைத்துறை மூலம் திருந்திய நெல் சாகுபடி, மக்காச்சோளம், பயறு வகைகள், நிலக்கடலை, சூரியகாந்தி ஆகிய பயிர்களில் செயல்விளக்கத் திடல்கள் 282 எண்கள் அமைக்க குறியீடு நிர்ணயிக்கப்பட்டு தற்போது அமைக்கப்பட்டு வருகிறது.

இம்மாவட்டத்தில் ஓட்டு தென்னங்கன்றுகள் உற்பத்தி செய்வதற்கு உடன்குடி பகுதியில் காய்கள் ஓட்டு சோத்தலும், கிள்ளிகுளம் தென்னை நாற்றுப்பண்ணையில் தென்னங்கன்று உற்பத்தி செய்யப்பட்டு வட்டார உதவி இயக்குநாகள் மூலம் விவசாயிகளுக்கு மானிய விலையில் வழங்கப்படுகிறது.

 

தரமான விதைகள் கொள்முதல் செய்யப்படுவதற்கு வசதியாக கிள்ளிகுளம் மற்றும் கோவில்பட்டியில் விதை சுத்திகரிப்பு நிலையங்கள் இயங்கி வருகின்றது.

தரமான உரங்கள் மற்றும் பூச்சி மருந்துகள் விவசாயிகளுக்கு விநியோகிக்கப்படுவதை உறுதி செய்ய கோவில்பட்டியில் ஆய்வகங்கள் இயங்கி வருகின்றன.

விவசாயிகளின் வயல் மண்ணை பரிசோதனை செய்திட கோவில்பட்டியில் நிலையான ஆய்வகமும் கிராம அளவில் நடமாடும் மண் ஆய்வக ஊர்தி மூலம் மண் பரிசோதனை செய்யப்படுகிறது.

மத்திய அரசு திட்டங்கள்

 

1. எண்ணெய் வித்து, பயறு, எண்ணெய் பனை மற்றும் மக்காச்சோளம் பயிர்களுக்கான ஒருங்கிணைந்த திட்டத்தின் கீழ் எண்ணெய்வித்து.

 

எண்ணெய்வித்து பயிர்களின் பரப்பு மற்றும் உற்பத்தியை அதிகரிக்கும் நோக்கில் விவசாயிகளை ஊக்குவித்திட சான்று விதை உற்பத்திக்கு கிலோ ஒன்றிற்கு ரூ.10, சான்று விதை விநியோகத்திற்கு கிலோவிற்கு ரூ12, நீர் பாய்ச்சும் குழாய் விநியோகத்திற்கு ஹெக்டருக்கு ரூ.15000, நிலக்கடலை பெருவிளக்கப் பண்ணை அமைத்திட திடலுக்கு ரூ.4000, எள் பெருவிளக்கப் பண்ணைக்கு திடலுக்கு ரூ.1500, ஒருங்கிணைந்த பயிர் பாதுகாப்பு செயல்விளக்கத்திற்கு ரூ.22700, ஜிப்சம் விநியோகத்திற்கு ஹெக்டருக்கு ரூ.750, உயிர் உரம் விநியோகத்திற்கு  ஹெக்டருக்கு ரூ.100, உயிரியல் பூச்சிக்கொல்லி மருந்து விநியோகத்திற்கு ஹெக்டருக்கு ரூ.250, கைத்தெளிப்பான் ஒன்றிற்கு ரூ.800, விசைத்தெளிப்பான் ஒன்றிற்கு ரூ.2000,களைக்கொல்லி விநியோகத்திற்கு ஹெக்டருக்கு ரூ.500, விவசாயிகள் பயிற்சிக்கு (50 விவசாயிகள்)  ரூ.15000, அலுவலா்கள் பயிற்சிக்கு ரூ.16000, நிலக்கடலைக்கு கூட்டு சத்துக்கள் தெளிப்பதற்கு ஹெக்டருக்கு ரூ.200, புதிய தொழில்நுட்பங்களை பிரபலமாக்க மாவட்டத்திற்கு ரூ.30000 நிதி உதவி வழங்கப்படுகிறது. நடப்பாண்டு இத்திட்டத்தின் கீழ் ரூ.12.6 இலட்சம் நிதி ஒப்பளிப்பு வழங்க்கப்பட்டுள்ளது.

