சொர்ண கிராம சம்பூரண யோஐனா
பொன்விழா கிராம சுய வேலை வாய்ப்பு திட்டம்

 

பொன்விழா கிராம சுய வேலை வாய்ப்பு திட்டமானது வறுமையை ஒழிக்கும் முக்கிய நோக்கத்துடன் 1999 முதல் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.  வறுமையிலுள்ள குடும்பங்களின் நிலைத்த வாழ்வாதாரத்தினை ஏற்படுத்துவதே இத்திட்டத்தின் முக்கிய நோக்கமாகும்.  இத்திட்டத்தில் சுய உதவிக் குழுக்களுக்கான திறன் வளர்ப்பு பயிற்சி வங்கிக் கடன் அடிப்படை கட்டமைப்பு வசதிகள் மற்றும் சந்தைப்படுத்துதல் ஆகியவற்றிற்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. 

 

பொன்விழா கிராம சுய வேலை வாய்ப்பு திட்டத்தின் நிதி சுழல்நிதி,  பொருளாதாரக் கடன் மற்றும் தனி நபர் கடன் ஆகியவற்றிற்கு மானியமாக வழங்கப்படுகிறது.   இத்திட்டத்தின் கீழ் சுழல்நிதி மானியமாக ரூ.15000- பொருளாதாரக் கடன் மானியமாக நபர் ஒன்றுக்கு ரூ.10000- வீதம் அல்லது திட்ட மதிப்பீட்டில் 50 விழுக்காடு அல்லது ரூ.125000- இதில் எது குறைவோ அத்தொகையே மானியமாக வழங்கப்படும்.

 

நேரடி வங்கிக் கடன்

  1. நல்ல தரமான குழுக்களுக்கு சேமிப்பை அடிப்படையாகக் கொண்டு கடன் உதவியினை வங்கிகள் வழங்குகின்றன.
  2. இக்கடனுக்கு மானியம் கிடையாது
  3. நகரப்பகுதி, கிராமப் பகுதிகளைச் சார்ந்த அனைத்துக் குழுக்களுக்கும் இக்கடன் கிடைக்கும்.

சுழல்நிதி

  1. முதல் கட்டத்தரம் பிரித்தலில் தோ்வு பெறும் குழுக்களுக்கு சுழல்நிதி வழங்கப்படுகிறது
  2. ரூ.60,000- சுழல்நிதி வழங்கப்படுகிறது
  3. சுழல்நிதிக்கான அதிகபட்ச மானியம் ரூ.15,000- ஆகும்

பொருளாதாரக் கடன்

  1. இரண்டாம் கட்டத்தரம் பிரித்தலில் தோ்வு பெறும் குழுக்களுக்கு பொருளாதாரக் கடன் வழங்கப்படுகிறது
  2. எஸ்.ஜி.எஸ்.ஒய் திட்டத்தின் மூலம் மானியத்துடன் கூடிய தொழிற்கடன் வழங்கப்படுகிறது.
  3. ரூ.5,00,000- வரை குழுத் தொழில்கள் செய்வதற்காக வழங்கப்படுகிறது
  4. எஸ்.ஜி.எஸ்.ஒய் திட்டம் மூலம் குழுக்களுக்கு அதிகபட்ச மானியம் ரூ.1,25,000- ஆகும்.

அமைப்பு வெளியீடு - மாவட்ட ஆட்சியர் தூத்துக்குடி
ஆக்கம் தேசிய தகவலியல் மையம், தூத்துக்குடி