திறன் மேம்பாட்டு பயிற்சிஇளைஞர்களுக்கான தொழில் திறன் பயிற்சி

 

வளர்ந்து வரும் பொருளாதார முன்னேற்றத்திற்கு ஏற்ப இளைஞர்களை தோ்வு செய்து தொழில் செய்வதற்கு தகுந்தவாறு தேவையான பயிற்சிகளை தொழில் பயிற்சி நிறுவனங்கள் மூலம் அளிப்பதாகும்.  மேலும் வளர்ந்து வரும் பொருளாதார முன்னேற்றத்திற்கு ஏற்றவாறு மனித வள மேம்பாட்டை உருவாக்குவதே இதன் முக்கிய குறிக்கோளாகும்.  வேலை வாய்ப்பு சந்தைக்கு ஏற்ப பயிற்சி நிறுவனங்களை தோ்வு செய்து இளைஞர்களுக்கு பயிற்சி அளித்தல் மற்றும் பயிற்சி முடிந்தவுடன் பயிற்சி பெற்றவர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கவும் இத்திட்டத்தின் மூலம் வழிவகை செய்யப்படுகிறது.

 

மேலும் இளைஞர் தொழில் திறன் பயிற்சி 2006-07 முதல் தொடர்ந்து வழங்கப்பட்டு வருகிறது.  கடந்த மூன்று ஆண்டுகளில் 1250 இளைஞர்களுக்கு தொழில் திறன் பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது.

 

பயிற்சி பிரிவுகள்

 1. கணிணி சார்ந்த பயிற்சிகள்
 2. கட்டுமானைப் பணிகளுக்கான பயிற்சி
 3. உணவு தயாரிப்பு மற்றும் மேலாண்மை பயிற்சி
 4. செவிலியர் பயிற்சி
 5. இலகு மற்றும் கனரக வாகன இயக்குதல் மற்றும் பராமரித்தல் பயிற்சி
 6. தீ பாதுகாப்பு மேலாண்மை
 7. தொழிற் பிரிவு பயிற்சிகள்
 8. அலுவலக மேலாண்மை பயிற்சி

 

தொழில் பயிற்சி நிறுவனங்கள்

 1. பி.எஸ்.டி.எஸ் தொழிற் பயிற்சி நிறுவனம், தூத்துக்குடி
 2. பாண்டியன் ஓட்டுநர் பயிற்சி பள்ளி, கோவில்பட்டி
 3. சாண்டி தொழிற் பயிற்சி நிறுவனம், தூத்துக்குடி
 4. அப்டெக் கணிணி பயிற்சி நிறுவனம், தூத்துக்குடி
 5. சி.எம்.டி.இ.எஸ். கணிணி பயிற்சி நிறுவனம், தூத்துக்குடி
 6. இந்தியன் இன்ஸ்ட்டியூட் ஆப் பாராமெடிக்கல் சயின்ஸ், தூத்துக்குடி
 7. கோலிகிராஸ் கோம் சயின்ஸ் கல்லூரி, தூத்துக்குடி
 8. வெஸ் கணிணி பயிற்சி நிறுவனம், தூத்துக்குடி
 9. ஆஸ்கார் உணவு மேலாண்மை பள்ளி, கோவில்பட்டி
 10. மைக்ரோபாயிண்ட் தொழிற் பயிற்சி பள்ளி, கோவில்பட்டி
 11. இன்ஸ்டடியூட் ஆப் பைர் ஆன் சேப்டி மேலாண்மை, தூத்துக்குடி
 12. ஐ.எப்.ஆர்.டி, மதுரை
 13. புனித அன்னை செவிலியர் பயிற்சி, தூத்துக்குடி

 

இளைஞர் தொழிற் திறன் பயிற்சி (அலகு)

 

வருடம்

குறியீடு

சாதனை

2008-2009

300

300

2009-2010

500

500

2010-2011

450

450

2011-2012

500

500

 

       
செலவினங்கள்                                      (இலட்சத்தில்)

 


வருடம்

நிதி ஒதுக்கீடு

செலவினம்

2008-2009

18.16

14.14

2009-2010

29.85

23.14

2010-2011

35.38

34.91

2011-2012

39.15

27.69

 

தொழில் மேம்பாட்டு பயிற்சி

 

வளர்ந்து வரும் பொருளாதார முன்னேற்றத்திற்கு ஏற்ப நிலையான வருமானத்தை ஈட்டுவதற்கு மகளிர் சுய உதவிக் குழு உறுப்பினர்களுக்கு சிறந்த பயிற்சி நிறுவனங்கள் மூலம் பயிற்சி வழங்கப்படுகிறது.  தொழிற் பயிற்சி நிறுவனங்கள் மாவட்டத்திற்குள்ளேயே இருக்க வேண்டும்.  35 வயது முதல் 60 வயது வரையிலான வறுமைக்கோட்டு பட்டியலுள்ள நகர்ப்புற சுய உதவிக் குழு உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது.   நமது மாவட்டத்தில் கடந்த மூன்று ஆண்டுகளாக மெது பொம்மை தயாரிப்பு, கடல் வாழ் உணவு தயாரிப்பு, தையல் பயிற்சி, மசாலா பொருட்கள் தயாரிப்பு, அழகு கலைப் பயிற்சி, எம்ராய்டரி பயிற்சி, தோல் கை பை தயாரிப்பு ஆகிய பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகிறது.  மேற்படி பயிற்சிகள் மூலம் ரூ.17.01 இலட்சம் மதிப்பீட்டில் 477 சுய உதவிக் குழு உறுப்பினர்கள் பயன் பெற்றுள்ளார்கள்.


அமைப்பு வெளியீடு - மாவட்ட ஆட்சியர் தூத்துக்குடி
ஆக்கம் தேசிய தகவலியல் மையம், தூத்துக்குடி