 

2.எண்ணெய்வித்து, பயறு, எண்ணெய்பனை மற்றும் மக்காச்சோளம் பயிர்களுக்கான ஒருங்கிணைந்த திட்டத்தின் கீழ் மக்காச்சோளம்

 

எண்ணெய்வித்து பயிர்களுக்கு வழங்கப்படுவது போலவே சான்று விதை உற்பத்தி, சான்று விதை விநியோகம், பெருவிளக்கப்பண்ணை, ஒருங்கிணைந்த பயிர் பாதுகாப்பு செயல்விளக்கம், விவசாயிகள் பயிற்சி, நீர் பாய்ச்சும் குழாய் விநியோகம் மற்றும் விவசாயிகள் பயிற்சிக்கு நிதி உதவி வழங்கப்படுகிறது. இத்திட்டத்தின் கீழ் ரூ.6.309 இலட்சம் நிதி ஒப்பளிப்பு வழங்கப்பட்டுள்ளது.

 

3. ஒருங்கிணைந்த தானிய அபிவிருத்தி திட்டம்- அரிசி

 

நெல் பயிர்பரப்பு மற்றும் அரிசி உற்பத்தியை அதிகரிக்கும் பொருட்டு விவசாயிகளுக்கு கிலோவிற்கு ரூ.5 மானிய உதவியுடன் சான்று விதை விநியோகம் செய்யப்படுகிறது. இத்திட்டத்தின் கீழ் 200மெ.டன் நெல் சான்று விதை விநியோகித்திட ரூ.10இலட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

 

4. தீவிர பருத்தி பெருக்குத் திட்டம்

 

     பருத்தி சாகுபடி பரப்பு மற்றும் உற்பத்தியைப் பெருக்க விவசாயிகளை ஊக்குவிக்கும் விதமாக இத்திட்டத்தின் கீழ் சான்று விதை கொள்முதலுக்கு கிலோவிற்கு ரூ.15, சான்று விதை விநியோகத்திற்கு கிலோவிற்கு ரூ.20, உழவர் வயல்வெளிப் பள்ளி ஒன்றுக்கு ரூ.17000, உயிரியல் கட்டுப்பாடு காரணி விநியோகத்திற்கு ஹெக்டருக்கு ரூ.900 மற்றும் உற்பத்தி தொழில்நுட்ப செயல்விளக்கத்திற்கு ஏக்கருக்கு ரூ.2000 நிதி உதவி வழங்கப்படுகிறது. இத்திட்டத்திற்கு ரூ.3.052 இலட்சம் நிதி ஒப்பளிப்பு வழங்கப்பட்டுள்ளது.

 

5. விதை கிராமத் திட்டம்

 

விவசாயிகள் தங்களுக்குத் தேவையான தரமான விதைகளை தாங்களே உற்பத்தி செய்து, தமது மற்றும் தங்கள் பகுதியிலுள்ள பிற விவசாயிகளின் விதை பயன்பாட்டிற்கு உபயோகித்துக் கொள்ளும் நோக்கில் சான்று விதைகள் கீழ்கண்டவாறு மானிய உதவியுடன் விவசாயிகளுக்கு வழங்கப்படுகிறது.

 

வ.எண்

பயிர்

மானியம் ரூ (கிலோ)

1

நெல்

10

2.

சிறுதானியம்

20

3

பயறுவகைகள்

40

4

எண்ணெய்வித்துகள்

30

 

100 விவசாயிகளுக்கு விதை உற்பத்தி தொடா்பான பயிற்சி  வழங்கிட  பயிற்சிக்கு ரூ.15000 நிதிச் செலவினம் மேற்கொள்ளப்படுகிறது. இத்திட்டத்திற்கு ரூ.82.00 இலட்சம் நிதி ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது.

 

6. உற்பத்தியை மேம்படுத்த தென்னையில் ஒருங்கிணைந்த பண்ணையம்

 

  புதிய செயல்விளக்கத் திடல்கள் அமைக்க ஹெக்டருக்கு ரூ.17500/- மானியத்தில் சொட்டு நீா்ப்பாசனமும்  2-ம் ஆண்டு பராமரிப்புக்காக (இடு பொருட்கள் வழங்கிட) ஹெக்டருக்கு ரூ.17500/-ம் மானியம் வழங்கப்படுகிறது. இத்திட்டத்தின் கீழ் ரூ.6.65 இலட்சம் நிதி ஒப்பளிப்பு வழங்கப்பட்டுள்ளது.

