மகளிர் திட்டம்1989 ஆம் ஆண்டு தமிழக அரசால் அறிவிக்கப்பட்டு பன்னாட்டு வளர்ச்சி நிதி (ஐபார்டு) உதவியுடன் 8 மாவட்டங்களில் 75 ஒன்றியங்களில் செயலாக்கப்பட்ட திட்டத்தின் மூலம் சமூக பொருளாதார நிலையில் மகளிர் மேம்பாடு அடைந்தனர்.  பெண்கள் நிலை உயர்ந்தால் தான் குடும்பம், கிராமம் அதன் மூலம் மாநிலம் நாடு ஆகியவை முன்னேறும்.  இதன் அடிப்படையில்தான் தமிழக அரசு மகளிர் மேம்பாட்டுத் திட்டத்தைத் துவக்கியது.

 

இத்திட்டம் படிப்படியாக அனைத்து மாவட்டங்களுக்கும், மாநாகராட்சி, நகராட்சி மற்றும் பேரூராட்சி மற்றும் பகுதிகளுக்கும் விரிவுபடுத்தப்பட்டு்ள்ளது. தமிழ்நாட்டிலுள்ள கிராமப்புற ஏழைப் பெண்களை, சுய உதவிக் குழுக்கள் மூலம் வலுப்படுத்தி சமூக பொருளாதார மேம்பாடும், சுய சார்பு தன்மையும் அடையச் செய்வதே மகளிர் மேம்பாட்டு திட்ட இலட்சியம்

 

பெண்களின் நிலையில் முன்னேற்றங்கள் இருந்தாலும், ஆண்களுடன் ஒப்பிடும் போது சமூக பொருளாதார அடிப்படையில் பின் தங்கியே இருக்கிறார்கள்.  பெண் வளர்ச்சியடைந்தால்தான் குடும்பங்களும், கிராமங்களும், அதன் மூலம் மாநிலமும் நாடும் முன்னேறும்.  இதன் அடிப்படையில் தமிழக அரசு மகளிர் மேம்பாட்டிற்காக மகளிர் மேம்பாட்டுத் திட்டம்” என்ற திட்டத்தை அறிவித்தது.  இத்திட்டம் மகளிர் வாழ்க்கையில் நல்ல முன்னேற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

 

மகளிர் திட்டத்தின் முக்கிய நோக்கங்கள்

 

  1. திறமைகளை வளர்த்தல்
  2. பொருளாதார மேம்பாடு அடைதல்
  3. சமூக மேம்பாடு அடைதல்

 

   
அமைப்பு வெளியீடு - மாவட்ட ஆட்சியர் தூத்துக்குடி
ஆக்கம் தேசிய தகவலியல் மையம், தூத்துக்குடி