சுயஉதவி குழுசுய உதவிக் குழு - விளக்கம்

 

 ஒரே கிராமத்தில் வசிக்கும் ஒருமித்த கருத்துடைய 12 லிருந்து 20 ஏழை பெண்கள் உறுப்பினர்களாக சேர்ந்து, ஒருவருக்கு ஒருவர் உதவிச் செய்யும் மனப்பான்மையுடன் உருவாக்கப்படுவதே சுய உதவிக் குழு.

 

குழு உறுப்பினர்கள் பொதுவான பொறுப்புகள்

 1. விதிமுறைகளை கடைபிடித்தல்
 2. பயிற்சிகளில் கலந்து கொள்ளுதல்
 3. சேமிப்பு, சந்தா, கடன் அசல், வட்டி ஆகியவற்றை தவறாது செலுத்துதல்
 4. கிராம சபை கூட்டங்களில் பங்கேற்று கிராம முன்னேற்றத்திற்காக பாடுபடுதல்

சுய உதவிக் குழு பராமாரிக்கப்படவேண்டிய பதிவேடுகள்

 1. வருகைப் பதிவேடு
 2. குழு தீர்மானப் புத்தகம்
 3. சேமிப்பு பேரேடு
 4. கடன் பேரேடு
 5. ரொக்கப் பேரேடு
 6. பொதுப் பேரேடு
 7. தனிநபர் சேமிப்பு கணக்குப் புத்தகம்

குழு தரமதிப்பீடு

 1. பதிவேடு பராமரிப்பு
 2. குழுவின் செயல்பாடு இவற்றை ஆய்வு செய்து வெளிக்கடன் பெற, குழு தகுதியுடையதா என மதிப்பீடு செய்வதே குழு தர மதிப்பீடு ஆகும்.
 3. குழு ஆரம்பித்த 6 மாதத்திற்குப் பிறகு சுழல் நிதி பெற முதல் தர மதிப்பீடு செய்யப்படும்
 4. ஒரு வருடத்திற்கு பிறகு தொழில் கடன் பெற இரண்டாம் தர மதிப்பீடு செய்யப்படும்.

கடன் வசதிகள்

 1. குழு வங்கிக் கணக்கு தொடங்கிய 6 மாதங்கள் கழித்து முதல் தர மதிப்பீடு செய்யப்படும்
 2. தர மதிப்பீட்டின் அடிப்படையில் சுழல் நிதி (ஆர்.எப்) வழங்கப்படும்
 3. சுழல் நிதியைப் பயன்படுத்தும் விதத்தின் அடிப்படையில் இரண்டாம் தர மதிப்பீடு செய்யப்பட்டு, சுழல் நிதியை அதிகரித்தோ அல்லது தொழிற்கடனோ வழங்கப்படும்.

பயிற்சிகள்


பயிற்சிகள் தொண்டு நிறுவனப் பயிற்சியாளரால் நடத்தப்பட வேண்டும்.

 


வ.எண்

பயிற்சி

பகுதிகள்

பயிற்சி நாட்கள்

1

ஊக்குநர்கள், பிரதிநிதிகள் பயிற்சி

3

6 நாட்கள்

2

உறுப்பினார்கள் பயிற்சி

4

4 நாட்கள்

3

கூட்டமைப்பு பிரதிநிதிகள் பயிற்சி

4

4 நாட்கள்

4

தொழில் முனைவோர் பயிற்சி

7

7 நாட்கள்

 

சுய சார்பு தன்மை ( நிலைத்த தன்மை)

 

தொண்டு நிறுவனத்தை சார்ந்த நிலை நீங்கி, குழுக்கள் சொந்த காலில் நிற்க,  குழுவும் தொண்டு நிறுவனமும், மகளிர் திட்ட அலுவலகமும் இணைந்து செயல்பட்டு வருகிறது.


அமைப்பு வெளியீடு - மாவட்ட ஆட்சியர் தூத்துக்குடி
ஆக்கம் தேசிய தகவலியல் மையம், தூத்துக்குடி