 

7. தேசிய வேளாண்மை வளா்ச்சித் திட்டம்

 

1. திருந்திய நெல் சாகுபடி

நீா் மற்றும் இடுபொருட்களை அளவாக பயன்படுத்தி திருந்திய நெல் சாகுபடி முறையில் உற்பத்தியை அதிகரித்திட ஒரு ஹெக்டா் செயல்விளக்கத்திற்கு ரூ.3000 நிதி உதவி வழங்கப்படுகிறது. இத்திட்டத்திற்கு ரூ.18 இலட்சம் நிதி ஒப்பளிப்பு வழங்கப்பட்டுள்ளது.

 

2. துத்தநாக சல்பேட் விநியோகம்

துத்தநாகம் பற்றாக்குறையினால் நெற்பயிரில் மகசூல் இழப்பை தவிர்த்திட விவசாயிகளுக்கு 50% மானியத்தில் துத்தநாக சல்பேட் விநியோகிக்கப்படுகிறது. இத்திட்டத்தின் கீழ் 800ஹெக்டா் பரப்பிற்கு துத்தநாக சல்பேட் விநியோகித்திட ரூ.3.5 இலட்சம் நிதி ஒப்பளிப்பு வழங்கப்பட்டுள்ளது.

 

3. 2% டிஏபி இலை வழி உரமிடல்

பயறுவகைப் பயிர்களின் உற்பத்தியை பெருக்கிட (பூ உதிர்வதை தடுக்க திரட்சியான மணிகள் உருவாக) 2% டிஏபி கரைசல் தெளிக்க ஹெக்டருக்கு ரூ.250 வீதம் விவசாயிகளுக்கு மானியம் வழங்கப்படுகிறது. இத்திட்டத்தின் கீழ் 19453 ஹெக்டா் பரப்பில் 2% டிஏபி கரைசல் தெளிக்க ரூ.48.63 இலட்சம் நிதி ஒப்பளிப்பு வழங்கப்பட்டுள்ளது.

 

4. செயல்விளக்கம் மூலமாக துவரை சாகுபடியை   ஊக்குவித்தல்

  துவரை சாகுபடியை ஊக்குவிக்க ஒரு ஹெக்டார் செயல்விளக்கத்திற்கு ரூ.5000 மானியமாக வழங்கப்படுகிறது. இத்திட்டத்தின் கீழ் 24 செயல்விளக்கத்திடல்கள் அமைக்க ரூ.1.2 இலட்சம் நிதி ஒப்பளிப்பு வழங்கப்பட்டுள்ளது.

 

5. பயறு உற்பத்தி மற்றும் விநியோகத்திற்கு கூடுதல்      மானியம் மூலமாக பயறு உற்பத்தியை பெருக்குதல்

இத்திட்டத்தின் கீழ் மத்திய அரசு பயறு விதை உற்பத்திக்கு வழங்கும் கிலோவிற்கு ரூ.10 மானியத்திற்கு கூடுதலாக ரூ.15 சோ்த்து வழங்கப்படும். பயறு விதை விநி்யோகத்திற்கு வழங்கப்படும் ரூ.12 மானியத்திற்கு கூடுதலாக ரூ.8 சோ்த்து வழங்கப்படும்.

 

6. நிலக்கடலை பயிருக்கு ஜிப்சம் இடுதல்

இத்திட்டத்தின் கீழ் ஹெக்டருக்கு ரூ.750 மானியத்தில் விவசாயிகளுக்கு ஜிப்சம் வழங்கப்படுகிறது.

 

7. சிறுதானிய ஊக்குவிப்புத் திட்டம்  - கம்பு

  சிறுதானிய சாகுபடியை ஊக்குவிக்க 1000 ஹெக்டா் தொடா் சாகுபடி பரப்பைத் தோ்வு செய்து ஹெக்டருக்கு ரூ.3000 மானியத்தில் இடுபொருட்கள் வழங்கப்படுகிறது. இத்திட்டம் தூத்துக்குடி மாவட்டத்தில் விளாத்திகுளம் வட்டாரத்தில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

 

