பின்னால் செல்லவும்

மீன் ஊறுகாய்1

ஊராட்சி ஒன்றியம்

: ஓட்டப்பிடாரம்

2

ஊராட்சி

: கீழ அரசடி

3.

சுய உதவிக் குழு

: அன்னை தெரஸா

4.

தொழில்

: மீன் ஊறுகாய் தயாரித்தல்

 

தூத்துக்குடி மாவட்டத்தில் வெள்ளப்பட்டி கிராமத்தில் வறுமையிலிருந்து மீள்வதற்கு அன்னை தெரஸா மகளிர் சுய உதவிக் குழு உறுப்பினர்கள் எடுக்கப்பட்ட முயற்சியே மீன் ஊறுகாய் தயாரித்தல் தொழில் ஆகும்.

 

                                              

 

 

அன்னை தெரஸா மீன் ஊறுகாய் தயாரிப்பு கூடம் எம்.எஸ் சுவாமிநாதன் அறக்கட்டளை மூலம் ரூ.20.00 இலட்சம் செலவில் அனைத்து கட்டமைப்பு வசதிகளுடன் ஆரம்பிக்கப்பட்து.   மேலும் ரூ.3.49 இலட்சம் செலவில் மீன் பதப்படுத்தும் இயந்திரம் மற்றும் தேவையான உபகரணங்கள் வாங்கப்பட்டது.  உறுப்பினர்களுக்கு மீன் ஊறுகாய், இறால் ஊறுகாய், சங்கு சிப்ஸ் தயாரித்தல் தொடர்பான பயிற்சிகள் வழங்கப்பட்டது.  அதனடிப்படையில் மீன் மற்றும் இறால் ஊறுகாய் வகைகள் நாள் ஒன்றுக்கு 50 முதல் 150 கிலோ வரை தயாரிக்கப்பட்டு வருகிறது.

 

                                           

 

 

 

                       

 

 

 

 

 

 

சுகாதார முறைப்படி தயார் செய்யப்படும் மீன் வகை ஊறுகாய் தயாரிப்புகள் மொத்தமாகவும், சில்லரையாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.  மேலும் தனியார் நிறுவனத்துடனான ஒப்பந்த அடிப்படையில் மீன் வகை ஊறுகாய்கள் விற்பனைக்கு தொடர்ந்து வழங்கப்பட்டு வருகிறது.  இதனால் உறுப்பினர்களுக்கான வருமானம் உயர்ந்துள்ளது.


அமைப்பு வெளியீடு - மாவட்ட ஆட்சியர் தூத்துக்குடி
ஆக்கம் தேசிய தகவலியல் மையம், தூத்துக்குடி