நவதிருப்பதி 

தூத்துக்குடி மாவட்டத்தில் 9விஷ்ணு கோவில்களிலும் அருகாமையில் அமைந்துள்ளனர். இக்கோவிலில் வழிபடுவதின் மூலம் நவக்கிரங்களால் எற்படுகின்ற தீமையினின்று விடுதலைக் கிடைக்கும் இக்கோவில் பண்டைக்கால கலைநயத்துடன் கட்டப்பட்டுள்ளது. இக்கோவில்களில் கீழ்கண்டபடி தரிசனம் மேற்கொள்ளலாம் . 

 

வ.எண்.

பெயர்

தூரம் (கி.மீ.)

கடவுளின் பெயர்

தரிசன நேரம்

1.

ஸ்ரீவைகுண்டம்

தூத்துக்குடியிலிருந்து 40 கி.மீ.

சுவாமி கள்ளபிரான்

6.12. மு.ப.(ம)
4.08பி.ப.

2.

நத்தம்

ஸ்ரீவைகுண்டத்திலிருந்து 1 கி.மீ.

சுவாமி விஜயசாணார்

9.00 மு.ப. – 6.00 பி.ப.

3.

திருபுளியங்குடி

ஸ்ரீவைகுண்டத்திலிருந்து 2 கி.மீ.

சுவாமி
காசினிவெந்தபெருமாள்

9.00 மு.ப. –
6.00 பி.ப.

4.

பெருங்குளம்

ஸ்ரீவைகுண்டத்திலிருந்து 8 கி.மீ.

சுவாமி மாயக்கூத்தன்

7.30 – 12.00 மு.ப. – 5.00 – 7.30 பி.ப.

5.

இரட்டை
திருப்பதி-1

திருவைகுண்டத்திலிருந்து
10 கி.மீ.

சுவாமி தேவர்பிரான்

8.30 மு.ப.- 5.00 பி.ப.

6.

இரட்டை
திருப்பதி-2

திருவைகுண்டத்திலிருந்து
10 கி.மீ.

சுவாமி செந்தாமரைக்கண்ணன்

8.30 மு.ப. – 5.00 பி.ப.

7.

தென்திருப்பேரை

ஸ்ரீவைகுண்டத்திலிருந்து 12 கி.மீ.

சுவாமி
மகரநெடுங்குளை
காதர்

7.30 – 12.00 மு.ப. – 5.00 7.30பி.ப.

8.

திருக்களுர்

ஸ்ரீவைகுண்டத்திலிருந்து
12.கி.மீ.

சுவாமி
வைத்தியமந்தி

7.30 – 12.00 மு.ப. – 5.00 7.00 பி.ப.

9.

ஆழ்வார்திருநகரி

ஸ்ரீவைகுண்டத்திலிருந்து
12.கி.மீ.

சுவாமி
ஆதிபிரான்

7.30 – 12.00
மு.ப. – 5.00 8.00 பி.ப.

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 


               

நவதிருத்தலங்கள் அனைத்தும் திருச்செந்தூர் – திருநெல்வேலி சாலையில் அமைந்துள்ளன. 9 திருத்தலங்களின் ஆழ்வார் திருநகரி மற்றும் ஸ்ரீவைகுண்டம் ஆகியவை திருச்செந்தூர் மற்றும் திருநெல்வேலி சாலையின் இடையில் அமைந்துள்ளது. இதர ஏழு திருத்தலங்களும் சாலைக்கு அருகாமையில் அமைந்துள்ளது. திருச்செந்தூர் முருக பெருமானை தரிசிக்க வரும் பக்தர்கள் தாமிரபரணி ஆற்றங்கரையில் அமைந்துள்ள ஆழ்வார்திருநகரி மற்றும் ஸ்ரீவைகுண்டம் திருத்தலங்களை கண்டு தரிசிப்பார்கள். ஒவ்வொரு வருடமும் செப்டம்பர் திங்களில் பத்து நாட்கள் தொடர்ச்சியாக திருவிழா கொண்டாடப்படுகிறது. நவதிருத்தலங்களை மக்கள் தரிசிப்பதற்கு ஏதுவாக செப்டம்பர் மற்றும் அக்டோபர் திங்களில் அனைத்து சனிக்கிழமைகளிலும் திருநெல்வேலி புதிய பேருந்து நிலையித்திலிருந்து நவதிருப்பதி தலங்களுக்கு தமிழ்நாடு போக்குவரத்துக் கழகத்தால் சிறப்புப் பேருந்து இயக்கப்படுகிறது. முன்பதிவு வசதிகளும் செய்யப்பட்டுள்ளது.

அமைப்பு வெளியீடு - மாவட்ட ஆட்சியர் தூத்துக்குடி
ஆக்கம் தேசிய தகவலியல் மையம், தூத்துக்குடி