8. பயறு உற்பத்தி விரைவுத் திட்டம்

ஒருங்கிணைந்த உர நிர்வாகம் மற்றும் ஒருங்கிணைந்த பூச்சி நோய் நிர்வாகம் முறைகளை கடைபிடித்து 1000ஹெக்டா் தொடா் பரப்பில் ஹெக்டருக்கு ரூ.4800/- மானியத்தில்  பயறு செயல்விளக்கத் திடல்கள் அமைத்து பயறு உற்பத்தியைப் பெருக்குவதும் கிராம்ம் முழுவதுமே பயனடையச் செய்வதும் இத்திட்டத்தின் நோக்கமாகும். இத்திட்டம் தேசிய வேளாண்மை வளா்ச்சி திட்டத்தின் கீழ்  கயத்தார் வட்டாரத்திலும் தேசிய உணவு பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் புதூா் வட்டாரத்திலும் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

 

9. மானாவாரி வேளாண்மை மேம்பாட்டுத் திட்டம்

  பயறு அடிப்படையிலான பயிர்த் திட்டம் (பயறு+பருத்தி) நமது மாவட்டத்தில் ஓட்டப்பிடாரம் வட்டாரத்தில் செயல்படுத்தப்படுகிறது. இத்திட்டத்தின் கீழ் 500ஹெக்டா் தொடா்பரப்பில் இப்பயிர்களை சாகுபடி செய்வதற்கு ஹெக்டருக்கு ரூ.5000 மதிப்பிலான இடுபொருட்கள் வழங்கப்படுகிறது. மானாவாரிப் பகுதிகளில் பயிர் சாகுபடித்திறனை (Cropping Intensity) அதிகரிப்பதும் மகசூலைப் பெருக்குவதும் இத்திட்டத்தின் நோக்கம். மேலும் மண்புழு கழிவு உரத் தொட்டிகள் அமைக்க ரூ.30000க்கு மிகாமல் மானியம் வழங்கப்படுகிறது. பயறு மற்றும் எண்ணெய்வித்து விதை உற்பத்திக்கும் ஹெக்டருக்கு ரூ.25000 நிதி உதவி வழங்கப்படுகிறது.

 

8. தேசிய உணவு பாதுகாப்புத் திட்டம் பயறு

பயறு வகைகளின் உற்பத்தியை பெருக்கவும் மண் வளத்தை பாதுகாக்கவும் விவசாயிகளின் வருமானத்தைப் பெருக்கவும் இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இத்திட்டத்தின் கீழ் அடியில் கண்டவாறு விவசாயிகளுக்கு பல்வேறு இடுபொருட்களுக்கு மானியம் வழங்கப்படுகிறது.

 

வ.

எண்

இனம்

வழங்கப்படும் மானியம்

1.

ஆதார விதை உற்பத்தி

ரூ.1000 குவிண்டாலுக்கு

2

சான்று விதை உற்பத்தி

ரூ.1000 குவிண்டாலுக்கு

3

சான்று விதை விநியோகம்

ரூ.1200 குவிண்டாலுக்கு

4

ஜிப்சம் விநியோகம்

ரூ.750ஹெக்டருக்கு

 

5

நுண்ணூட்டஉரம் விநியோகம

ரூ.500 ஹெக்டருக்கு

6

உயிர் உரம் விநியோகம்

ரூ.100 ஹெக்டருக்கு

7

ஒருங்கிணைந்த பூச்சி நோய் நிர்வாகம்

ரூ.750 ஹெக்டருக்கு

8

பயிர்பாதுகாப்புமருந்துகள் விநியோகம்

ரூ.500 ஹெக்டருக்கு

9

தெளிப்பான் விநியோகம்

ரூ.3000 எண்

10

சுழற்கலப்பை விநியோகம்

ரூ.30000 எண்

11

பம்ப்செட்விநியோகம்

ரூ.10000 எண்

12

தெளிப்புநீா் பாசனக் கருவி விநியோகம்

ரூ.7500 ஹெக்டருக்கு

13

நீா்பாய்ச்சும் குழாய்

ரூ.15000 ஹெக்டருக்கு

14

விவசாயிகள் பயிற்சி

ரூ.17000 பயிற்சிக்கு

15

களைக்கொல்லி

ரூ.500 ஹெக்டருக்கு

16

விசை உழுவை விநியோகம்

ரூ.45000 எண்

17

மழைத்தூவாண் விநியோகம்

ரூ.10000 எண்

 

அமைப்பு வெளியீடு - மாவட்ட ஆட்சியர் தூத்துக்குடி
ஆக்கம் தேசிய தகவலியல் மையம், தூத்துக்குடி